சூதி வீரபத்ரராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூதி வீரபத்ரராவ்
பிறப்புமாமிடிபள்ளி வீரபத்ர ராவ்
சூன் 6, 1947(1947-06-06)
கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு30 சூன் 1988(1988-06-30) (அகவை 41)
சென்னை, இந்தியா
மற்ற பெயர்கள்பத்ருடு
பணிநடிகர், நாடகக் கலைஞர், வானொலிக் கலைஞர்
உயரம்5"8
வாழ்க்கைத்
துணை
சேகரி

சூதி வீரபத்ர ராவ் (Suthi Veerabhadra Rao) அல்லது மாமிடிபள்ளி வீரபத்ர ராவ் மிகவும் பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகரும், நகைச்சுவை நடிகரும், கதாபாத்திர கலைஞருமாவார். அதே போல் ஒரு பிரபல வானொலிக் கலைஞராகவும், நாடகக் கலைஞராகவும் இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

வீரபத்ரா ராவ் தனது பெற்றோருக்கு ஒரே மகன், இவருக்கு இரண்டு தங்கைகள் இருந்தனர். ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். (அயனாபுரத்தில் பிறந்தார்). தனது தந்தையின் பணி நிமித்தமாக விஜயவாடா சென்றார். அங்கு 'ஏ.கே.டி.பி பள்ளியில்' தனது பள்ளிப் படிப்பை முடித்து, ஆந்திர பல்கலைக்கழகத்தின், விசயவாடா 'எஸ்.ஆர்.ஆர் கல்லூரி' மூலம் பட்டம் பெற்றார்.

தொழில்[தொகு]

இவர், புகழ்பெற்ற நடிகர்களான "சூதி-ஜந்தா"வின் ஒரு பாதி, மற்றொன்று சூதி வேலு. இவர் 1970-1980 வரை பிரபலமான வானொலியிலும், நாடகக் கலைஞராக இருந்தார். 1981 ஆம் ஆண்டில் திரையுலகில் நுழைந்த இவர், 1982 இல் நாலுகு ஸ்தம்பலதா என்ற படத்துடன் பிரபலமானார். மாரடைப்பால் தனது 41வது வயதிலேயே இறக்கும் வரை இவர் சுமார் 200க்கும் மேற்பட்டப் படங்களில் நடித்தார்.

வானொலி, நாடக வாழ்க்கை[தொகு]

வீரபத்ராவ் சிறுவயதிலிருந்தே நடிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளி நாட்களில் மேடை நாடகங்களில் நடிப்பார். கல்லூரி நாட்களில், தனது வகுப்புத் தோழராக இருந்த சந்தியாலாவுடன் சேர்ந்தார். இவர்கள் பல்கலைக்கழக அளவில் பல போட்டிகளில் பங்கேற்றனர். இந்த அணி நகைச்சுவை தொடர்பாக திரையுலகிலும் வெற்றி பெற்ற அணிகளில் ஒன்றாக மாறியது.

பட்டப்படிப்புக்குப் பிறகு, நாடகத்தின் மீது விருப்பம் கொண்டு, விசயவாடாவின் அனைத்திந்திய வானொலியில் பணியாளரானார். அங்கு பணிபுரிந்தபோது, "தும்மலப்பள்ளி காளசேத்ரம்", "வேலதண்ட்லா அனுமந்தராய கிரந்தாலயம்" போன்ற பல நாடகங்களை அரங்கேற்றினார். வானொலியில் இருந்து ஒளிபரப்பப்பட்ட பல நாடகங்களிலும் பங்கேற்றார். சி. எஸ். ஆர். ஆஞ்சநேயலு, வின்னகோட்ட இராமண்ணா பந்துலு, நந்தூரி சுப்பாராவ், சி. இராம மோகன் ராவ், உஷா சிறீ, வின்னகோட்டா விஜயராம், இந்திரகாந்தி சிறீகாந்த் சர்மா, பி. பாண்டுரங்க ராவ் (பாண்டுரிங்கா), பெரி காமேசுவர ராவ், கோகா சஞ்சீவா ராவ், ஏ.பி. ஆனந்த் போன்ற புகழ்பெற்ற கலைஞர்களுடன் பணியாற்றினார். பாலத்ரன்பு ரசனிகாந்த ராவ் (இரசனி) இவர் வானொலியில் நுழைவதற்கு கருவியாக உள்ளார். தெலுங்கு மொழியின் 56 எழுத்துக்களையும் தெளிவான தொனியில் சரியான உச்சரிப்புடன் உச்சரிக்க முடிந்தால் மட்டுமே இரசனி தனது ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பார். கொந்தேரு நாடக நிறுவனத்தால் நடத்தப்பட்ட அவரது "கிருட்டிண பக்சம்" என்ற மேடை நாடகம் மிகவும் பிரபலமானது.

திரைப்படக் கலைஞர்[தொகு]

1981ஆம் ஆண்டில் ஜதாரா படத்துடன் தெலுங்குத் திரையுலகில் நுழைந்தார். இருப்பினும், 1982 ஆம் ஆண்டில் சந்திலாவின் நாலுகு ஸ்தம்பலதா திரைப்படத்தின் மூலம் இவர் தொழில்துறையில் கவனத்தை ஈர்த்தார். இவர் தனது நீண்ட உரையாடல்களால் தெலுங்குத் திரையுலகில் பிரபலமானார். 1982 முதல் 1988 வரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். இந்த காலகட்டத்தில், இவர் பல்வேறு வகையான வேடங்களில் நடித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

வீரபத்ர ராவ் 1970 இல் சேகரி என்பவரை மணந்தார். இவருக்கு , ஒரு மகனும், ஒரு மகளும் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது மகள் புற்றுநோயால் 2013 இல் இறந்தார்.

இவர் தெலுங்கு, ஆங்கில இலக்கியத்தில்ம் ஆர்வமுள்ளவராக இருந்தார். வெய் படகாலு, சிறீமத் பாகவதம் போன்ற சில புத்தகங்களை உள்ளடக்கிய இவரது சொந்த நூலகம் இருந்தது. தெலுங்கில் எழுதப்பட்ட நாடகங்களின் பெரிய தொகுப்பும் இவரிடம் இருந்தது. இவர் ஏழைகளுக்காக பெரும் தொகையை நன்கொடையாகப் பயன்படுத்தினார். இவர் ஒரு எளிய வாழ்க்கையை நடத்தினார். மற்றவர்களுக்கு உதவினார்.

இறப்பு[தொகு]

சூப்புலு கலிசின சுபவேளா படத்தில் ஒரு பாடலின் படப்பிடிப்பின் போது, உடல் நலம் பாதிக்கப்பட்டு 1988 சூன் 30 அன்று, மாரடைப்பால் இறந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூதி_வீரபத்ரராவ்&oldid=3527343" இருந்து மீள்விக்கப்பட்டது