சோமாலி வானம்பாடி
சோமாலி வானம்பாடி | |
---|---|
![]() | |
படம் குட்சைல்ட் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணிகள் |
வகுப்பு: | பறவைகள் |
வரிசை: | பசாரிபார்மிசு |
குடும்பம்: | அலுடிடே |
பேரினம்: | மிராப்ரா |
இனம்: | மி. சோமாலிகா |
இருசொற் பெயரீடு | |
மிராப்ரா சோமாலிகா (விதர்பை, 1903) | |
![]() | |
உறைவிடப் பரம்பல் | |
வேறு பெயர்கள் | |
|
சோமாலி வானம்பாடி (Somali lark)(மிராப்ரா சோமாலிகா) என்பது சோமாலியாவில் மட்டுமே காணக்கூடிய அலாடிடே குடும்பத்தில் உள்ள வானம்பாடிச் சிற்றினமாகும்.[2]
வகைப்பாட்டியல்[தொகு]
சோமாலி வானம்பாடி முதலில் செர்த்திலாடா பேரினத்தைச் சேர்ந்ததாக வகைப்படுத்தப்பட்டது. [3] "சோமாலி வானம்பாடி" என்ற சொல் ஆர்ச்சரின் வானம்பாடி மற்றும் சார்ப்சு வானம்பாடி ஆகிய இரண்டிற்கும் மாற்றுப் பெயராகப் பயன்படுத்தப்படுகிறது.[4] "சிவப்பு சோமாலி வானம்பாடி" என்பதும் இதன் மாற்றுப் பெயராகப் பயன்படுத்தப்படுகிறது.[5] சிவப்பு சோமாலி வானம்பாடி, சோமாலி புதர் வானம்பாடி மற்றும் சோமாலி நீள-அலகு வானம்பாடி ஆகியவையும் அடங்கும்.
துணையினங்கள்[தொகு]
இரண்டு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை: [6]
- மி. சோ. சோமாலிக்கா - (விதர்பி, 1903) : வடக்கு சோமாலியா
- மி. சோ. ரோச்சி - கோல்சுடன், 1982 : மத்திய சோமாலியா
பரவல்[தொகு]
மி. சோமாலிக்காவின் வரம்பு சற்றே பெரியது, உலக அளவில் இது 270,000 சதுர கி.மீ. பரப்பளவில் காணப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1]
இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் தாழ் நில புல்வெளி ஆகும்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 BirdLife International (2016). "Mirafra somalica". IUCN Red List of Threatened Species 2016: e.T22717043A94519133. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717043A94519133.en. https://www.iucnredlist.org/species/22717043/94519133. பார்த்த நாள்: 13 November 2021.
- ↑ 2.0 2.1 Compilers: Stuart Butchart, Jonathan Ekstrom (2008). "Somali Lark - BirdLife Species Factsheet". Evaluators: Jeremy Bird, Stuart Butchart. BirdLife International. ஜனவரி 5, 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. May 11, 2009 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Mirafra somalica - Avibase". avibase.bsc-eoc.org. 2016-11-29 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Heteromirafra archeri - Avibase". avibase.bsc-eoc.org. 2016-11-29 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Mirafra sharpii - Avibase". avibase.bsc-eoc.org. 2016-11-29 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "IOC World Bird List 6.4". IOC World Bird List Datasets. doi:10.14344/ioc.ml.6.4. http://www.worldbirdnames.org/ioc-lists/crossref.