ஜென்டிங்க் பறக்கும் அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜென்டிங்க் பறக்கும் அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கைலோபீட்சு
இனம்:
கை. பிளாட்டியூரசு
இருசொற் பெயரீடு
கைலோபீட்சு பிளாட்டியூரசு
(ஜென்டிக், 1890)[1]

ஜென்டிக் பறக்கும் அணில் (Jentink's flying Squirrel)(கைலோபீட்சு பிளாட்டியூரசு) என்பது இந்தோனேசியா மற்றும் மலேசியாவைத் தாயகமாகக் கொண்ட அணில் சிற்றினமாகும். இவை இரவாடுதல் வகையின. அனைத்துண்ணிகள் ஆகும். இதன் சராசரி உடல் நிறை 131.27 மி.மீ. ஆகும்.[2] தோற்றத்தில் அம்பு வால் பறக்கும் அணில் போன்றது. ஆனால் சாம்பல் நிற கன்னங்கள் மற்றும் வாலின் வெளிறிய அடிப்பகுதியினால் வேறுபடுகிறது. இதன் பின்புறமும் சறுக்கும் சவ்வின் மேல் பகுதியிலும் முடிகள் மிகவும் குறுகியதாகவும், கறுப்பு நிறமாகவும், கசுகொட்டை நிறமுடையதாகவும் இருக்கும். இதன் கன்னம், மார்பு மற்றும் முன்கால்களின் கீழ்ப்பகுதியில் உள்ள முடிகள் தூய வெண்மையாகவும், வயிறு மற்றும் பின் கால்களின் அடிப்பகுதி வெள்ளை முனைகளுடன் கருப்பு நிறமாகவும் இருக்கும். இந்த சிற்றினம் செங்கன்ன பறக்கும் அணில் போன்றது ஆனால் சிறியது.[3]

வாழிடம்[தொகு]

ஜென்டிக் பறக்கும் அணில் தாய்லாந்தின் தென்-பெரும்பாலான மாகாணங்களில் (தெருடாவ் தீவு உட்பட), மலாய் தீபகற்பம், போர்னியோ (சபா மற்றும் சரவாக்கிற்குள்) மற்றும் புங்குரான் தீவு (நடுனா தீவுகள்) மற்றும் சுமத்ரா உட்பட இந்தோனேசியாவில் காணப்படுகிறது.

இதன் வாழிவிடம் பகுதி வெட்டப்பட்ட முதன்மைக் காடுகளாகவும் இரண்டாம் நிலைக் காடாகவும் உள்ளன. இது சில நேரங்களில் பழங்கள் மற்றும் ரப்பர் தோட்டங்களுக்கு அருகில் காணப்படுகிறது.[3]

உணவு[தொகு]

விதைகள், பழங்கள், இலைகள் மற்றும் பூச்சிகள் ஜென்டிக் பறக்கும் அணிலின் உணவாகும்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Duckworth, J.W.; Hedges, S. (2008). "Hylopetes platyurus". The IUCN Red List of Threatened Species (IUCN) 2008: e.T136262A4266675. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T136262A4266675.en. http://www.iucnredlist.org/details/136262/0. பார்த்த நாள்: 24 December 2017. 
  2. (n.d) Hylopetes platyurus (Jentink 1890) Encyclopedia of Life. https://eol.org/pages/4466164/data Retrieved July 13, 2021
  3. 3.0 3.1 World, Grey-cheeked Flying Squirrel, Hylopetes platyurus, Gliding Mammals of the. "Grey-cheeked Flying Squirrel / Hylopetes platyurus". www.myym.ru (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)