சிலாசு

ஆள்கூறுகள்: 35°25′10″N 74°05′40″E / 35.41944°N 74.09444°E / 35.41944; 74.09444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலாசு
چلاس
பாக்கித்தானால் நிர்வகிக்கப்படும் ஓர் நகரம்
சிலாசு அருகே பாயும் சிந்து ஆறு
சிலாசு அருகே பாயும் சிந்து ஆறு
Map
சிலாசின் வரைபடம்
சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் உள்ள பாக்கித்தானால் நிர்வகிக்கப்படும் கில்கிட்-பால்டிஸ்தானைக் காட்டும் வரைபடம்
சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் உள்ள பாக்கித்தானால் நிர்வகிக்கப்படும் கில்கிட்-பால்டிஸ்தானைக் காட்டும் வரைபடம்
ஆள்கூறுகள்: 35°25′10″N 74°05′40″E / 35.41944°N 74.09444°E / 35.41944; 74.09444
நிர்வகிக்கும் நாடுபாக்கித்தான்
தன்னாட்சி பெற்ற மாநிலம்வடக்கு நிலங்கள்
மாவட்டம்தயமர்
ஏற்றம்
1,265 m (4,150 ft)
மக்கள்தொகை
 (2017-2017)
 • மொத்தம்2,14,000
மொழிகள்
 • அலுவல்உருது, சினா[1]
நேர வலயம்ஒசநே+5 (பாக்கித்தான் சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
14100 – 1xx[2]

சிலாசு (Chilas ) என்பது சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் பாக்கித்தானின் நிர்வாகத்தில் உள்ள கில்கிட்-பால்டிஸ்தானில் உள்ள ஒரு நகரமாகும்.தயமர் பிரிவின் பிரதேச தலைநகரமான இது சிந்து ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது பட்டுப்பாதையின் ஒரு பகுதியாகும். இது காரகோரம் நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை என் 90 ஆல் தென்மேற்கில் இஸ்லாமாபாத் மற்றும் பெசாவருடன் கைபர் பக்துன்வாவின் அசாரா மற்றும் மலகண்ட் பிரிவுகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. . வடக்கே, சிலாசு சிஞ்சியாங்கிலுள்ள தஷ்குர்கன் மற்றும் கஷ்கர் நகரங்களுடன், கில்கிட், அலியாபாத், சஸ்ட் மற்றும் குஞ்செராப் கணவாய் வழியாக இணைக்கிறது.

வரலாறு[தொகு]

சிலாசு, கில்கிட்-பால்டிஸ்தானின் கீழ் வருகிறது. இது தியாமிர் மாவட்டத்தின் தலைமையகம் ஆகும். [3] வானிலை கோடையில் வெப்பமாகவும் வறண்டதாகவும் குளிர்காலத்தில் வறண்ட மற்றும் குளிராகவும் இருக்கும். காரகோரம் நெடுஞ்சாலை மற்றும் ககன் பள்ளத்தாக்கு மற்றும் பாபுசர் கணவாய் வழியாகவும் இதை அடையலாம். சிலாசு சிந்து ஆற்றின் இடது கரையில் உள்ளது. அழகிய தேவதை புல்வெளிகள் தேசியப் பூங்கா மற்றும் உலகின் ஒன்பதாவது உயரமான சிகரமான நங்க பர்வதம் ஆகியவை இங்கு அமைந்துள்ளன.

காரகோரம் சர்வதேச பல்கலைக்கழகம் சமீபத்தில் சிலாசில் ஒரு துணை வளாகத்தைத் திறந்தது.

மக்கள் தொகை[தொகு]

சிலாசிகள் சினா மொழி பேசுபவர்களாக உள்ளனர். சில பஷ்தூன் குடியேறிகள் பஷ்தூ பேசுகிறார்கள். உருது மற்றும் சில ஆங்கிலமும் இங்கு பேசப்படுகிறது.

கல்வெட்டுகள்[தொகு]

சிலாசு அருகே உள்ள போதிசத்துவர்களைச் சித்தரிக்கும் பௌத்த கல்வெட்டுகள். [4]
கரோஷ்டி எழுத்து சுமார் கி.பி. 300-350.

பாக்கித்தானின் கில்கிட்-பால்டிஸ்தானில் உள்ள காரகோரம் நெடுஞ்சாலையில் 50,000 க்கும் மேற்பட்ட பௌத்தக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை கன்சா மற்றும் சாட்டியலுக்கு இடையே உள்ள பத்து முக்கிய இடங்களில் குவிந்துள்ளன. தேவால்ட் ஆகியோர் 1984 இல் ஒரு புத்த மடாலயத்தின் எச்சங்களை கண்டுபிடித்தனர். பல்வேறு படையெடுப்பாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் வணிகப் பாதையில் சென்ற யாத்ரீகர்கள் மற்றும் உள்ளூர் மக்களால் இது செதுக்கப்பட்டது. முந்தையது கிமு 5000 மற்றும் 1000 க்கு இடையில், ஒற்றை விலங்குகள், முக்கோண மனிதர்கள் மற்றும் வேட்டையாடும் காட்சிகளைக் காட்டுகிறது. இதில் விலங்குகள் சில நேரங்களில் வேட்டையாடுபவர்களை விட பெரியதாக இருக்கிறாது. இந்த செதுக்கல்கள் கல் கருவிகளால் பாறைகளில் குத்தப்பட்டு, அவற்றின் வயதை நிரூபிக்கும் தடிமனான பாட்டினாவால் மூடப்பட்டுள்ளது. பிந்தைய - பெரும்பாலும் பௌத்த - சிற்பங்கள் சில நேரங்களில் கூர்மையான உளி கொண்டு செதுக்கப்பட்டுள்ளன. [5]

கரோஷ்டியில் "கபோவா" (அல்லது கம்போவா) என்பது சிலாசிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறிய நினைவு கரோஷ்டி கல்வெட்டில் தோன்றுகிறது. பாக்கித்தானின் பாக்கித்தானிய அறிஞர், தொல்லியல் ஆய்வாளர், வரலாற்றாசிரியர் மற்றும் மொழியியலாளருமான அக்மத் அசன் தானிஎன்பவரால் இந்த கல்வெட்டு படியெடுக்கப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டது. தானியின் கூற்றுப்படி, கல்வெட்டிலுள்ள கபோவா அல்லது கம்போவா என்பது காம்போஜ சமசுகிருத படிவமாகும். [6] [7] எனவே, சிலாசு ஒரு பண்டைய கம்போஜ சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம்.

குறிப்புகள்[தொகு]

 • Jettmar, Karl & Thewalt, Volker (1985): Zwischen Gandhāra und den Seidenstraßen: Felsbilder am Karakorum Highway: Entdeckungen deutsch-pakistanischer Expeditionen 1979-1984. 1985. Mainz am Rhein, Philipp von Zabern.
 • Jettmar, Karl (1980): Bolor & Dardistan. Karl Jettmar. Islamabad, National Institute of Folk Heritage.
 • Leitner, G. W. (1893): Dardistan in 1866, 1886 and 1893: Being An Account of the History, Religions, Customs, Legends, Fables and Songs of Gilgit, Chilas, Kandia (Gabrial) Yasin, Chitral, Hunza, Nagyr and other parts of the Hindukush, as also a supplement to the second edition of The Hunza and Nagyr Handbook. And An Epitome of Part III of the author's "The Languages and Races of Dardistan." First Reprint 1978. Manjusri Publishing House, New Delhi.
 • Rod MacNeil: The Fight at Chilas (1893). Soldiers of the Queen (journal of the Victorian Military Society). March 1999.

மேற்கோள்கள்[தொகு]

 1. "INDO-IRANIAN FRONTIER LANGUAGES". Encyclopaedia Iranica. 15 November 2006. பார்க்கப்பட்ட நாள் 2015-11-06.
 2. "Post Codes". Pakistan Post Office. பார்க்கப்பட்ட நாள் 22 September 2017.
 3. Pamir Times August 2, 2012
 4. Twist, Rebecca L. (Art Department, Pacific University, Forest Grove, OR 97123, USA) (2018). "Images of the Crowned Buddha along the Silk Road: Iconography and Ideology". Humanities 7 (92): 10. doi:10.3390/h7040092. https://www.mdpi.com/2076-0787/7/4/92/pdf-vor. 
 5. See: Volker Thewalt, Stupas und verwandte Bauwerke in Felsbildern am oberen Indus, Wiesenbach 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-9802753-4-7
 6. Chilas: The City of Nanga Parvat (Dyamar), 1983, p 120, Ahmad Hasan Dani - Chilās Region (Pakistan)
 7. See also: The Name 'Cambyses', Pakistan Archaeology, 1991, p 123, Wojciech Skalmowski, Pakistan Dept. of Archaeology & Museums - Pakistan.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலாசு&oldid=3857534" இலிருந்து மீள்விக்கப்பட்டது