பன்னாட்டு பறவையியலாளர்கள் சங்கம்
சுருக்கம் | IOU |
---|---|
மைய அமைப்பு | பிரதிநிதித்துவக் குழு & பன்னாட்டு பறவையியலாளர்கள் மாநாடு |
சார்புகள் | பன்னாட்டு உயிரியல் அறிவியலாளர் சங்கம் |
வலைத்தளம் | http://www.internationalornithology.org/ |
முன்னாள் பெயர் | பன்னாட்டு பறவையியலாளர்கள் குழு |
பன்னாட்டு பறவையியலாளர்கள் சங்கம் (International Ornithologists' Union) என்பது முன்னர் பன்னாட்டு பறவையியல் குழு என்று அழைக்கப்பட்டது. இது சுமார் 200 பன்னாட்டுப் பறவையியல் வல்லுநர்களை உறுப்பினராகக் கொண்ட குழுவாகும். பன்னாட்டு பறவையியல் மாநாடு மற்றும் இதன் நிலைக்குழுக்களால் மேற்கொள்ளப்படும் பிற பன்னாட்டு பறவையியல் நடவடிக்கைகளுக்கு இந்த அமைப்பு பொறுப்பாகும்.
பன்னாட்டு பறவையியல் மாநாடு
[தொகு]பன்னாட்டு பறவையியல் மாநாடு என்பது தொடர்ச்சியாக நடைபெறும் பறவையியல் வல்லுநர்களின் பழமையான மற்றும் மிகப்பெரிய பன்னாட்டுக் கூடுதலாகும். இது பன்னாட்டு பறவையியலாளர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதன் முதல் கூட்டம் 1884-ல் நடைபெற்றது. இரண்டாம் உலகப் போரின் போதும் அதற்குப் பிந்தைய காலத்திலும் நடைபெறாமல் போன இரண்டு கூட்டங்களைத் தவிர, ஒழுங்கற்ற முறையில் நடைபெற்ற கூட்டங்கள், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 1926லிருந்து நடைபெறுகிறது.
கூட்டங்கள்
[தொகு]- 1884: வியன்னா, ஆஸ்திரியா
- 1891: புடாபெஸ்ட், ஹங்கேரி
- 1900: பாரிஸ், பிரான்ஸ்
- 1905: லண்டன், ஐக்கிய இராச்சியம்
- 1910: பெர்லின், ஜெர்மனி
- 1926: கோபன்ஹேகன், டென்மார்க்
- 1930: ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து
- 1934: ஆக்ஸ்போர்டு, ஐக்கிய இராச்சியம்
- 1938: ரூவன், பிரான்ஸ்
- 1950: உப்சாலா, ஸ்வீடன்
- 1954: பேசெல், சுவிட்சர்லாந்து
- 1958: ஹெல்சின்கி, பின்லாந்து
- 1962: இதாக்கா, நியூ யோர்க், அமெரிக்கா
- 1966: ஆக்ஸ்போர்டு, ஐக்கிய இராச்சியம்
- 1970: டென் ஹாக், நெதர்லாந்து
- 1974: கான்பரா, ஆத்திரேலியா
- 1978: பெர்லின், ஜெர்மனி
- 1982: மாஸ்கோ, சோவியத் யூனியன்
- 1986: ஒட்டாவா, கனடா
- 1990: கிறைஸ்ட்சேர்ச், நியூசிலாந்து
- 1994: வியன்னா, ஆத்திரியா
- 1998: டர்பன், தென்னாப்பிரிக்கா
- 2002: பெய்ஜிங், சீனா
- 2006: ஆம்பர்கு, ஜெர்மனி
- 2010: காம்போஸ் டோ ஜோர்டாவோ, பிரேசில்
- 2014: டோக்கியோ, ஜப்பான்
- 2018: வான்கூவர், கனடா
- 2022: டர்பன், தென் ஆப்பிரிக்கா
மேலும் பார்க்கவும்
[தொகு]- உலகின் பறவைகள்: பரிந்துரைக்கப்பட்ட ஆங்கிலப் பெயர்கள், ஐஓசி சார்பாக ஃபிராங்க் கில் மற்றும் மின்டர்ன் ரைட் எழுதிய புத்தகம்.