வெண்ணிலா கிசோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெண்ணிலா கிசோர்
Vennela Kishore.jpg
வாலேன்சியாவில் நடந்த படபிடிப்பில் கிசோர், 2016
பிறப்புபொக்காலா கிசோர் குமார்[1]
19 செப்டம்பர் 1980 (1980-09-19) (அகவை 41)[1]
கமரெட்டி, ஆந்திரப் பிரதேசம் (தற்போது தெலங்காணா), இந்தியா[2]
படித்த கல்வி நிறுவனங்கள்பெர்ரிஸ் மாநிலப் பல்கலைக்கழகம்
பணி
  • திரைப்பட நடிகர்
  • இயக்குனர்
  • நகைச்சுவை நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2005–தற்போது வரை

பொக்காலா கிசோர் குமார் (Bokkala Kishore Kumar ) (19 செப்டம்பர் 1980 அன்று பிறந்தவர்) வெண்ணிலா கிசோர் எனத் தொழில் ரீதியாகவும் அறியப்படும் இவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகரும், இயக்குநருமாவார். இவர் முக்கியாமாக தெலுங்குப் படங்களில் தோன்றியுள்ளார். நகைச்சுவை வேடங்களில் பெயர் பெற்ற இவருக்கு, வெண்ணிலா (2005) என்ற முதல் திரைப்படத்திற்குப் பிறகு இப்பெயர் வழங்கப்பட்டது. இவர் இரண்டுநந்தி விருதுகளையும், ஒரு தென்னிந்திய திரையுலகின் கலை மற்றும் தொழில்நுட்ப சாதனைகளுக்கான விருதையும் பெற்றவர்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கிசோர் இன்றைய தெலங்காணாவின் கமரெடியில் பிறந்து வளர்ந்தார். பட்டப்படிப்புக்காக ஐதராபாத்துக்குக் குடிபெயர்ந்த இவர், பின்னர் உயர் படிப்புகளுக்காக அமெரிக்காவுக்குச் சென்றா. மிச்சிகனில் உள்ள பெர்ரிஸ் மாநிலப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் முடித்து மென்பொருள் பொறியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். [2]

தொழில்[தொகு]

அமெரிக்காவில் தங்கியிருந்த காலத்தில், இவர், தேவா கட்டாவின் இயக்கத்தில் வெண்ணிலா (2005) படத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். [1] துக்குடு படத்தில் "சாஸ்திரி" என்ற பாத்திரத்திற்காக பாராட்டைப் பெற்றார். இவரது நடிப்பில் வெளியான படங்களில் பிந்தாஸ், ஜமீன், தாருவ், சீம தப்பக்காய், பாட்ஷா, தூசுகெல்தா, பண்டக சேசுகோ, ஆகாடு, த/பெ சத்தியமூர்த்தி, சீமந்துடு, பலே பலே மொகவாடுவோய், எக்கடிகி போத்தாவு சின்னவாடா ஆகியவையும் அடங்கும். இவர், வெண்ணிலா 1½, யாபா என்ற இரண்டு தெலுங்குப் படங்களையும் இயக்கியுள்ளார்.[3] ஒரு இயக்குனராக தோல்வியை கண்ட பின்னர், இவர் மீண்டும் நடிப்புக்கு வந்துள்ளார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Software professional turns comedian" (en) (2018-09-18).
  2. 2.0 2.1 Tanmayi, Bhawana (23 September 2017). "‘Vennela’ Kishore’s luck by chance" (en-US). மூல முகவரியிலிருந்து 19 March 2020 அன்று பரணிடப்பட்டது.
  3. "Vennela Kishore turns director!". chitramala.in (30 June 2011). மூல முகவரியிலிருந்து 29 July 2014 அன்று பரணிடப்பட்டது.
  4. "Vennela Kishore to play a father" (16 September 2013). மூல முகவரியிலிருந்து 13 July 2015 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்ணிலா_கிசோர்&oldid=3105091" இருந்து மீள்விக்கப்பட்டது