என். இராஜம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
என். இராஜம்
பிறப்பு1938
சென்னை

என்.ராஜம் (N. Rajam) (பிறப்பு: 1938) இவர் இந்துஸ்தானிய பாரம்பரிய இசையை நிகழ்த்தும் இந்திய வயலின் கலைஞராவார். பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் இசை பேராசிரியராக இருந்த இவர், இறுதியில் துறைத் தலைவராகவும், பல்கலைக்கழகத்தின் நிகழ்த்துக் கலைகளின் கலை பீடத்தின் தலைவராகவும் ஆனார்.

இந்தியாவின் இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அகாதடமியான சங்கீத நாடக அகாதமி, இவருக்கு சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் என்ற நடிப்பு கலைகளில் மிக உயர்ந்த கௌரவம் வழங்கியது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பயிற்சி[தொகு]

என்.ராஜம் 1938 இல் சென்னையில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை, வித்வான் ஏ. நாராயண ஐயர் கருநாடக இசையின் நன்கு அறியப்பட்டவர். [1] இவரது சகோதரர் டி.என்.கிருட்டிணனும் புகழ் பெற்ற வயலின் கலைஞர் ஆவார். ராஜம் தனது தந்தையின் கீழ் கர்நாடக இசையில் தனது ஆரம்ப பயிற்சியைத் தொடங்கினார். பின்னர், இவர் முசிறி சுப்பிரமணிய ஐயரின் கீழ் பயிற்சியினைத் தொடர்ந்தார். மேலும், பாடகர் ஓம்கார்நாத் தாக்கூரிடமிருந்து இராக வளர்ச்சியைக் கற்றுக்கொண்டார்.

இவருக்கு ஒன்பது வயதாகும்போது, ​கச்சேரிகள் மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தத் தொடங்கினார். இவருக்கு 13 வயதாக இருந்தபோது பாரத ரத்னா ம. ச. சுப்புலட்சுமி அவர்களுடன் சுற்றுப்பயணம் செல்ல ஒரு வாய்ப்பும் கிடைத்தது. [2] ராஜம் இந்திய அரசிடமிருந்து பத்மசிறீ மற்றும் பத்ம பூசண் என்ற மதிப்புமிக்க பட்டங்களை பெற்றார். ராஜம் மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார்.

நிகழ்த்தும் தொழில்[தொகு]

இவரது தந்தை ஏ.நாராயண ஐயரின் வழிகாட்டுதலின் கீழ், ராஜம் கயாகி ஆங் (குரல் நடை) என்பதை உருவாக்கினார். ராஜம் உலகம் முழுவதும் மற்றும் இந்தியா முழுவதும் ஏராளமான இடங்களில் தனது இசை நிகச்சிகளை நிகழ்த்தியுள்ளார். ராஜம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நிகழ்த்து கலை பீடத்தில் இசை பேராசிரியராக இருந்தார். இவர் இப்பல்கலைகழகத்தின் துறைத் தலைவராகவும், கல்லூரியின் தலைவராகவும் இருந்துள்ளார்.

முனைவர் என் ராஜம்,புனேவில் 2015 ஆம் ஆண்டில், தனது மகள் சங்கீதா சங்கர் மற்றும் பேத்திகள் ராகினி சங்கர் மற்றும் நந்தினி சங்கர் ஆகியோடுடன் சேர்ந்து 500-க்கும் மேற்பட்ட வலுவான கூட்டத்தில் ஒரு இசை நிகழ்ச்சியினை நிகழ்த்தினார். [3]

மாணவர்கள்[தொகு]

இவர் தனது மகள் சங்கீதா சங்கர், இவரது பேத்திகள் ராகினி சங்கர் மற்றும் நந்தினி சங்கர், தனது மருமகள் கலா ராம்நாத், சூப்பர் 30 இன் பிரணவ் குமார் மற்றும் வி. பாலாஜி ஆகியோருக்குப் பயிற்சி அளித்தார்.

விருதுகள்[தொகு]

1990இல் இவருக்கு சங்கீத நாடக அகாதமி விருது, வழங்கப்பட்டது. [4] 1984ஆம் ஆண்டு இந்திய அரசு இவரது இசைப் பணியைப் பாராட்டி இவருக்கு பத்மஸ்ரீ விருதினை வழங்கியது. [5] 2004ஆம் ஆண்டு இந்திய அரசு இவரது இசைப் பணியைப் பாராட்டி இவருக்கு பத்ம பூசண் விருதினை வழங்கியது. 2004இல் புட்டராஜா சன்மானம் பெற்றார். [6] இந்தியாவின் புனேவிலுள்ள கலை மற்றும் இசை அறக்கட்டளை வழங்கிய புனே பண்டிட் விருது இவருக்கு கிடைத்தது. 2012இல் சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் (அகாதமி ரத்னா) என்ற கௌரவம் வழங்கப்பட்டது. [7] 2018இல் டானா ரிரி விருது வழங்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._இராஜம்&oldid=2958533" இருந்து மீள்விக்கப்பட்டது