செஞ்சிறகு வானம்பாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செஞ்சிறகு வானம்பாடி
உயிரியல் வகைப்பாடு
உலகம்: மெய்க்கருவுயிரி
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: பறவைகள்
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: அலுடிடே
பேரினம்: மிர்ராப்ரா
இனம்: மி. கைப்பர்மெட்ரா
இருசொற் பெயரீடு
மிர்ராப்ரா கைப்பர்மெட்ரா
(ரெய்ச்னோ, 1879)
துணையினம்

உரையினை காண்க

     வாழிடச் சரகம்
வேறு பெயர்கள்
 • பிலோகோரிடான் கைப்பர்மெட்ரசு

செஞ்சிறகு வானம்பாடி (Red-winged lark)(மிராப்ரா கைப்பர்மெட்ரா) என்பது கிழக்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் வானம்பாடி குடும்பத்தில் உள்ள சிற்றினமாகும்.

வகைப்பாட்டியல்[தொகு]

செஞ்சிறகு வானம்பாடி வேற்று இடவழிச் சிற்றினத் தோற்றம் கூட்டமைப்பினை செம்பழுப்பு பிடரி வானம்பாடியுடனும், சோமாலி வானம்பாடியுடன் உருவாக்குகிறது. "செஞ்சிறகு வானம்பாடி" என்ற பெயர் சில நேரங்களில் இந்தியப் புதர் வானம்பாடியின் மாற்றுப் பெயராகப் பயன்படுத்தப்படுகிறது. சிவந்த இறக்கை வானம்பாடி அல்லது வங்காள புதர் வானம்பாடி ஆகியவற்றை விவரிக்க செவ்விறகு புதர் வானம்பாடி மற்றும் செம்பழுப்பு இறகு புதர் வானம்பாடி என்ற மாற்றுப் பெயர்களும் பயன்படுத்தப்படலாம்.[2][3]

துணையினங்கள்[தொகு]

நான்கு துணையினம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[4]

 • மி. கை. கதங்கோரென்சிசு கேவ், 1940 - தென்கிழக்கு சூடான்
 • மி. கை. கைடெபோனென்சிசு மெக்டொனால்டு, 1940 — தெற்கு சூடான் மற்றும் வடகிழக்கு உகாண்டா
 • கல்லா சிவப்பு இறகு வான்ம்பாடி (மி. கை. கல்லாரம்) ஆர்டெர்ட், 1907 - எத்தியோப்பியா
 • மி. கை. கைப்பர்மெட்ரா (ரெய்ச்செனாவ், 1879) - தெற்கு சோமாலியா முதல் வடகிழக்கு தான்சானியா வரை

விளக்கம்[தொகு]

என்ரிக் க்ரோன்வோல்டின் செம்பழுப்பு வானம்பாடி (இடது) மற்றும் செஞ்சிறகு வானம்பாடி

செஞ்சிறகு வானம்பாடி, செம்பிடறி வானம்பாடியினை விட அளவில் பெரியதாகும். இவை வலுவான அல்கு மற்றும் நீண்ட வாலினைக் கொண்டது.[5] ஆனால் இவற்றின் உருவம் மற்றும் குரல் இவை ஒன்றாகக் காணப்படும் இடத்தில் இடைப்பட்டதாக இல்லை.[6]

பரவலும் வாழிடமும்[தொகு]

செஞ்சிறகு வானம்பாடி பூமத்திய ரேகை பகுதியில் கிழக்கு ஆபிரிக்காவில் மிகவும் பரவலான வரம்பைக் கொண்டுள்ளது. இது எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, தெற்கு சூடான், தான்சானியா மற்றும் உகாண்டாவில் காணப்படுகிறது. மேலும் உலகளாவிய 660,000 ச.கி.மீ. பரப்பினை வாழிடமாகக் கொண்டுள்ளது.[1] இதன் மொத்த மக்கள்தொகை இன்னும் கணக்கிடப்படவில்லை. ஆனால் அதிக அளவில் இருப்பதாக நம்பப்படுகிறது.[1]

இதன் இயற்கையான வாழ்விடம் புன்னிலம் ஆகும்.[5] இவை வெப்பமண்டலம், மிதவெப்பமண்டலம், வறண்ட, திறந்த, தாழ் நிலத்தில் வாழ்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 BirdLife International (2016). "Mirafra hypermetra". IUCN Red List of Threatened Species 2016: e.T22717038A94518943. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717038A94518943.en. https://www.iucnredlist.org/species/22717038/94518943. பார்த்த நாள்: 11 November 2021. 
 2. "Mirafra erythroptera – Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2016-11-28.
 3. "Mirafra assamica – Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2016-11-28.
 4. "IOC World Bird List 6.4". IOC World Bird List Datasets. doi:10.14344/ioc.ml.6.4. http://www.worldbirdnames.org/ioc-lists/crossref. 
 5. 5.0 5.1 Birds of Africa south of the Sahara. 
 6. "Rufous-naped Lark (Mirafra africana) - HBW 9, p. 551". Internet Bird Collection. Lynx Edicions. பார்க்கப்பட்ட நாள் 29 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செஞ்சிறகு_வானம்பாடி&oldid=3793375" இலிருந்து மீள்விக்கப்பட்டது