ஜெய்ப்பூர் இலக்கிய விழா
Jaipur Literature Festival | |
---|---|
வகை | இலக்கிய விழா |
அமைவிடம்(கள்) | ஜெய்ப்பூர், இந்தியா |
இயக்கத்திலுள்ள ஆண்டுகள் | 2006-நடப்பு |
துவக்கம் | 2006 |
வலைத்தளம் | |
http://jaipurliteraturefestival.org/ |
ஜெய்ப்பூர் இலக்கிய விழா (Jaipur Literature Festival) 2006ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வெளிர்சிவப்பு வண்ண நகரம் எனப் பெயர்பெற்றுள்ள இராசத்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் நடைபெறும் இலக்கிய விழாவாகும்.[1][2] இங்குள்ள டிக்கி அரண்மனை ஓட்டல் விழா மையமாகத் திகழ்கிறது. இவ்விழா இந்தியாவில் மட்டுமன்றி ஆசியாவிலேயே பெரும் நிகழ்வாக இளங்குகிறது.[3] நகரத்தின் மையத்திலுள்ள டிக்கி ஓட்டலின் அரங்கத்திலும் பூங்காக்களிலும் சனவரி மாதத்தில் நடைபெறும் இந்த விழாவில் இராசத்தானிய, இந்திய மற்றும் பன்னாட்டுப் படைப்புகள் கொண்டாடப்படுகின்றன.
இந்த விழாவினை டீம்வொர்க் தயாரிப்பின் சஞ்சய் ராய் உருவாக்கிட எழுத்தாளர்கள் நமீதா கோகலே மற்றும் வில்லியம் டால்ரிம்பிள் விழா இயக்குநர்களாக உள்ளனர். ஃபெய்த் சிங் நிறுவிய ஜெய்ப்பூர் விரசத் பவுண்டேசன் இதற்கு முனைப்பாக விளங்கியது.[4] ஜெய்ப்பூர் மரபுடமை பன்னாட்டு விழாவின் அங்கமாக 2006ஆம் ஆண்டு துவங்கிய இவ்விழா 2008ஆம் ஆண்டிலேயே தனது சொந்த வலிமையில் தனித்து இயங்கக்கூடிய ஒரு விழாவாக உதவியது.[1][5] இந்த பவுண்டேசனின் சமூக இயக்குநர் வினோத் ஜோஷி இவ்விழாவின் மண்டலப் பரிந்துரையாளராக உள்ளார். விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் கட்டணமில்லாத இலவச நிகழ்வுகளாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Writes of passage". Hindustan Times. 2008-01-30 இம் மூலத்தில் இருந்து 2008-10-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081020092621/http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?id=0640ff75-70ec-460d-8d06-a9bfc6d124aa. பார்த்த நாள்: 2008-04-23.
- ↑ Literacy in India & the Jaipur Literature Festival, January 25th, 2010. "Today [Jan 25, 2010] marks the end of the 5th annual Jaipur Literature Festival .. First organized in 2005.."
- ↑ மிராண்டா செய்மோர் ,த மெயில், ஞாயிறு ,ஆகத்து 10, 2008 - "the grandest literary Festival of them all"
- ↑ "In the throes of joy". The Hindu. 2006-01-20 இம் மூலத்தில் இருந்து 2008-10-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081020084454/http://www.hindu.com/fr/2006/01/20/stories/2006012002190400.htm. பார்த்த நாள்: 2008-08-12.
- ↑ "Looking for something special? Try treasure hunting in India". KiwiCollection.com. Archived from the original on 2008-06-02. பார்க்கப்பட்ட நாள் 2008-04-22.
வெளியிணைப்புகள்
[தொகு]- Jaipur Literature Festival official website
- Jaipur Literature Festival Website பரணிடப்பட்டது 2010-10-01 at the வந்தவழி இயந்திரம்
- In Jaipur, the Indian Book Market Comes Into Its Own, 2010 பரணிடப்பட்டது 2012-01-24 at the வந்தவழி இயந்திரம் TIME
- Jaipur Literature Festival: Bigger, yes, but better?
- Jaipur Literature Festival Registrations பரணிடப்பட்டது 2012-01-21 at the வந்தவழி இயந்திரம்