செங்கல் மகேசுவரம் சிறீ சிவபார்வதி கோயில்

ஆள்கூறுகள்: 8°22′05″N 77°05′51″E / 8.368165°N 77.097585°E / 8.368165; 77.097585
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்கல் மகேசுவரம் சிறீ சிவபார்வதி திருக்கோவில்
111.2 அடி உயர சிவலிங்கம்[1]
செங்கல் மகேசுவரம் சிறீ சிவபார்வதி கோயில் is located in கேரளம்
செங்கல் மகேசுவரம் சிறீ சிவபார்வதி கோயில்
மகேசுவரம் சிறீ சிவபார்வதி கோயில், செங்கல், திருவனந்தபுரம், கேரளா
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:திருவனந்தபுரம்
அமைவு:செங்கல் (கிராமம்)
ஆள்கூறுகள்:8°22′05″N 77°05′51″E / 8.368165°N 77.097585°E / 8.368165; 77.097585[1]
கோயில் தகவல்கள்

செங்கல் மகேசுவரம் சிறீ சிவபார்வதி திருக்கோவில் என்பது ஒரு சிவன் கோயில் ஆகும். இது கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில், உதயங்குளங்கரை எனும் பகுதியில் உள்ள செங்கல் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. உலக சாதனையாக 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்', 'ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்', 'லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' ஆகியவற்றில் இக்கோயிலின் பெயர் இடம்பெற்றுள்ளது.[2]

சுற்றுலாத் தலம்[தொகு]

இது ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும்.[3]

சிறப்பு அம்சங்கள்[தொகு]

இந்தக் கோயிலில் 111.2 அடி உயர சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தின் உட்பகுதி குகை வடிவில் அமைந்துள்ளது. 8 மாடிகள் உள்ளன. இதன் உட்பகுதி நடைபாதையின் ஓரங்களில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வியாச மகரிஷி, கால பைரவர், காஷ்யப மகரிஷி, அத்ரி மகரிஷி, ஜமதக்னி மகரிஷி, பரத்வாஜ முனிவர், அகத்தியர், வசிஸ்டர், கெளதம மகரிஷி, பிருகு மகரிஷி, விஸ்வாமித்திரர், பரசுராமர் மற்றும் பாஸ்கராச்சார்யா ஆகியோரின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. [4]

தெய்வங்கள்[தொகு]

மூலவராகச் சிவனும் பார்வதியும், உப தெய்வங்களாகக் கணபதி, முருகன், நவகிரகங்கள், பிரம்ம ராட்சசி, யோகேஸ்வரர் சன்னதிகளும் காணப்படுகின்றன.[5]

அமைவிடம்[தொகு]

திருவனந்தபுரத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில், உதயங்குளங்கரை முக்கிய சாலையில் இருந்து 3.2 கி.மீ. தொலைவில், செங்கல் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.[6]

சான்றுகள்[தொகு]

  1. தினமணி
  2. "செங்கல் சிவபார்வதி கோயிலின் 111 அடி உயர சிவலிங்கத்துக்கு உலக சாதனை விருது". Hindu Tamil Thisai. 2022-10-31. பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
  3. இந்துஸ்தான் டைம்
  4. தினமணி
  5. இந்துஸ்தான் டைம்
  6. திருவனந்தபுரம் ப்ளாக்ஸ்பாட்

வெளி இணைப்புகள்[தொகு]