"குதிர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
169 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
== தமிழ்நாட்டில் குதிர்கள் ==
[[File:தொம்பை மலைவாழ் மக்களின் கூலக் கிடங்கு! .jpg|thumb|கல்ராயன் மலைவாழ் மக்களின் குதிர். தொம்பை என்று அம்மக்களால் அழைக்கப்படும். இதை ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் அமைத்துள்ளனர்.|link=Special:FilePath/தொம்பை_மலைவாழ்_மக்களின்_கூலக்_கிடங்கு!_.jpg]]
'''குதிலரை''' அல்லது '''குதிர்''' என்பது தமிழக மக்கள் வீட்டினுள் வைத்திருக்கும் சிறிய கூலத் தேக்கக் கிடங்காகும். இதில் நெல், அரிசி முதலிய கூலங்களைத் தேக்கி வைப்பர். இவை மண்ணால் ஆன உறைகளைக் கொண்டு செய்யப்பட்டவை. களிமண், வரகு வைக்கோல் இரண்டையும் சேர்த்து இதைச் செய்வார்கள். இவை ஏறக்குறைய ஆறு அடி உயரம்வரை செய்யப்படுவதுண்டு. ஓர் உறைக்கும் அதன் மீதுள்ள அடுத்த உறைக்கும் இடையே உள்ள இடுக்குகளில் சேறு பூசப்படும். அனைத்து உறைகளும் அமைக்கப்பட்ட பிறகு அதன் மீது முழுமையாக சாணம் பூசப்படும். குதிரின் மேற்பகுதியை மூடுவதற்குப் பிரம்பால் தட்டு போன்ற வட்டமான மூடியை வைத்திருப்பார்கள். வைக்கோல் விரவிச் செய்த மண்தாட்டும் பயன்ப்டுவதுண்டு. இதனால் கூலங்கள் (தானியங்கள்) எலியால் சேதமடையாது. அவ்வப்போது தேவைக்கேற்பக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூலத்தை வெளியில் எடுக்க, குதிரின் கீழ்ப் பகுதியில் ஒரு துளை இருக்கும். அதைத் தேங்காய்ச் சிரட்டையையும் மண்ணையும் வைத்து மூடிவைப்பர்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/general/environment/article22470677.ece | title=வளம் சேர்க்கும் வேளாண் பொருட்கள்! | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 சனவரி 20 | accessdate=20 சனவரி 2018 | author=என். முருகவேல்}}</ref> தமிழ்நாட்டின் சிலபகுதிகளில் 'இருவாசல்' என்ற பெயரும் அழைக்கப்படுகிறதுஇதற்க்கு உண்டு. மேலும் கீழும் இரண்டு வாசல் உள்ளதால் இப்பெயர் காரணமாக இருக்கலாம்.
 
===பயன்பாடு ===
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2929213" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி