உள்ளடக்கத்துக்குச் செல்

சுல்தான் கான் (இசையமைப்பாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுல்தான் கான்
Image of Ustad Sultan Khan sitting and smiling
2009இல் சுல்தான் கான்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு1940 ஏப்ரல் 15
சோத்பூர், சோத்பூர் மாவட்டம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு2011 நவம்பர் 27 (aged 71)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா[1]
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
இசைக்கருவி(கள்)சாரங்கி
இணைந்த செயற்பாடுகள்தபேலா பீட் சயின்ஸ், சாகீர் உசைன்

உஸ்தாத் சுல்தான் கான் (Sultan Khan ) (பிறப்பு:1940 ஏப்ரல் 15 - இறப்பு: 2011 நவம்பர் 11) இவர் ஒரு இந்திய சாரங்கி வாசிப்பவரும், சிகார் கரானாவைச் சேர்ந்த இந்துஸ்தானி இசைப் பாடகரும் ஆவார். ஜாகிர் உசேன் மற்றும் பில் லாஸ்வெல் ஆகியோருடன் இந்திய இணைவு குழுவான தபேலா பீட் சயின்ஸில் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். 2010 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமக்கள் கௌரவமான பத்ம பூசண் இவருக்கு வழங்கப்பட்டது. [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சுல்தான் கான் பிரித்தானிய இந்திய பேரரசில் ஒரு சுதேச மாநிலமான ராஜஸ்தானின் உள்ள ஜோத்பூரில் பிறந்தார். [3] இவர் தனது தந்தை உஸ்தாத் குலாப் கானிடமிருந்து சாரங்கி கற்றுக்கொண்டார். [4]

தொழில்[தொகு]

குசராத்தின் ராஜ்கோட் வானொலி நிலையத்தில் 20 வயது சிறுவனாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். எட்டு வருடங்கள் ராஜ்கோட்டில் மிகவும் மகிழ்ச்சியுடன் கழித்த பிறகு, லதா மங்கேஷ்கர் ஒருமுறை ராஜ்கோட் வருகையின் போது அவருடன் இணைந்து வாசிக்க இவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இது இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு இவர் மும்பை வானொலி நிலையத்திற்கு மாற்றப்பட்டார். மும்பை வானொலியில் சேர்ந்த அவர் மும்பை இந்துஸ்தான் இசையில் மட்டுமல்லாமல் திரைப்படத் துறை இசையிலும் ஆழமாக ஈடுபட்டார். [5]

இவர் தனது பதினொரு வயதில் அகில இந்திய மாநாட்டில் தனது முதல் நிகழ்ச்சியை வழங்கினார். மேலும் ஜார்ஜ் ஹாரிசனின் 1974 டார்க் ஹார்ஸ் உலக சுற்றுப்பயணத்தில் ரவிசங்கருடன் சர்வதேச அளவில் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். [6]

குடியரசுத் தலைவர் விருது என்றும் அழைக்கப்படும் சங்கீத நாடக அகாதமி விருதினை, இருமுறை வென்றுள்ளார். மேலும், மகாராஷ்டிராவின் தங்கப் பதக்கம் ,1998 இல் அமெரிக்கன் அகாதமி ஆஃப் ஆர்ட்டிஸ்ட்ஸ் விருது உள்ளிட்ட பல இசை விருதுகளை அவர் வென்றுள்ளார். 1997 ஆம் ஆண்டில் இளவரசர் சார்லசின் 50 வது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் நிகழ்ச்சி நிகழ்த்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.   [ மேற்கோள் தேவை ] உஸ்தாத் அமீர்கான், உஸ்தாத் படே குலாம் அலிகான், பண்டிட் போன்ற அனைத்து பெரிய மேதைகளுடன் வளர்ந்தது இவருக்கு ஒரு நல்ல அதிர்ஷ்டமாகும். ஓம்கர்நாத் தாக்கூர், உஸ்தாத் நாசகத் அலி-சலமத் அலி கான், கிஷோரி அமோன்கர் போன்றாஒரு சிலருடனும் இவர் இசைத்துள்ளார். இவர் ஒரு சாரங்கி வாசிப்பவராகவும், ஒரு பாடகராகவும் ஒப்புக் கொள்ளப்படும் இவர் பல இசைத் தொகுப்புகளைக் கொண்டுள்ளார்.

இசையமைப்பாளர்களான சுசீந்தர் சிண்டா மற்றும் ராம் கோபால் வர்மா (அவரது படத்திற்கு தெய்யம் இசையை வழங்கினார் ) போன்றவர்களுக்கு சாரங்கி இசையை இவர் கற்றுக் கொடுத்தார். இவருக்கு ஏராளமான மாணவர்கள் இருந்தனர். அவர்களில் முக்கியமாக பாலிவுட் இசை அமைப்பாளர் மற்றும் இயக்குனர் விசால் பரத்வாஜ், சந்தேஷ் சண்தாலியா, இசையமைப்பாளர் இளையராஜா, குர்தாசு மான், பாலு, ஆனந்த் வியாசு, இக்ரம் கான், வினோத் பவார், சபீர் கான், தில்சாத் கான் ஆகியோர் அடங்குவர்.

குடும்பம்[தொகு]

இவரது மனைவி பானோ, மகன் சபீர் கான், இவரது சீடர் மற்றும் ஒரு சாரங்கி இசைப்பவராவார். அதே போல் ரேஷ்மா மற்றும் ஷேரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது சகோதரர் மறைந்த நசீர் கான் சித்தார் வாசிப்பவராக இருந்தார். இவரது தம்பி நியாஸ் அகமது கான் என்பராவார். இவரது மருமகன்களில் சலாமத் அலி கான் (சித்தர் வாசிப்பவர்), இம்ரான் கான் (சித்தர் வாசிப்பவர் மற்றும் இசையமைப்பாளர்) இம்ரான் கான் சிதார் வாசிப்பவர் / இசையமைப்பாளர், தில்சாத் கான் (சாரங்கி வாசிப்பவர்) மற்றும் இர்பான் கான் (சித்தார் வாசிப்பவர்), இஷ்தாயக் கான் (கைம்முரசு இணை/தோலக் வாசிப்பவர் ), முஸ்தக் கான் (தோலாக் வாசிப்பவர்)

இறப்பு[தொகு]

கான் 2011 நவம்பர் 27 அன்று இந்தியாவின் மகாராட்டிராவிலுள்ள மும்பையில் ஒரு நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். [1]

கடந்த நான்கு ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்து கொண்டிருந்த இவர், சில நாட்களில் பேச்சை இழந்தார். இவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். இறுதிச் சடங்குகள் 2011 நவம்பர் 28, அன்று அவரது சொந்த ஊரான ராஜஸ்தானில் உள்ள சோத்பூரில் கமீத் அமீர் என்பவரால் நடத்தப்பட்டது. [7]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Sarangi player Ustad Sultan Khan passes away". Archived from the original on 2012-06-14.
  2. "One Of India's Leading Musicians, Sultan Khan, Dies At Age 71". https://www.npr.org/blogs/allsongs/2011/11/27/142822691/one-of-indias-leading-musicians-sultan-khan-dies-at-age-71. 
  3. Master musicians of India: hereditary sarangi players speak. Routledge. 2007.
  4. "The sarangiya's song". The Hindu இம் மூலத்தில் இருந்து 2006-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060304013606/http://www.hindu.com/mp/2005/01/11/stories/2005011101010400.htm. 
  5. "Article Window". Epaper.timesofindia.com. 2011-11-29. பார்க்கப்பட்ட நாள் 2012-09-13.
  6. World Music: The Rough Guide. 2000.
  7. "Ustad Sultan Khan passes away at 68". The Times Of India. 28 November 2011 இம் மூலத்தில் இருந்து 2013-12-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131213152942/http://articles.timesofindia.indiatimes.com/2011-11-28/news-and-interviews/30449788_1_sarangi-ustad-sultan-khan-sajid. 

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sultan Khan
என்பதில் ஊடகங்கள் உள்ளன.