பரஸ்சால பி. பொன்னம்மாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாறசாலை பி. பொன்னம்மாள்
Parassala B. Ponnammal.jpg
பின்னணித் தகவல்கள்
பிறப்பு1924
பாறசாலை
பிறப்பிடம்திருவனந்தபுரம்
இசை வடிவங்கள்இந்தியப் பாரம்பரிய இசை
தொழில்(கள்)பாரம்பரிய குரலிசைப் பாடகி

பரஸ்சால பி. பொன்னம்மாள் (பிறப்பு 1924) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சோ்ந்த கர்நாடக இசைக்கலைஞர் ஆவார். 2006 ஆம்ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று, திருவனந்தபுரத்தில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் அவர் பாடினார், கேரளாவில் உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின் புகழ்பெற்ற நவராத்திரி கொண்டாட்டங்களில் பெண்கள் பிரவேசித்தலையோ அல்லது கலந்துகொள்வதையோ தடைசெய்த 300 ஆண்டுகால பாரம்பரியத்தை உடைத்தெறிந்தார். திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் இளவரசர் ராம வர்மா அவர்களால் இது சாத்தியமானது. [1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பொன்னம்மாள் கேரள ஐயர் குடும்பத்தில் மகாதேவா ஐயர் மற்றும் பகவதி அம்மாள் ஆகியோருக்கு 1924 இல் இந்திய மாநிலமான கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பரஸ்சால என்ற ஊரில் பிறந்தார்.

பொன்னம்மாள் தான் ஒரு குழந்தையாக அருந்த போதே கர்நாடக இசையை கற்கத் தொடங்கினார். 1940 களின் முற்பகுதியில் திருவனந்தபுரத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சுவாதி திருநாள் இசைக் கல்லூரியில் சேர்ந்த முதல் பெண் மாணவி பொன்னம்மாள் ஆவார். அங்கு "கான பூஷனம்" மற்றும் "கான பிரவீணா" படிப்புகளில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றார்.

பொன்னம்மாள் பல கர்நாடக சங்கீத மேதைகள் மற்றும் பாடகர்களிடமிருந்து கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டார். பாபனாசம் சிவன், அரிகேசநல்லூர் முத்தையா பகவதர் மற்றும் செம்மங்குடி சீனிவாச ஐயர் ஆகியோர் அவரது ஆசிரியர்களில் சிலர். [2]

தொழில்[தொகு]

திருவனந்தபுரத்தில் உள்ள காட்டன் ஹில் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்த பொன்னம்மாள் இசை ஆசிரியராக தனது இசைத் தொழிலைத் தொடங்கினார். பின்னர் திருவனந்தபுரத்தில் உள்ள சுவாதி திருநாள் இசைக் கல்லூரியில் கற்பித்தல் பீடத்தின் முதல் பெண் உறுப்பினரானார். [3] அவர் திருப்பூணித்துறையில் அமைந்துள்ள ராதா லெட்சுமி விலாசம் இசை மற்றும் நுண்கலைகள் கல்லூரியின் தலைமை தாங்கும் முதல் பெண் தலைமை ஆசிரியரானார் [4]

அவர் குருவாயூர் பூரேச சுப்ரபதம், திரிசிவபுரேசா சுப்ரபாதம், உத்சவ பிரபந்தம், நவராத்திரி கிரித்தி, மீனாம்பிகா ஸ்தோத்ரம் போன்ற இசை நிகழ்ச்சிகளில் ஐரயம்மன் தம்பி மற்றும் திரு. கே.சி. கேசவ பிள்ளை ஆகியோருடன் இணைந்து பாடினார். [5]

பொன்னம்மாள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல்வேறு இசைக் கச்சோிகளை நிகழ்த்தியுள்ளார். [6]

அங்கீகாரம்[தொகு]

பொன்னமாள் தனது இசைப் பயனத்தில் பல்வேறு விருதுகள் மற்றும் கௌரவங்களைப் பெற்றுள்ளார். இவரது இசை சாதனைகளுக்காக 2017 ஆம் ஆண்டு புது தில்லியில் நடைபெற்ற விழாவில் நாட்டின் நான்காவது மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை இந்திய அரசாங்கம் வழங்கி பெருமைப்படுத்தி உள்ளது.[7]. 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி பொன்னமாளுக்கு சென்னையைச் சோ்ந்த நுண்கலை மன்றத்தால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. [8] இது தவிர

2016 ஆம் ஆண்டு எம்.ஜி.ராதாகிருஷ்ணன் விருது [9] 2012 ஆம் ஆண்டு சங்க பிரபாகர விருதும் 2009 ஆம் ஆண்டு விநாயகர் சர்மா கல்வி மற்றும் தொண்டு சங்கத்தால் நிறுவப்பட்ட அமைப்பால் எஸ். கணேஷா சர்மா விருதும் 2009 ஆம் ஆண்டு இசை நாடக் அகாடமி விருதும் 2009 ஆம் ஆண்டு சுவாதி சங்க புராஸ்கரம் விருதும் [10] 2009 ஆம் ஆண்டு ஸ்ரீ குருவாயூரப்பன் செம்பாய் புராஸ்கரம் விருதும் [11] இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க சீடர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]