மூலக்கூற்று உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: be:Малекулярная біялогія
No edit summary
வரிசை 14: வரிசை 14:


[[பகுப்பு:உயிரியல்]]
[[பகுப்பு:உயிரியல்]]

{{உயிரியல்-பின் இணைப்புகள்}}


[[ar:علم الأحياء الجزيئي]]
[[ar:علم الأحياء الجزيئي]]

21:04, 18 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

மூலக்கூற்று உயிரியல் என்பது, மூலக்கூற்று மட்டத்திலான உயிரியல் குறித்த ஆய்வு ஆகும். இத்துறை, உயிரியல், வேதியியல் போன்ற துறைகளின் பிற பகுதிகளுடன், குறிப்பாக மரபியல், உயிர்வேதியியல் போன்ற துறைகளுடன் பொது ஆய்வுப் பரப்பைக் கொண்டுள்ளது. மூலக்கூற்று உயிரியல், பெரும்பாலும், பல்வேறு உயிரணு முறைமைகளுக்கு இடையேயான இடைவினைகளைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்துகின்றது. இது, டி.என்.ஏ (DNA- ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்), ரைபோ கரு அமிலம் (RNA), புரதத் தொகுப்பு ஆகியவற்றுக்கிடையிலான தொடர்புகளுடன், இத்தொடர்புகள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றன என்பதை அறிந்துகொள்வதையும் உள்ளடக்குகின்றது.

ஏனைய உயிரியல் அறிவுடனான தொடர்பு

உயிர்வேதியியல், மரபியல், மூலக்கூற்று உயிரியல் ஆகியவற்றிற்கிடையிலான தொடர்பின் திட்ட வரைபடம்

. மூலக்கூற்று உயிரியலுக்கான தனியான தொழிநுட்ப முறைகள் இருப்பினும், அவை உயிர்வேதியியல், மரபியல் தொழில்நுட்ப முறைகளுடன் இணைந்தே இருக்கும். இவற்றை தனித்தனியாக வரைவிலக்கணப்படுத்துவது கடினம்.

அனேகமாக மூலக்கூற்று உயிரியல் அறிவானது அளவின் அடிப்படையில் (quatitative) இருக்கிறது. அத்துடன் அண்மைக்காலமாக இந்த அறிவியல் உயிர் தகவலியல், அளவீட்டு உயிரியல் என்பதை அடிப்படையாகக் கொண்டே விரிவடைந்து வருகிறது. இதனடிப்படையில், 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பங்களிலிருந்து, மரபணுவின் கட்டமைப்பு, தொழிற்பாடு தொடர்பான மூலக்கூற்று மரபியல் பகுதி மிக விரைவாக வளர்ந்து வந்துள்ளது.

தொடர்ந்தும் உயிரியலின் வெவ்வேறு பிரிவுகள் மூலக்கூற்று அடிப்படையைக் கொண்டு விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. உயிரணு உயிரியல் (Cell Biology), மேம்பாட்டு உயிரியல் (Developmental Biology) போன்ற பிரிவுகள் நேரடியாகவும், தாவர, விலங்குகளில் இனங்கள் (Species) பற்றிய அறிவு, அவற்றின் கூர்ப்புபற்றிய (Evolution) அறிவு, இவற்றையெல்லாம் உள்ளடக்கிய தொகுதி வரலாற்றுக்குரிய (Phylogenetics) அறிவு யாவுமே, மறைமுகமாக இந்த வரலாற்று இயல்புகளின் அடிப்படையில் இந்த மூலக்கூற்று உயிரியல் அறிவையே நோக்கி இருக்கிறது.

மூலக்கூற்று உயிரியலின் தொழில்நுட்பங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலக்கூற்று_உயிரியல்&oldid=955963" இலிருந்து மீள்விக்கப்பட்டது