சமோவான் விசிறிவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Samoan fantail
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
ரைபிதுரிடே
பேரினம்:
ரைபிதுரா
இனம்:
R. nebulosa
இருசொற் பெயரீடு
Rhipidura nebulosa
Peale, 1848

சமோவான் விசிறிவால் (ரைபிதுரா நெபுலோசா) என்பது ரைபிதுரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவைசிற்றினம் ஆகும். இது சமோவாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இது உபோலு மற்றும் சவாய் தீவுகளில் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

சமோவான் விசிறிவாலின் இறகுகள் பெரும்பாலும் அடர் சாம்பல்-பழுப்பு நிறத்தில் காணப்படும். வாலின் அடிப்பகுதி வெள்ளை நிறத்திலும், கருப்பு வால் மற்றும் வெளிர் (வெள்ளை அல்லது வெளிறிய புகை) தொண்டையுடன் காணப்படும். கண்களுக்குப் பின்னால் வெண் புள்ளி உள்ளது. மற்ற விசிறிவால்களைப் போல, சமோவான் விசிறிவால் பெரும்பாலும் நீண்ட வாலை விசிறியைப் போல விரிக்கிறது. சில நேரங்களில் மற்ற பறவைகளின் குரல்களைப் போன்று ஒலி எழுப்பும்.[2]

பரவல்[தொகு]

சமோவான் விசிறிவால் உபோலு தீவில் பொதுவானதாகவும் பரவலாகவும் காணப்படுகிறது. சவாய் தீவில் வரையறுக்கப்பட்ட பரவலைக் கொண்டுள்ளது.[3]

இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மழைக்காடுகளை இவை விரும்புகிறது. ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட நிலப்பரப்புகளிலும் (விளைநிலங்கள், தோட்டங்கள்) காணப்படும்.[2]

வகைபிரித்தல்[தொகு]

பன்னாட்டு பறவையிலாளர்கள் சங்கத்தின் தகவலின் படி இரண்டு அங்கீகரிக்கப்பட்ட துணையினங்கள் உள்ளன.[4]

  • ரை. நெ. அல்டெரா மேயர், 1931
  • ரை. நெ. நெபுலோசா பீலே, 1849

சமோவான் விசிறிவால் (ரை. நெபுலோசா) இதனுடன் ஒரு பெரும் சிற்றினத்தை உருவாக்குகிறது:[5]

  • பழுப்பு விசிறிவால் (ரை. ட்ரோனேய்)
  • மகிரா விசிறிவால் (ரை. டெனெப்ரோசா)
  • ரென்னெல் விசிறிவால் (ரை. ரெனெல்லியானா)
  • கோடுடைய விசிறிவால் (ரை. வெர்ரோக்சி)
  • கடவு விசிறிவால் (ரை. பெர்சோனாடா)

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Rhipidura nebulosa". IUCN Red List of Threatened Species 2016: e.T22706878A94094907. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22706878A94094907.en. https://www.iucnredlist.org/species/22706878/94094907. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. 2.0 2.1 "Samoan Fantail". Ebird (in ஆங்கிலம்).
  3. del Hoyo, J.; Elliott, A.; Christie, D. 2006.
  4. Gill F., Donsker D. & Rasmussen P. (Eds.
  5. Tvardikova K. (2022). "Rhipidura drownei Gould, 1843". New Guinea Birds online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமோவான்_விசிறிவால்&oldid=3929596" இலிருந்து மீள்விக்கப்பட்டது