சீனித்துளசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சீனித்துளசி
Stevia rebaudiana flowers.jpg
சீனித்துளசி மலர்கள்
உயிரியல் வகைப்பாடு
உலகம்: மெய்க்கருவுயிரி
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஐடிகோத்சு (Eudicots)
தரப்படுத்தப்படாத: அஸ்டரிடிட்ஸ் (Asterids)
வரிசை: அஸ்டேராள்ஸ் (Asterales)
குடும்பம்: சூரியகாந்திக் குடும்பம்
சிற்றினம்: ஐபடோரியே (Eupatorieae)
பேரினம்: சிடீவியா
இனம்: எஸ். ரெபாடியானா
இருசொற் பெயரீடு
சீனித்துளசி
(பெர்டோனி)

சீனித்துளசி அல்லது சர்க்கரைத் துளசி (Stevia rebaudiana) என்பது; சூரியகாந்தி குடும்ப அங்கத்தின் ஒரு பிரிவான சிடீவியா எனப்படும் தாவரவியல் குடும்பத்தின் ஒரு பேரினம் ஆகும். இனிப்புத் தன்மையைக்கொண்டுள்ள இத்தாவரத்தை, பொதுவாக மிட்டாய் இலை (candy leaf), இனிப்பு இலை (sweet leaf) மற்றும் சர்க்கரை இலை (sugar leaf) எனவும் பிராந்தியப் பெயரால் அழைக்கப்படுகிறது.[1]

தென் அமெரிக்கா நாடுகளான பிரேசில், மற்றும் பரகுவை போன்ற மென்மையான ஈரப்பதம் மிகுந்த பிராந்தியங்களில் செழித்து வளரக்கூடிய இந்த சீனித்துளசி, ஈரமான சூழ்நிலையில் வளர்ந்தாலும், இதன் வேர்ப் பகுதியில் நீர்த்தேக்கம் உகந்ததல்ல. சீனித்துளசி எனும் இத்தாவரத்தை, இனிப்பு இலைக்காக வளர்க்கப்படுகிறது. சுவையூட்டும் பொருட்களின் ஆதாரமாக உள்ள இந்த தாவரத்தை, பல்வேறு வர்த்தக பெயர்களில் விற்கப்படுகின்றன. சர்க்கரைப் பதிலீடு சரக்காக பயன்படுத்தப்படும் அவை, சிடீவியா (stevia) என பொதுவாக அறியப்படுகின்றன. பல்வேறு இனிப்பு பண்டங்கள் உற்பத்தி செய்ய உதவும் சிடீவியால் கிளைகோசைடு எனும் மூலப்பொருள் சீனித்துளசியின் இலையிலிருந்தே பெறப்படுகிறது. மேலும், முக்கியமாக சிடீவோசைடு (stevioside) மற்றும் ரெபாடியோசைடு (rebaudioside) போன்ற மூலப்பொருட்களும் இதிலிருந்தே கிடைக்கப்பெறுகிறது, இவை சர்க்கரையின் இனிப்பு சுவையைவிடவும் 250 - 300 மடங்கு கூடுதலாக உள்ளது குறிப்பிடத்தக்கது. [2]

வரலாறு மற்றும் பயன்பாடு[தொகு]

தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இந்த சீனித்துளசி, பிரேசில் மற்றும் பரகுவைச் சேர்ந்த குவாரனி எனும் பூர்வீகக் குடிகளால் சுமார் 1500 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்ததாக கருதப்படுகிறது.[3]

சான்றுகள்[தொகு]

  1. "Sugar Leaf 'Stevia' live plan". gonzalezagrogardens (ஆங்கிலம்) (© 2017). பார்த்த நாள் 2017-06-17.
  2. "Stevia Leaf Powder". taoorganics.com (ஆங்கிலம்) (© OCTOBER 6, 2015). பார்த்த நாள் 2017-06-18.
  3. "Stevia rebaudiana". dulcerodrigues.info (ஆங்கிலம்) (© 2000 - 2016). பார்த்த நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனித்துளசி&oldid=2312009" இருந்து மீள்விக்கப்பட்டது