அன்ரன் ரெய்ச்செனோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்ரன் ரெய்ச்செனோவ் (Anton Reichenow)(1 ஆகத்து 1847 சார்லட்டன்பர்க்கில் - 6 சூலை 1941 ஆம்பர்கு) என்பவர் ஜெர்மன் பறவையியல் மற்றும் ஹெர்பெட்டாலஜிஸ்ட் ஆவார் .

பணி[தொகு]

ரெய்ச்செனோவ் ஜீன் கபானிசின் மருமகன் மற்றும் பெர்லின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் 1874 முதல் 1921 வரை பணியாற்றியவர் ஆவார். இவர் ஆப்பிரிக்கப் பறவைகளின் நிபுணராக இருந்தார். 1872 மற்றும் 1873-ல் மேற்கு ஆப்பிரிக்காவிற்குப் பறவைச் சேகரிப்பு பயணத்தை மேற்கொண்டார். மேலும் டை வோகல் ஆப்ரிகாசு (1900-05) என்ற நூலினை எழுதியுள்ளார். இவர் கிளிகள் பற்றிய நிபுணராகவும் இருந்துள்ளார்.

புத்தகங்கள்[தொகு]

ரெய்ச்செனோவால் அறியப்பட்ட அனைத்து உயிரினங்களையும் இவரது புத்தகமான வோஜெல்பில்டெர் ஆசு பெர்னென் சோனென்:அபிடுன்ஜென் அண்டு பெச்ச்ஹ்ரெபஙென் டெர் பபாஜெயின் (Vogelbilder aus Fernen Zonen: Abbildungen und Beschreibungen der Papageien) (குஸ்டாவ் முட்ஸெல், 1839-1893 விளக்கினார்) விவரித்துள்ளார். இவர் டை வோஜெல் டெர் பிசுமர்சின்செலின் (Die Vögel der Bismarckinseln)(1899) என்ற நூலையும் எழுதியுள்ளார். இவர் 1894 முதல் 1921 வரை ஆர்னிதாலஜி ஆய்விதழின் ஆசிரியராக இருந்தார்.

நினைவாக[தொகு]

ரெய்ச்செனோவ் மரங்கொத்தி மற்றும் ரைச்செனோவ் தீச்சில்லை உட்ப்பட பல பறவைகளுக்கு இவரது பெயரிடப்பட்டுள்ளது. இவரது மகன் எட்வர்ட் ரெய்ச்செனோ ஒரு பிரபலமான புரோட்டோ விலங்கியலாளர் ஆவார் .

ரெய்ச்செனோவ் ஹெர்பெட்டாலஜி அறிவியல் துறையில் பணியாற்றினார். ஒரு புதிய பேரினம் மற்றும் இரண்டு புதிய சிற்றின தவளைகள்,[1] மற்றும் இரண்டு புதிய வகை பல்லிகளை விவரித்த பெருமை இவருக்கு உண்டு.[2] லாசெர்டாசுபிசு ரெய்ச்செனோவி என்ற அரணை வகையின் அறிவியல் பெயரால் இவர் நினைவுகூரப்படுகிறார்.[3]

வகைப்பாட்டியலில்[தொகு]

ரெய்ச்செனோ பறவைகளை ஆறு குழுக்களாக வகைப்படுத்தியதற்காக அறியப்படுகிறார். ரெய்ச்செனோ வகைப்படுத்திய ஆறு குழுக்கள்: "குறுகிய இறக்கையின, நீந்துபவை, நெடுங்காலிகள், தோல் அலகுகள், நுகமுடையன மற்றும் மரவாழ் பறவைகள்" என்பன. இதனை மற்ற பறவையியலாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தூவி தசம வகைப்படுத்துவதில் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Amphibian Species of the World 5.6, an Online Reference. research.amnh.org/vz/herpetology/amphibia.
  2. The Reptile Database. www.reptile-database.org.
  3. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. ISBN 978-1-4214-0135-5. ("Reichenow", pp. 218-219).

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்ரன்_ரெய்ச்செனோவ்&oldid=3361518" இலிருந்து மீள்விக்கப்பட்டது