சல்மான் ருஷ்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சல்மான் ருஷ்டி

சல்மான் ருஷ்டி
பிறப்பு அகமத் சல்மான் ருஷ்டி
19 சூன் 1947 (1947-06-19) (அகவை 75)
மும்பை, இந்தியா
தொழில் எழுத்தாளர்
நாடு ஐக்கிய இராச்சியம்
கல்வி நிலையம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
இலக்கிய வகை மாய யதார்த்தவாதம்
கருப்பொருட்கள் விமர்சனம், பயண இலக்கியம்
துணைவர்(கள்) கிளாரிசா லுவார்டு (1976–1987)
மாரியன் விக்கின்சு (1988–1993)
எலிசபெத் வெஸ்ட் (1997–2004)
பத்மா லட்சுமி (2004–2007)

சர் அகமத் சல்மான் ருஷ்டி (Sir Ahmed Salman Rushdie, பி ஜூன் 19, 1947) இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர் ஆவார். 1981 இல் வெளிவந்த இவரின் இரண்டாம் புதினம் "மிட்னைட்ஸ் சில்ட்ரென்" காரணமாக இவர் பெரும் புகழுக்கு ஆளானார். இப்புதினம் புக்கர் பரிசு வென்றுள்ளது. இவரது புதினங்கள் இந்திய தீபகற்பம்|இந்தியச் சூழலில் அமைந்துள்ளன. இவரது இலக்கிய வகை மாய யதார்த்தவாதம் என்ற தன்மையிலானது. கிழக்கு மற்றும் மேற்கு உலகங்களிடையே உள்ள தொடர்புகள் தாக்கங்கள் மற்றும் குடிப்பெயர்வுகளை தமது கதைக்களனாகக் கொண்டுள்ளார்.

1988இல் இவரின் நான்காம் புதினம், த சாத்தானிக் வெர்சஸ், வெளிவந்தது. இப்புதினம் இஸ்லாமைப் பழி தூற்றுகிறது என்று கூறி உலகில் பல முஸ்லிம்கள் ருஷ்டியுக்கு எதிராகப் போராட்டம் செய்துள்ளனர். ஈரானின் தலைவர் அயத்தொல்லா கொமெய்னி ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று பெப்ரவரி 14, 1989 அன்று ஒரு பத்வா வெளியிட்டுள்ளார். இதனால் ருஷ்டிக்கு பிரித்தானிய காவல்துறை பாதுகாப்பு கொடுத்துள்ளது. 2008 வரை எவரும் ருஷ்டியைக் காயப்படுத்தவில்லை, ஆனால் ஜப்பானில் இப்புதினத்தை மொழி பெயர்ப்பு செய்தவர் 1991 இல் கொல்லப்பட்டார்.

2007ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசி இவரது இலக்கியச் சேவைக்காக "நைட் பேச்சிலர்" என்ற சர் பட்டம் வழங்கியது.[1] பிரான்சின் கலை மற்றும் எழுத்திற்கான கௌரவ அமைப்பில் இவருக்கு கமாண்டர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.2007இல் அட்லான்டா, ஜோர்ஜியாவின் எமரி பல்கலைக்கழகத்தில் சிறந்த எழுத்தாளர் என்ற ஐந்தாண்டு பதவியில் ஏறினார்[2]. 2008இல் அமெரிக்க கலை மற்றும் எழுத்து அகாடெமியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். டைம்சு இதழ் 1945க்குப் பிறகான 50 மிகச்சிறந்த பிரித்தானிய எழுத்தாளர்களில் இவரைப் பதின்மூன்றாவது இடத்தில் மதிப்பிட்டுள்ளது.[3]

இவரது அண்மைய புதினம் லூக்கா அண்ட் ஃபயர் ஆஃப் லைஃப் நவம்பர் 2010இல் வெளியாகியுள்ளது. தனது நினைவுக்குறிப்புகளை எழுதப்போவதாக அறிவித்துள்ளார்.[4]

தாக்கங்கள்[தொகு]

குயுந்தர் கிராஸ், கபிரியேல் கார்சியா மார்க்கேஸ், இட்டாலோ கால்வினோ, விளாடிமிர் நபோக்கோவ், ஜேம்ஸ் ஜோய்ஸ், ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ், தாமஸ் பின்ச்சன், மிக்கைல் புல்கக்கோவ்

ஜெய்ப்பூர் இலக்கிய விழா[தொகு]

2012ஆம் ஆண்டில் சனவரி 20 – 24 நாட்களில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் ருஷ்டி கலந்து கொள்வதாக இருந்தது. இந்திய இசுலாமிய அமைப்புக்கள் பத்வா வழங்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இந்தியா வர நுழைவிசைவு வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் இந்தியா வந்த ருஷ்டி தமக்கு கொலை மிரட்டல் இருப்பதாக ராசத்தான் காவல்துறை கூறி பயணத்தை கைவிட்டார்.இருப்பினும் இவரது சர்ச்சைக்குரிய சாத்தானிக் வெர்சஸ் என்ற நூலிலிருந்து சில பகுதிகளை ஹரி குன்ஸ்ரு, அமிதவா குமார், ஜீத் தாயில், ருசிர் ஜோஷி என்ற எழுத்தாளர்கள் பேசியதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனையடுத்து நால்வரும் விழாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The UK Honours System — Queen's birthday list 2007" (PDF). Ceremonial Secretariat, Cabinet Office. 2007. 27 ஜூன் 2007 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 28 June 2007 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Salman Rushdie to Teach and Place His Archive at Emory University". Emory University. 6 டிசம்பர் 2006 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 July 2007 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. (5 January 2008). The 50 greatest British writers since 1945. The Times. Retrieved on 2010-02-01.
  4. Hoyle, Ben (17 July 2010). "Rushdie to write his lost chapter". http://www.theaustralian.com.au/news/world/rushdie-to-write-his-lost-chapter/story-e6frg6so-1225893232608. 
  5. ஜெய்ப்பூர் இலக்கிய விழா-ருஷ்டி புத்தகத்தை வாசித்த 4 எழுத்தாளர்கள் வெளியேற உத்தரவு! ஒன் இந்தியா செய்திவலைத்தளம், பார்வையிடப்பட்ட நாள் சனவரி,23, 2012
  6. Salman Rushdie to address Jaipur Literature Festival via video conference பரணிடப்பட்டது 2012-01-24 at the வந்தவழி இயந்திரம் IBN LIve பார்வையிடப்பட்ட நாள் சனவரி,23, 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்மான்_ருஷ்டி&oldid=3243341" இருந்து மீள்விக்கப்பட்டது