உள்ளடக்கத்துக்குச் செல்

சுல்பிகர் பாபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுல்பிகர் பாபர் (Zulfiqar Babar (பிறப்பு: 10 டிசம்பர், 1978, ஒகாரா, பஞ்சாப் (பாக்கிஸ்தான்) பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.வலதுகை மட்டையாளரான இவர் இடதுகை கழல் திருப்பப் பந்துவீச்சாளர் ஆவார். இவர் பாக்கித்தான் தேசிய அணி. முல்தான் டைகர்ஸ், குவெத்தா பியர்ஸ், நீர் மற்றும் ஆற்றல் நிருவாக அணி, மற்றும் பாக்கித்தான் அ அணி ஆகிய அணிகளில் விளையாடி வருகிறார்.[1]

உள்ளூர்ப் போட்டிகள்

[தொகு]

2009 -10 ஆண்டிற்கான குவைத் -இ-அசாம் கோப்பைக்கான தொடரில் 69 இலக்குகளை 16.42 எனும் சராசரியோடு எடுத்தார். ஆனால் தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை. பின் 2012-13 ஆம் ஆண்டிற்கான தொடரில் 13 போட்டிகளில் 93 இலக்குகளைக் கைப்பற்றினார். இவரின் பந்துவீச்சு சராசரி 17.04 ஆகும். இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பாக்கித்தான் முதலமைச்சர் அணி மற்றும் பாக்கித்தான் அவைத்தலைவர் அணிக்கும் நடைபெற்ற போட்டியில் 22 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இலக்குகளைக் கைப்பற்றினார்.

2016 ஆம் ஆண்டில் பாக்கித்தான் சூப்பர் லீக் தொடரில் கிராண்ட் எலியட்டுடன் இணைந்து பத்தாவது இணைக்கு 63 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் பத்தாவது இணைக்கு அதிக ஓட்டங்கள் எடுத்த இணை எனும் சாதனை படைத்தார்.[2][3] . 2018 -19 ஆண்டிற்கான குவைத் -இ- அசாம் வாகையாளர் கோப்பைகான தொடரில் 6 போட்டிகளில் . 31 இலக்குகளை வீழ்த்தினார். இதன்மூலம் அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.[4]

சர்வதேசப் போட்டிகள்

[தொகு]

2013 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 தொடரில் இவர் அறிமுகமானார். தனது 34 வயதில் முதல் சர்வதேசப் போட்டியில் விளையாடினார். இன்சமாம் உல் ஹக்கிற்கு அடுத்தபடியாக அதிக வயதில் அறிமுகமான துடுப்பாட்ட விரர் இவர் ஆவார். இந்த வயது பிரச்சினைகள் அனைத்தையும் நான் அல்லாவிடத்தில் விட்டு விடுவேன். இந்த வயதில் மற்றவர்கள் பிறவற்றைப் பற்றி யோசிக்கும் வேளையில் நான் பாக்கித்தான் அணிக்காக விளையாடுகிறேன் என அவர் தெரிவித்தார். இந்தப் போட்டியில் 23 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். மேலும் பந்துவீச்சில் 17 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 17* ஓட்டங்களை எடுத்தார். ஆட்டத்தின் இறுதிப் பந்தில் ஆறு ஓட்டங்கள் அடித்து பாக்கித்தான் அணி 2 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.[5] இரண்டாவது போட்டியில் 6 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 11* ஓட்டங்கள் எடுத்தார். பின் பந்துவீச்சில் 37 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார்.[6] மேலும் இந்தத் தொடரில் அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்து தொடர் நாயகன் விருதினையும் வென்றார். இதன்மூலம் அறிமுகப் போட்டியில் தொடர் நாயகன் விருதினை வென்றவர் எனும் சாதனை படைத்தார்.

2013 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் செய்தது. அக்டோபரில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவர் அறிமுகமானார். போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் ஜே பி டுமினி, டு பிளஸ்சி, மற்றும் ரொபின் பீட்டர்சன் ஆகியோரின் இலக்கினை வீழ்த்தினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் அசீம் ஆம்லாமற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகியோரின் இலக்கினை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 7 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2014 ஆம் ஆண்டில் பாக்கித்தான் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்தது. அக்டோபர் 7 இல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அரிமுகமானார்.[7]

சான்றுகள்

[தொகு]
  1. "Zulfiqar Babar". கிரிக்இன்ஃபோ. ஈஎஸ்பிஎன். பார்க்கப்பட்ட நாள் 18 November 2012.
  2. "17th Match: Quetta Gladiators v Peshawar Zalmi at Sharjah, Feb 14, 2016 | Cricket Scorecard | ESPN Cricinfo". Cricinfo. http://www.espncricinfo.com/ci/engine/match/959207.html. 
  3. "Records | Twenty20 matches | Partnership records | Highest partnerships by wicket | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/content/records/305252.html. 
  4. "Quaid-e-Azam Trophy, 2018/19 - Water and Power Development Authority: Batting and bowling averages". பார்க்கப்பட்ட நாள் 22 November 2018.
  5. "1st T20I: West Indies v Pakistan at Kingstown, Jul 27, 2013 - Cricket Scorecard - ESPN Cricinfo".
  6. "2nd T20I: West Indies v Pakistan at Kingstown, Jul 28, 2013 - Cricket Scorecard - ESPN Cricinfo".
  7. "Australia tour of United Arab Emirates, 1st ODI: Australia v Pakistan at Sharjah, Oct 7, 2014". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 October 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுல்பிகர்_பாபர்&oldid=3719178" இலிருந்து மீள்விக்கப்பட்டது