சுர்ஜித் பாதர்
சுர்ஜித் பாதர் ਡਾ. ਸੁਰਜੀਤ ਪਾਤਰ | |
---|---|
![]() | |
பிறப்பு | 14 சனவரி 1945 பாத்தர் காலன், ஜலந்தர் மாவட்டம், பஞ்சாப் |
கல்வி | இலக்கிய முனைவர், குரு நானக் தேவ் பல்கலைக்கழகம் (அமிருதசரசு) |
பணி | எழுத்தாளர், கவிஞர் |
அறியப்படுவது | பஞ்சாபி மொழிக் கவிதைகள் |
சுர்ஜித் பாதர், பஞ்சாபி மொழி எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய கவிதைகள் பொதுமக்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பிரபலமானவை.[1]
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
இவர் இந்திய மாநிலமான பஞ்சாபில் உள்ள ஜலந்தர் மாவட்டத்துக்கு உட்பட்ட பத்தர் காலான் என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர் கபுர்த்தலாவில் உள்ள ரண்தீர் கல்லூரியில் இளநிலைக் கல்வி பயின்றார். பின்னர், பட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் முதுநிலைக் கல்வி பயின்றார். இவர் லுதியாணாவில் பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பஞ்சாபி பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் ஹவா விச்சு லிக்கே ஹரி, பிர்க் அர்ஸ் கரே, ஹனேரே விச்சு சுல்கதி வர்ணமாலா, லப்சான் தி தர்கா, பத்ஜர் தி பாசேப் ஆகிய பஞ்சாபி மொழிக் கவிதைகளை எழுதியுள்ளார்.
இவர் சண்டிகரில் உள்ள பஞ்சாப் இலக்கிய மன்றத்தின் தலைவராகவும் உள்ளார்.
திரைத்துறையில் பங்களிப்பு[தொகு]
இவர் உத்தம் சிங், விதேஷ் ஆகிய பஞ்சாபி மொழித் திரைப்படங்களுக்கான வசனம் எழுதியுள்ளார்.
விருதுகள்[தொகு]
- 1979 - பஞ்சாப் சாகித்திய அகாதமி விருது
- 1993 - ஹனேரே விச் சுல்கதி வர்ணமாலா என்ற நூலுக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றார்
- 1999 - கல்கத்தாவில் உள்ள இந்திய மொழிகளுக்கான இலக்கிய மன்றம் வழங்கிய பஞ்சநாத் விருது
- 2007-2008 ஆனத் கவ் சம்மான்
- 2009 - கே.கே. பிர்லா அறக்கட்டளை வழங்கிய சரஸ்வதி சம்மான் விருது[2]
- 2009 - ஒரிசாவில் உள்ள சம்பல்பூர் பல்கலைக்கழகம் வழங்கிய கங்காதர் தேசிய விருது
- 2012 - இந்திய அரசு வழங்கிய பத்மசிறீ விருது (இலக்கியம்)[3]
- 2014 - குசுமகராஜ் இலக்கிய விருது - 2014[4]
சான்றுகள்[தொகு]
- ↑ Singh, Surjit (Spring–Fall 2006). "Surjit Patar: Poet of the Personal and the Political". Journal of Punjab Studies 13 (1): 265. "His poems enjoy immense popularity with the general public and have won high acclaim from critics.".
- ↑ Jatinder Preet (30 ஏப்ரல் 2010). "Saraswati Samman for Patar". Punjab Panorama. Archived from the original on 2013-11-04. https://web.archive.org/web/20131104201100/http://punjabpanorama.blogspot.in/2010/05/saraswati-samman-for-patar.html. பார்த்த நாள்: 30 ஏப்ரல் 2010.
- ↑ "Padma Awards". pib. 27 ஜனவரி 2013. 27 ஜனவரி 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Punjabi litterateur Surjit Patar conferred Kusumagraj Award". Business Standard. 7 மார்ச் 2014. 8 ஆகஸ்ட் 2015 அன்று பார்க்கப்பட்டது.