சூதி வேலு
சூதி வேலு | |
---|---|
பிறப்பு | குரும்தள்ளி இலட்சுமி நரசிம்மராவ் 7 ஆகத்து 1947 போகிரெட்டிபள்ளி, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா) |
இறப்பு | 16 செப்டம்பர் 2012[1] சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 65)
சூதி வேலு (Suthivelu) ( 7 ஆகத்து 1947 - 16 செப்டம்பர் 2012) குரும்தள்ளி இலட்சுமி நரசிம்மராவ் என்றும் அழைக்கப்படும் இவர் இந்தியத் திரைப்படங்களில் கதாபாத்திர நடிகரும், நகைச்சுவை நடிகரும், தெலுங்குத் திரையுலகில் தனது நடிப்புக்கு பெயர் பெற்றவருமாவார். தெலுங்கின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகக் கருதப்படும் இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[2] ஒருசில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும் நான்கு மாநில நந்தி விருதுகளையும் வென்றுள்ளார் .
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]சூதி வேலுவின் தந்தை ஒரு ஆசிரியர். சிறு வயதிலிருந்தே இவர் நாடகத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். மேலும் நடிப்பிலும் ஆர்வம் காட்டினார். பின்னர் இவர் நடிப்பை தீவிரமாக எடுத்துக் கொள்ள முடிவு செய்தார். தனது 7 வயதில், தனது ஊரில் ஒரு மேடை நிகழ்ச்சியில் நடிக்க ஆரம்பித்தார். இவரது தந்தை நடிப்பில் ஆர்வம் காட்ட வேண்டாம் என்று இவரைக் கேட்டுக் கொண்டார். 1966இல் படிபிற்குப் பிறகு, ஐதராபாத்து சென்று ஒரு தற்காலிக வேலையை செய்து கொண்டிருந்தார். ஆனாலும், 1967இல் தனது வேலையை மாற்றிக்கொண்டு பாபட்லாவுக்குச் சென்றார். பின்னர், தனது வேலையை விட்டுவிட்டு நண்பர்களுடன் நடிக்க ஆரம்பித்தார். இவர் தனது திரைப்பட வாழ்க்கையை "முத்த மந்தாரம்" என்றத் தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். பின்னர், சந்தியாலாவின் இயக்கத்தில் பல படங்களில் நடித்தார். இது இவரை பிரபலமாக்கியது.
ஆனந்த பைரவி, ரெண்டுஜில்லா சீதா, ஸ்ரீவாரிகி பிரேமலேகா, சாந்தாபாய் போன்ற பல வெற்றிகரமான படங்களில் நடித்துள்ளார். பிறகு வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் சில நாட்கள் அவதிப்பட்டார். பின்னர் தொடர்ச்சியாக ஐந்து படங்களில் நடித்தார். அதுவரை நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த இவர், வந்தே மாதரம், கலிகாலம், ஓசி ராமுலம்மா ஆகிய படங்களில் இஅவர் நடித்தது மறக்க முடியாதது. 1984 ஆம் ஆண்டில் வந்தே மாதரம் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான நந்தி விருதை வென்றார்.
அவர் தனது நிரந்தர இல்லத்தை சென்னையில் அமைத்துக் கொண்டார். தெலுங்குத் திரையுலகம் ஐதராபாத்திற்கு நகர்ந்ததால், இவருக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார்.. ஆனந்தோபிரம்மா, மல்லாடி இராமகிருஷ்ண சாஸ்திரி, பாமிடிபாடி ராமகோபால் ஆகிய கதைகள் இவருக்கு நல்ல பெயரைக் கொடுத்தன. கடைசி நாட்களில் இவர் தனது இல்லத்தைஐதராபாத்திற்கு மாற்றினார்.
தொழில்
[தொகு]சூதிவேலுவின் நகைச்சுவை 1980 முதல் 2000 வரை தெலுங்குத் திரையுலகில் பரவியிருந்தது. இவர் தனது வசனங்களையும் வெளிப்பாடுகளையும், குறிப்பாக இயக்குனர் சந்தியாலாவின் நகைச்சுவை படங்களில் நன்றாக வெளிபட்டது. சூதி வீரபத்ரராவ் உடனான இவரது ஒத்துழைப்பு மிகவும் பிரபலமானது. மேலும், இருவருக்கும் "சூதி-சந்தா" என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டது. இவரது குழந்தைப் பருவத்தில், இவர் மிகவும் மெலிந்தவராக இருந்தார். எனவே இவரது அத்தை ஜானகாம்பா என்பவர் இவரை வேலு (சூதி என்றால் ஊசி என்றும், வேலு என்றால் தெலுங்கில் விரல் என்று பொருள்) என்று அழைத்தார். நாலுகு ஸ்தம்பலதா படத்தின் வெற்றிக்குப் பிறகு, மக்கள் இவரை சூதி வேலு என்று அழைக்கத் தொடங்கினர். தூர்தர்ஷனின் பிரபலமான தெலுங்கு நகைச்சுவைத் தொடர்களான ஆனந்தோபிரம்மா , ஈடிவியில் லேடி டிடெக்டிவ் போன்றவற்றிலும் நடித்தார் .
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சூதிவேலு, இலட்சுமி ராஜ்யம் என்பவரை மணந்தார். இவருக்கு மூன்று பெண்களும், ஒரு பையனும் என நான்கு குழந்தைகள் உள்ளனர். 16 செப்டம்பர் 2012 அன்று இவர் தனது இல்லத்தில் இருதய நோயால் இறந்தார்.
விருதுகள்
[தொகு]- சிறந்த துணை நடிகருக்கான நந்தி விருது - 1985 - வந்தேமாதரம்
- சிறந்த ஆண் நகைச்சுவை நடிகருக்கான நந்தி விருது - 1985 - தேவாலாயம்
- சிறந்த ஆண் நகைச்சுவை நடிகருக்கான நந்தி விருது - 1989 - கீதாஞ்சலி
- சிறந்த ஆண் நகைச்சுவை நடிகருக்கான நந்தி விருது - 1990 - மாஸ்டரி கபூரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Suthi Velu passes away". The Times of India. Archived from the original on 20 October 2015. பார்க்கப்பட்ட நாள் 16 September 2012.
- ↑ http://timesofindia.indiatimes.com/entertainment/regional/telugu/news-interviews/Suthi-Velu-passes-away/articleshow/16419124.cms