ஜான்பூர் சுல்தானகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான்பூர் சுல்தானகம்
(ஷார்கி வம்சம்)
سلطنت جونپور
1394–1479
ஜான்பூர் சுல்தானகத்தின் ஷம்ஸ் அல்-தின் இப்ராகிம் ஷாவின் நாணயம், 1438 தேதியிட்டது. of ஜான்பூர் சுல்தானகம்
ஜான்பூர் சுல்தானகத்தின் ஷம்ஸ் அல்-தின் இப்ராகிம் ஷாவின் நாணயம், 1438 தேதியிட்டது.
சுமார் 1475 இல், அண்டை நாடுகளுடன் ஜான்பூர் சுல்தானகம் ("ஷர்கிஸ்" வம்சம்).[1] சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஜான்பூர் சுல்தானகம் தில்லி சுல்தானகத்தின் லௌதி வம்சத்தால் உள்வாங்கப்பட்டது.
தலைநகரம்ஜான்பூர்
பேசப்படும் மொழிகள்பாரசீக மொழி (அலுவல்)
உருது (பொது)
அரபு மொழி (மதம்)
சமயம்
சுன்னி இசுலாம்
அரசாங்கம்சுல்தான்-முடியாட்சி
சுல்தான் 
• 1394–1399
மாலிக் சர்வார் (முதல்)
• 1458–1479
உசேன் கான் (கடைசி)
வரலாறு 
• தொடக்கம்
1394
• முடிவு
1479
முந்தையது
பின்னையது
துக்ளக் வம்சம்
லௌதி வம்சம்
தற்போதைய பகுதிகள்இந்தியா

ஜான்பூர் சுல்தானகம் (Jaunpur Sultanate ) என்பது 1394 மற்றும் 1479 க்கு இடையில் வட இந்தியாவில் ஆட்சி செய்த பாரசீக முஸ்லிம் இராச்சியம் ஆகும்.. இது ஷார்கி வம்சத்தால் ஆளப்பட்டது. இது தில்லி சுல்தானகத்தின் துக்ளக் வம்சத்தின் சிதைவுக்கு மத்தியில், சுல்தான் நான்காம் நசிருதீன் முகமது ஷா துக்ளக்கின் ஒரு அண்ணிய அடிமையும் முன்னாள் ஆளுநருமான குவாஜா-இ-ஜஹான் மாலிக் சர்வார் என்பவரால் 1394 இல் நிறுவப்பட்டது. ஜான்பூரை மையமாகக் கொண்டு, சுல்தானகம் அவத் மற்றும் கங்கை - யமுனை தோவாபின் பெரும் பகுதியின் மீது அதிகாரத்தை நீட்டித்தது. சுல்தான் இப்ராகிம் ஷாவின் ஆட்சியின் கீழ் இது அதன் மிகப்பெரிய உச்சத்தை எட்டியது. அவர் சுல்தானகத்தில் இசுலாமிய கல்வியின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களித்தார். 1479 ஆம் ஆண்டில், தில்லி சுல்தானகத்தின் லௌதி வம்சத்தின் சுல்தானான ஆப்கானிய ஆட்சியாளர் பக்லுல் லௌதியின் படைகளால் சுல்தான் உசேன் கான் தோற்கடிக்கப்பட்டார். இது சுதந்திரமாக இருந்த ஜான்பூர் தில்லி சுல்தானகத்திற்குள் மீண்டும் உள்வாங்கப்பட்டது.

தோற்றம்[தொகு]

ஷார்கி வம்சம் திருநங்கையாக்கப்பட்ட ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த மாலிக் சர்வார் என்பவரால் நிறுவப்பட்டது. [2] [3] [4] முன்னதாக, இவர் மாலிக் கரன்ஃபால் என்ற இந்து அடிமைச் சிறுவனையும் அவரது சகோதரர்களையும் தத்தெடுத்தார். [5] முபாரக் ஷா என்ற பட்டத்துடன் மாலிக் கரன்பால் அடுத்த சுல்தானானார். அவருக்குப் பிறகு அவரது சகோதரர் இப்ராகிம் ஷா ஆட்சிக்கு வந்தார்.

கட்டடக் கலை[தொகு]

ஜான்பூரின் ஷார்கி ஆட்சியாளர்கள் கற்றல் மற்றும் கட்டிடக்கலைக்கு அவர்கள் அளித்த ஆதரவிற்காக அறியப்பட்டனர். இந்த காலகட்டத்தில் ஜான்பூர் இந்தியாவின் சீராஸ் என்று அழைக்கப்பட்டது. ஜான்பூரில் உள்ள ஷார்கி பாணி கட்டிடக்கலைக்கு மிகவும் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாக அதாலா பசூதி, லால் தர்வாசா மசூதி மற்றும் ஜமா மசூதி ஆகியவற்றைக் கூறலாம். அதாலா மசூதியின் அடித்தளம் 1376 இல் பிரோஸ் ஷா துக்ளக்கால் நாட்டப்பட்டாலும், அது 1408 இல் இப்ராகிம் ஷா ஆட்சியின் போதே கட்டி முடிக்கப்பட்டது. மற்றொரு மசூதியான, ஜஞ்சரி மசூதியும் 1430 இல் இப்ராகிம் ஷாவால் கட்டப்பட்டது. லால் தர்வாசா மசூதி (1450) அடுத்த ஆட்சியாளர் மக்மூத் ஷாவின் ஆட்சியின் போது கட்டப்பட்டது. ஜமா மசூதி கடைசி ஆட்சியாளர் உசேன் ஷாவின் ஆட்சியின் போது 1470 இல் கட்டப்பட்டது.

இசை[தொகு]

கடைசி ஆட்சியாளர் உசைன் ஷா கந்தர்வா என்ற பட்டத்தை வைத்துக்கொண்டார். மேலும் பாரம்பரிய இந்துஸ்தானி இசையின் வகையான காயலின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். இவர் பல புதிய இராகங்களையும் (மெல்லிசை) இயற்றினார்.

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்பூர்_சுல்தானகம்&oldid=3786561" இலிருந்து மீள்விக்கப்பட்டது