உள்ளடக்கத்துக்குச் செல்

சுவாமி நாராயணன் அக்சர்தாம், நியூ ஜெர்சி

ஆள்கூறுகள்: 40°15′11″N 74°34′39″W / 40.25313°N 74.57740°W / 40.25313; -74.57740
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாமி நாராயணன் அக்சர்தாம்
அமைவிடம்
நாடு:ஐக்கிய அமெரிக்கா
மாநிலம்:நியூ செர்சி
அமைவு:இராபின்ஸ்வில் நகரியம்
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:வாஸ்து சாஸ்திரம் மற்றும் பாஞ்சராத்திர சாஸ்திரம்
கல்வெட்டுகள்:ஆன்மீக-பண்பாட்டு வளாகம்
வரலாறு
அமைத்தவர்:மகந்த் சுவாமி மகராஜ், சுவாமி நாராயணன் இயக்கம்
இணையதளம்:https://www.baps.org/Global-Network/North-America/Robbinsville.aspx

சுவாமி நாராயணன் அக்சர்தாம், நியூ ஜெர்சி, ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள இராபின்ஸ்வில் நகரியத்தில் அமைந்துள்ள உலகின் இரண்டாவது பெரிய இந்து சமயக் கோயில் ஆகும். இக்கோயில் 8 அக்டோபர் 2023 அன்று திறந்து வைக்கப்படவுள்ளது.[1] இக்கோயிலின் மூலவர் சுவாமி நாராயண் ஆவார். மேலும் இக்கோயிலில் இராதா கிருஷ்ணன், இராமர்-சீதை மற்றும் சிவன்-பார்வதி ஆகிய தெய்வங்களின் தனிச்சன்னதிகள் உள்ளது.

அமைவிடம்

[தொகு]

இக்கோயில் நியூ யார்க் நகரத்தில் உள்ள டைம்ஸ் சதுக்கத்திற்கு தெற்கே 60 மைல் தொலைவிலும்; வாசிங்டன், டி. சி.க்கு வடக்கே 180 மைல் தொலைவிலும்; நியூ செர்சி நகரத்திற்கு வடமேற்கே 23.5 மைல் தொலைவில் உள்ள இராபின்ஸ்வில் நகரியத்தில் அமைந்துள்ளது.

கட்டிடக் கலை

[தொகு]

183 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இக்கோயில் 2011ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை, அமெரிக்கா முழுவதிலிருந்தும் 12,500 தன்னார்வலர்களின் உதவியுடன், இந்தியச் சிற்பிகளால் வாஸ்து சாஸ்திரம் மற்றும் பாஞ்சராத்திர சாஸ்திரப்படி கட்டப்பட்டது. இது இந்துக்களின் ஆன்மீக-பண்பாட்டு வளாகமாக உள்ளது. இக்கோயிலில் 10 ஆயிரம் தெய்வச் சிற்பங்கள் மற்றும் இந்திய இசைக்கருவிகள் மற்றும் இந்திய நடன வடிவங்கள் கொண்டுள்ளது.[2]

இக்கோயில் வளாகத்தில் சுவாமி நாராயண் மூலவர் ஆவார். இராதா கிருஷ்ணன், இராமர்-சீதை மற்றும் சிவன்-பார்வதி போன்ற தெய்வங்களுக்கு 12 துணைக் கோயில்கள் கோபுரங்களுடன் உள்ளது. இக்கோயில் கட்டுமானத்தில் சுண்ணாம்பு, இளஞ்சிவப்பு மணற்கல், பளிங்குக் கல் மற்றும் கருங்கல் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]