ஜப் வீ மெட்
ஜப் வீ மெட் | |
---|---|
![]() திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | இம்தியாஷ் அலி |
தயாரிப்பு | திலின் மேத்தா |
கதை | இம்தியாஷ் அலி |
இசை | பாடல்கள்: பிரிதம் சந்தேஷ் சாண்டில்யா பின்னணி இசை: சஞ்சய் சௌத்ரி |
நடிப்பு | சாகித் கபூர் கரீனா கபூர் |
ஒளிப்பதிவு | நடராஜன் சுப்பிரமணியம் |
படத்தொகுப்பு | ஆர்த்தி பாலாஜி |
கலையகம் | ஸ்ரீ அஷ்டவிநாயக் சினி விஷன் |
விநியோகம் | இந்தியன் பிலிம்ஸ்[1] |
வெளியீடு | 25 அக்டோபர் 2007 |
ஓட்டம் | 142 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
ஆக்கச்செலவு | ₹15 கோடி[2] |
மொத்த வருவாய் | ₹50.9 கோடி[2] |
ஜப் வி மெட் (Jab We Met) என்பது 2007 ஆம் ஆண்டு வெளியான இந்தி மொழி காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும், இம்தியாஸ் அலி எழுதி இயக்கிய இப்படத்தை திலின் மேத்தா ஸ்ரீ அஷ்டவிநாயக் சினி விஷன் என்னும் பதாகையின் கீழ் தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தில் சாகித் கபூர் மற்றும் கரீனா கபூர் ஆகியோர் நடித்துள்ளனர், தருண் அரோரா, சவுமியா டாண்டன் மற்றும் தாரா சிங் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.[3]
மும்பை, பட்டிண்டா மற்றும் சிம்லா ஆகிய நகரங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம், தொழிலதிபர் ஆதித்யா காஷ்யப்பின் கதையைச் சொல்கிறது. தொடர் வண்டி நிலையத்தில் அவர் கீத் தில்லான் என்ற பஞ்சாபி பெண்ணைச் சந்திக்கிறார். அவர்கள் தொடர் வண்டியைத் தவறவிட்டாலும், கீத்தும் ஆதித்யாவும் அவளுடைய வீட்டிற்கு ஒன்றாக ஒரு பயணத்தைத் தொடங்குகிறார்கள். அதைத் தொடர்ந்து வரும் காதல் அவர்களை மாற்றுகிறது. பாடல்களுக்கு பிரிதம் இசையமைத்துள்ளா. பாடல் வரிகளை இர்ஷாத் காமில் எழுதியுள்ளார்.
ஜப் வி மெட் அக்டோபர் 25,2007 அன்று உலகளவில் வெளியிடப்படுவதற்கு ஒரு நாள் முன்பு ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது. வெளியானதிலிருந்து, இந்த படம் பரவலான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், 50.9 கோடிக்கு மேல் வசூலித்து[2] அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த இந்தித் படங்களில் ஒன்றாக இருந்தது, இத்திரைப்படம் பின்னர் தமிழில் கண்டேன் காதலை என்ற பெயரிலும் பிரியா பிரியதமா என்ற பெயரில் தெலுங்கிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டு வெளியானது.[4]
இந்தப் படம் பல பாராட்டுகளைப் பெற்றது. 55வது தேசிய திரைப்பட விருதுகளில், "யே இஷ்க் ஹை" பாடலுக்காக சிரேயா கோசலுக்கு சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான விருது மற்றும் சரோஜ் கானுக்கு சிறந்த நடன அமைப்பிற்கான விருது ஆகியவற்றை இந்த படம் வென்றது. 53வது பிலிம்பேர் விருதுகளில், ஜப் வி மெட் ஏழு பரிந்துரைகளைப் பெற்றது. கரீனா கபூருக்கு சிறந்த நடிகைக்கான விருதும் இம்தியாஸ் அலிக்கு சிறந்த உரையாடலுக்கான விருதும் என இரண்டு விருதுகளை மேலும் வென்றது.[5] 2007 ஆம் ஆண்டில் வெளியானதிலிருந்து, ஜப் வி மெட் இரசிகர்களின் வழிபாட்டு முறையை அடைந்துள்ளது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Frater, Patrick (8 November 2007). "Indian Film to distribute 'Welcome'". Variety. Archived from the original on 8 February 2022. Retrieved 8 February 2022.
- ↑ 2.0 2.1 2.2 "Jab We Met". Box Office India. Archived from the original on 5 February 2018. Retrieved 16 February 2022.
- ↑ "Why is 'Jab We Met' such a comfort movie? Decoding it with Imtiaz Ali and fans". https://www.indiatoday.in/movies/bollywood/story/decoding-the-comfort-of-shahid-kapoor-kareena-kapoors-jab-we-met-with-imtiaz-ali-and-its-fans-2453018-2023-10-28.
- ↑ Jha, Subhash K. (Aug 15, 2009). "Jab We Meet Again". Mumbai Mirror (in ஆங்கிலம்). Archived from the original on 21 August 2023. Retrieved 2022-05-05.
- ↑ "Shreya Ghoshal's Song Jab Jab Navratre Aave OUT: From National Film Awards To Filmfare 5 Times Shreya Won Laurels For Her Melodious Voice". www.spotboye.com (in ஆங்கிலம்). Archived from the original on 5 May 2022. Retrieved 2022-05-05.
- ↑ "Why is 'Jab We Met' such a comfort movie? Decoding it with Imtiaz Ali and fans". https://www.indiatoday.in/movies/bollywood/story/decoding-the-comfort-of-shahid-kapoor-kareena-kapoors-jab-we-met-with-imtiaz-ali-and-its-fans-2453018-2023-10-28."Why is 'Jab We Met' such a comfort movie? Decoding it with Imtiaz Ali and fans".