ஜெய்ராம் ரமேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெய்ராம் ரமேஷ்
2009 குருகிராமில் ஜெய்ராம்
மாநிலங்களவை உறுப்பினர்[1]
பதவியில் உள்ளார்
பதவியில்
சூலை1, 2016
முன்னையவர்ஆயனூர் மஞ்சுநாத், பிஜேபி
தொகுதிகருநாடகம்
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம்
பதவியில்
சூலை 13, 2011 – மே 26, 2014
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்விலாஸ்ராவ் தேஷ்முக்
பின்னவர்கோபிநாத் முண்டே
சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (இந்தியா)
பதவியில்
மே,2009 – சூலை 12, 2011
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்மன்மோகன் சிங்
பின்னவர்ஜெயந்தி நடராஜன்
ஆந்திரப் பிரதேசத்திற்காக இந்திய நாடாளுமன்றம் (மாநிலங்களவை)
பதவியில்
சூன்,2004 – சூன் 21, 2016
தொகுதிஆதிலாபாத் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 ஏப்ரல் 1954 (1954-04-09) (அகவை 69)
சிக்மகளூர், மைசூர் மாநிலம், இந்தியா
(now in கருநாடகம், இந்தியா)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்புதுதில்லி
முன்னாள் கல்லூரிஇந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை (தொழில்நுட்பவியல் இளையர்)
கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகம் (M.S.)
மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்
வேலைஅரசியல்வாதி
As of சனவரி, 25, 2007
மூலம்: [1]

ஜெய்ராம் ரமேஷ் (Jairam Ramesh பிறப்பு 9 ஏப்ரல் 1954) இந்திய தேசிய காங்கிரஸைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். மாநிலங்களவையில் கர்நாடக மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராவார். சூலை 2011இல், ஜெய்ராம் இந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவையில் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் அமைச்சராக (கூடுதல் பொறுப்பு) நியமிக்கப்பட்டார். இருப்பினும், அக்டோபர் 2012 இல் நடந்த அமைச்சரவை மாற்றத்தில்,குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் இலாகாவிலிருந்து விலக்கப்பட்டார். இதற்கு முன்பு மே 2009 முதல் சூலை 2011 வரை சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சராக இருந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஜெய்ராம் ரமேஷ் 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 9இல் இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள சிக்மகளூரில் பிறந்தார். இவரது தந்தை சி. கே. ரமேஷ், தாயார் ஸ்ரீதேவி ரமேஷ் ஆவர். இவரது தந்தை மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் கட்டடப் பொறியியல் துறைப் பேராசிரியராக இருந்தார். [2] தன்னை பௌத்த மதத்தை கடைபிடிக்கும் இந்துவாக கருதுகிறார் மற்றும் தன்னை ஒரு 'ஹிந்த்-புத்' என்று அழைக்கிறார்.

சனவரி 26, 1981 இல் கே. ஆர். ஜெயஸ்ரீயை மணந்தார்.தற்போது லோதி தோட்டங்கள் , ராஜேஷ் பைலட் மார்க், புது தில்லியில் வசிக்கிறார். சூலை 2016 இல் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்படும் வரை, தெலுங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள கைரதாபாத்தில் வசித்தார். இவரது மனைவி 2019 ஆண்டின் ஆரம்பத்தில் இறந்தார்.[3]

சிறுவயதிலிருந்தே ஜெய்ராம் ஜவஹர்லால் நேருவால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். நேருவின் நவீன வாழ்க்கை அணுகுமுறை, பாரம்பரிய சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வருவது, மதம், ஆண்கள் மற்றும் குடிமை விடயங்களில் அவரது தாராளவாத, மனிதநேய, பகுத்தறிவு அணுகுமுறை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார். [4] ரவீந்திரநாத் தாகூரின் கருத்துக்களையும் ஆழமாகப் படித்திருக்கிறார். [4] [5]

கல்வி[தொகு]

ஜெய்ராம் 1961-1963 இல் ராஞ்சியில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயின்றார். பவுல் சாமுவேல்சனின் (1970 இல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர்) மக்கள் தொகை மற்றும் வளர்ச்சி பற்றிய கருத்துக்கள் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கையின் பெரிய பிரச்சினைகளைப் பற்றி இவரைச் சிந்திக்க வைத்தது. மேலும் இவருக்கு 17 வயதாக இருந்தபோது, 1971 இல், குன்னர் மிர்டலின் (1974 இல் நோபல் பரிசை வென்ற சுவீடியப் பொருளாதார நிபுணர்) ஆரம்பகால புத்தகங்களில் ஒன்றான ஏசியன் டிராமாவைப் படித்து அவருக்கு கடிதம் எழுதினார். மிர்டால்,தொடர்பில் இருங்கள் என்று இவருக்குப் பதில் அளித்தார். இந்தியாவின் வளர்ச்சித் திட்டமிடல் பற்றிய ஜெயராமின் புரிதலில் ஆசிய ஏசியன் டிராமாவின் தாக்கம் இருந்தது. [6]

ஜெய்ராம் 1975 இல் இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பையில் இயந்திரவியல் பொறியியலில்தொழில்நுட்பவியல் இளையர் பட்டம் பெற்றார் . 1975-77 க்கு இடையில் கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தின் எய்ன்ஸ் கல்லூரியில் பொதுக் கொள்கை மற்றும் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1977-78 இல், மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பைத் தொடங்கினார், அங்கு புதிதாக நிறுவப்பட்ட இடைநிலை தொழில்நுட்பக் கொள்கை திட்டத்தின் ஒரு பகுதியாக தொழில்நுட்பக் கொள்கை, பொருளாதாரம், பொறியியல் மற்றும் மேலாண்மை ஆகியவற்றைப் படிக்கத் திட்டமிட்டார். [7] குடும்பத் தேவைகள் காரணமாக இந்தியாவுக்குத் திரும்ப வேண்டியதால் அந்தத் திட்டம் முழுமையடையாமல் இருந்தது.

அரசியல்[தொகு]

1978 இல், ஜெய்ராம் ஒரு குறுகிய காலப் பணிக்காக உலக வங்கியில் சேர்ந்தார். டிசம்பர்,1979 இல் இந்தியா திரும்பினார் மற்றும் தொழில்துறை செலவுகள் மற்றும் விலைகள் பணியகத்தில் பொருளாதார நிபுணர் லோவ்ராஜ் குமாரிடம் உதவியாளராகப் பணியாற்றினார்.1983 முதல் 1985 வரை ஆற்றல் ஆலோசனைக் குழுவில் சிறப்புப் பணி அதிகாரியாக இருந்தார். பின்னர் திட்டக் குழுவில் ( ஆபித் உசேனின் ஆலோசகர் ), தொழில்துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசின் பிற பொருளாதாரத் துறைகளில் பணியாற்றினார். [8]

1990 ஆம் ஆண்டில், வி.பி.சிங் அரசாங்கத்தின் "சிறப்புப் பணியில்" அதிகாரியாகப் பணியாற்றினார். 1990இல் இந்தியாவின் சர்வதேச வர்த்தக முகமைகளை மறுசீரமைத்தார். 1991 ஆம் ஆண்டு நரசிம்மராவ் நிர்வாகத்தில் மன்மோகன் சிங்கின் நிதியமைச்சகத்தில் பணியாற்றினார். [9]

2000-2002 வரை, ஜெய்ராம் துணைத் தலைவராகவும், மாநில திட்ட வாரியம், கர்நாடக அரசு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் பொருளாதார ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றினார். மத்திய மின் அமைச்சகத்தின் முக்கிய நபர்கள் குழு மற்றும் பிற முக்கிய அரசாங்க குழுக்களிலும் பணியாற்றினார். [10]

சான்றுகள்[தொகு]

  1. "Nirmala Sitharaman Wins Rajya Sabha Seat From Karnataka, Congress Gets 3". NDTV.com.
  2. "The five battles that defined Jairam Ramesh". Firstpost. 15 June 2011.
  3. "WebPage of Shri Jairam Ramesh". Members of Rajya Sabha. New Delhi: Rajya Sabha Secretariat. 2009. பார்க்கப்பட்ட நாள் 28 December 2009.
  4. 4.0 4.1 Sughosh India (10 October 2012). "Jairam Ramesh on Mahatma Gandhi". Quotes on Mahatma Gandhi. Kota: Sughosh India. Archived from the original on 8 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 10 October 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unfit URL (link)
  5. Janaki Lenin (8 August 2011). "In politics, 80% is downhill, 20% is upswing: Jairam Ramesh". Jairam Ramesh Interview – Part II. New Delhi: First Post. பார்க்கப்பட்ட நாள் 8 August 2011.
  6. Janaki Lenin (8 August 2011). "In politics, 80% is downhill, 20% is upswing: Jairam Ramesh". Jairam Ramesh Interview – Part II. New Delhi: First Post. பார்க்கப்பட்ட நாள் 8 August 2011.
  7. "WebPage of Shri Jairam Ramesh". Members of Rajya Sabha. New Delhi: Rajya Sabha Secretariat. 2009. பார்க்கப்பட்ட நாள் 28 December 2009.
  8. IIT Bombay Heritage Find & IIT Bombay Alumni Association (2009). "NEWS → CURRENT → JAIRAM RAMESH IN UPA MINISTRY". Alumni Directory. Indian Institute of Technology – Bombay. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2022-10-31.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  9. "WebPage of Shri Jairam Ramesh". Members of Rajya Sabha. New Delhi: Rajya Sabha Secretariat. 2009. பார்க்கப்பட்ட நாள் 28 December 2009.
  10. "WebPage of Shri Jairam Ramesh". Members of Rajya Sabha. New Delhi: Rajya Sabha Secretariat. 2009. பார்க்கப்பட்ட நாள் 28 December 2009.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்ராம்_ரமேஷ்&oldid=3792270" இலிருந்து மீள்விக்கப்பட்டது