கோவா கலை மற்றும் இலக்கிய விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவா கலை மற்றும் இலக்கிய விழா (GALF)
வகைஇலக்கிய திருவிழா
கலை திருவிழா
அமைவிடம்(கள்)சர்வதேச மையம், கோவா (ICG), கோவா, இந்தியா
இயக்கத்திலுள்ள ஆண்டுகள்2010 முதல் தொடர்ந்து
வலைத்தளம்
www.goaartlitfest.com

கோவா கலை மற்றும் இலக்கிய விழா (GALF) என்பது இந்திய கடலோர மாநிலமான கோவாவில், ஒவ்வொரு வருடமும் டிசம்பரில் நடைபெறும் கலாச்சார இலக்கிய விழாவாகும் . இது 2010 ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1]

சர்வதேச மையம், கோவா (ICG) திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் இடமாக செயல்படுகிறது,[2] '''சுவாரி''', '''மண்டோவி''' மற்றும் '''அபோலிம்''' பகுதிகளில் உள்ள அரங்குகள் மற்றும் தோட்டங்களில் இலக்கிய அமர்வுகள் முழுவதும் நடத்தப்படுகின்றன. தொடக்க நிகழ்வு பொதுவாக மக்வினெஸ் அரண்மனையில் நடைபெறும்.[3]

கோவா அரசின் கலை மற்றும் கலாச்சார இயக்குநரகத்தின் ஆதரவுடன், கோவா எழுத்தாளர்கள் குழுவுடன் இணைந்துசர்வதேச மையம், கோவா (ICG) இதனை ஏற்பாடு செய்துள்ளது.[2] இந்த நிகழ்வில் முக்கியமாக உள்ளூர் புத்தகக் கடைகள் மற்றும் ஒரு சில வெளியீட்டாளர்கள் மூலம் புத்தக கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.[4] திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளும் இலவசம் மற்றும் அனைவருக்கும் திறந்திருக்கும்.

வரலாறு[தொகு]

தொடர்ந்து பல ஆண்டுகளாக, கோவா கலை மற்றும் இலக்கிய விழா (GALF) ஆனது இந்தியாவின் வடகிழக்கு மற்றும் காஷ்மீர், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்தும், கோவாவின் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களை உள்ளடக்கிய பங்கேற்பாளர்களை கொண்டும் இவ்விழாவை  நடத்தியது, மேலும் தலித் எழுத்து, கவிதை, கிராஃபிக் நாவல்கள் மற்றும் மொழிபெயர்ப்பு போன்ற கருப்பொருள்களை உள்ளடக்கியுள்ளது.[5]

அதன் பங்கேற்பாளர்களில் யு.ஆர்.அனந்தமூர்த்தி (2010); தேஜு கோல், பாகிஸ்தான் நாவலாசிரியர் பிலால் தன்வீர், குல்சார் மற்றும் அமிதவ் கோஷ் (2011);[6] மிருதுலா கார்க் மற்றும் யூனிஸ் டி சோசா (2012);[7] மீரா கோசாம்பி, மித்ரா புகன் மற்றும் அரவிந்த் கிருஷ்ணா, மெஹ்ரோத்ரா (2013);[8] எட்வின் தும்பூ மற்றும் வென்டால் ரோட்ரிக்ஸ் (2014).[9] சமந்த் சுப்ரமணியம், பிரெஞ்சு கிராஃபிக் நாவலாசிரியர் நிக்கோலஸ் வைல்ட், எம்.கே. ரெய்னா இயக்கிய பந்த் பதேர் நாடகக் குழு, ஸ்ரீ ஸ்ரீ ஜனார்தன் தேவ கோஸ்வாமி தலைமையிலான உத்தர் கமலாபரி சத்ரா, நரேஷ் பெர்னாண்டஸ், கிராஃபிக் நாவலாசிரியர் அம்ருதா பாட்டீல், ஆதித்யா அதிகாரி, மாமாங் டே, இசபெல்ஸ் டி சாந்தா, ஜெர்ரி பின்டோ, சாந்தா கோகலே (2018),[10] இந்திய-அமெரிக்க பரப்பிசை பாடகர்கள் சீ மலபார் மற்றும் ஹிமான்ஷு சூரி, பாகிஸ்தான் நையாண்டி இசைக்கலைஞர் அலி அஃப்தாப் சயீத், அமெரிக்க கலைஞர் டெய்சி ராக்வெல், போன்றோர் பல்வேறு ஆண்டுகளில் கலந்துகொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். மேலும் ஆஸ்திரேலியா, நேபாளம் மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் ,உட்பட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.[5]

2013[தொகு]

கோவா கலை மற்றும் இலக்கிய விழா (GALF), சமகால இந்தியாவில் இதுவரை பிரபலமான சமகால கவிஞர்களின் சிறந்த இலக்கிய வரிசைகளை தொடர்ந்து தொகுத்து வழங்கியதாக கூறுகிறது.[5] 2013 ஆம் ஆண்டில், " யூனிஸ் டி சோசா, கிவ் பட்டேல், அரவிந்த் கிருஷ்ணா மெஹ்ரோத்ரா மற்றும் மனோகர் ஷெட்டி உட்பட 1970களில் தோன்றிய மாபெரும் '''பாம்பே பள்ளி ''' கவிஞர்களின் ஒன்றிணைப்பு எதிர்பாராத வகையில் இந்த நிகழ்ச்சியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.[5]

2014[தொகு]

கோவா கலை மற்றும் இலக்கிய விழா (GALF) 2014, மூத்த பத்திரிக்கையாளர்களின் '"தேசிய ஊடகங்களின் மாறும் தன்மை"' பற்றிய அந்த வருடத்திய அமர்வு பல விவாதங்களை எழுப்பியது. இதில் ராஜ்தீப் சர்தேசாய், சாகரிகா கோஸ் , ஸ்ரீனிவாசன் ஜெயின், நரேஷ் பெர்னாண்டஸ், சமர் ஹலர்ன்கர், பிரியா ரமணி, கோவிந்தராஜ் எத்திராஜ், சச்சின் கல்பாக், பிரசாந்த் ஜா, சிரில் அல்மேடா ஆகியோர் கலந்து கொண்டனர்.. பின்னர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் சர்தேசாய் 2014: இந்தியாவை மாற்றிய தேர்தல் .[11] என்ற புத்தகத்தின் வெளியிட்டு விழாவும் நடந்தது

2016[தொகு]

கோவா கலை மற்றும் இலக்கிய விழா (GALF) 2016, கலாச்சார அமைச்சகம், இந்திய அரசு மற்றும் வடகிழக்கு கவுன்சில், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம், ஷில்லாங் மேகாலயா ஆகியவற்றுடன் புதிய கூட்டாண்மைகளை உள்ளடக்கி இவ்வருடம் நிகழ்ச்சிகளை நடத்தியது. லாண்டேக் ஒயிட் ( வேல்ஸிலிருந்து ) மற்றும் ஏஞ்சலிகா ஃப்ரீடாஸ் ( பிரேசிலில் இருந்து) போன்ற உலகெங்கிலும் இருந்து பேச்சாளர்கள் மற்றும் கெர்சன் டா குன்ஹா, நபினா தாஸ், ரஞ்சித் ஹோஸ்கோட், கே. சச்சிதானந்தன், மாமாங் டாய் மற்றும் முஸ்தான்சிர் தால்வி உட்பட ஏராளமான இந்திய கலை, இலக்கிய கலைஞர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். கோவாவை சேர்ந்த மனோகர் ஷெட்டியின் புத்தக வாசிப்பு இடம்பெற்றது மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் ஆர்வலர் பி சிவகாமி ஒரு முக்கிய பேச்சாளராக இருந்தார். 

விழாவில் வெளியிடப்பட்ட சில புத்தகங்களில் பூமியின் உப்பு ( ஜெயந்தி நாயக் மற்றும் அகஸ்டோ பிண்டோவால் மொழிபெயர்க்கப்பட்டது), யுக்சன்வர் / வெறித்தனத்தின் காலம் (மஹாப்ளேஷ்வர் சைல் மற்றும் வித்யா பாய் மொழிபெயர்த்தார்), தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு ( மார்கரெட் ஆல்வாவின் நினைவுகள்), அத்துடன் வின்சி குவாட்ரோஸ், கிரண் புட்குலே, ஒடெட் மஸ்கரென்ஹாஸ், ஹேமா மையர் சூட், பினா நாயக், அலோசியஸ் டிசோசா, இவான் ஆர்தர், பெர்னாண்டோ ஜார்ஜ் கோலாகோ ஆகியோரின் கொங்கனி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் உள்ள மற்ற புத்தகங்கள் குறிப்பிடத்தகுந்தவையாகும். மேலும் பாரசீக உணவுகள் பற்றி விருது பெற்ற உணவு எழுத்தாளர் நவோமி டுகிட் எழுதிய புதிய புத்தகம் வெளியிடப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.[12]

இவ்விழாவில் டெல்லியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரும் வலைப்பதிவாளருமான மயங்க் ஸோபியின் கலைக் காட்சிகளும், ராஜேஷ் சல்கோன்கர் தலைமையில் கோவாவைச் சேர்ந்த பல்வேறு ஓவியக் கலைஞர்களின் ஓவியங்களும் இடம்பெற்றன.[13]

தொடக்க தினத்தின் மாலையில் மணிப்பூரை தளமாகக் கொண்ட நாட்டுப்புற ராக் இசைக்குழுவான இம்பால் டாக்கீஸ் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேகாலயாவைச் சேர்ந்த பழம்பெரும் ராக் இசைக்கலைஞர் லூ மஜாவ், இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற பாப் டிலானை அவருக்கு அர்ப்பணித்த சிறப்பு கச்சேரி மூலம் கௌரவித்தார்.[14][15] இப்படியாக இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் கலை மற்றும் இலக்கியம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. இதில் வட கிழக்கைச் சேர்ந்த இலக்கியவாதிகளின் கலந்துரையாடல்கள் மற்றும் குழு விவாதங்கள், விசேட வாசிப்புகள் போன்றவை இடம்பெற்றன.

கோவா கலை மற்றும் இலக்கிய விழா (GALF) 2017 ஆனது அதன் எட்டாவது நிகழ்ச்சியாக டிசம்பர் 7 முதல் 10 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கணேஷ் தேவி, ராமச்சந்திர குஹா, ஜெர்ரி பின்டோ மற்றும் ரஞ்சித் ஹோஸ்கோட் போன்ற சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களும், 2015 மேன் புக்கர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட அனுராதா ராய் ஆகியோரும் அடங்குவர்.[4]

2018[தொகு]

கோவா கலை மற்றும் இலக்கிய விழாவின் ஒன்பதாவது பதிப்பு 2018 டிசம்பர் 6 முதல் 8 வரை நடைபெற்றது. தொடக்க விழாவில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் சஷி தேஷ்பாண்டே மற்றும் ஜெர்ரி பின்டோ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.[16][17] ஒன்பதாவது பதிப்பை தாமோதர் மௌஸோ மற்றும் விவேக் மெனேசஸ் ஆகியோர் இணைந்து நடத்தினார்கள்.[18] இது ஃபிரடெரிக் நோரோன்ஹாவின் கோவா 1556 இன் சீதா வாலஸ்: இறக்கும் வரை உறுதி போன்ற பல்வேறு புத்தக வெளியீடுகளைக் கொண்டிருந்தது [19]

கருத்துக்களும் விமர்சனங்களும்[தொகு]

இணைய இதழான StageCulture.com கோவா கலை மற்றும் இலக்கிய விழாவைப் பற்றி கூறியது: "ஆண்டுதோறும் டிசம்பரில் நடத்தப்படும் இந்த விழா, சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது, கோவா ஒரு ஹிப் பீச் இலக்கு மற்றும் ரேவ் ஹாட்ஸ்பாட் என்பதை விட அதிகம்." [20]

மற்றொரு இணைய இதழான Skyscanner.co.in கூறியது: "கோவா கலை மற்றும் இலக்கிய விழா ... இப்போது அதன் ஐந்தாவது ஆண்டில் உள்ளது, மேலும் இந்த ஆண்டின் இலக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக தன்னை விரைவாக நிறுவுகிறது. இலக்கிய நிகழ்வுகள், வாசிப்புகள் மற்றும் புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு இடையில், சூரியன், மணல் மற்றும் கடல் உணவுகளுக்காக கோவாவின் பிரபலமான கடற்கரைகளை நீங்கள் பார்வையிடலாம்! . . . முன் பதிவுடன் பங்கேற்பது இலவசம்." [21]

தி நவ்ஹிந்த் டைம்ஸில் எழுதுகையில், ஒரு விமர்சனக் கண்ணோட்டம் கருத்துரைத்தது: "ஆக்கப்பூர்வமான செயல்முறையைத் தூண்டுவதற்கு கோவா அதன் சொந்த அறைகளை உருவாக்க வேண்டும். ஆனால், இப்போது, இங்கிருந்து வரும் எழுத்தாளர்கள் கேட்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்போது, நாம் புதிய படிநிலைகளை உருவாக்கிக்கொண்டிருக்கலாம். உள்ளூர் வேலை புது டெல்லி அல்லது நியூயார்க்கில் உள்ள ஒருவரின் ரசனைகளால் சரிபார்க்கப்பட வேண்டும், அது கோவாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மதிப்புமிக்கதாகவும் கருதப்பட வேண்டும். இது ஆழ்மனதில் செயல்படுத்தப்பட்டாலும், ஆழமான குழப்பமான யோசனையாகும். சாத்தியமான பங்கேற்பாளர்களை வெளியேற்றுவதற்கு சிறிய ஆலோசனைகள் நடப்பதாகத் தெரிகிறது. தேசிய மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்களைப் பொறுத்தவரை, ஒருவர் அவர்களைப் பற்றி சொல்லப்பட்டதையோ அல்லது பிற இலக்கிய விழாக்களில் கட்டமைக்கப்பட்ட நற்பெயரைப் பற்றியோ செல்லலாம். யார் என்ன செய்கிறார்கள் என்ற துறையை நாம் இன்னும் புரிந்து கொள்ளாத நிலையில், கோவாவில் இருந்து பங்கேற்பதை ஒருவர் எவ்வாறு தேர்வு செய்கிறார்?" [22]

மிருதுளா கர்க் எழுதுகிறார், "சில நேரங்களில், ஒரு கண் இமைக்கும் நேரத்தில், விளிம்பின் தீவிர முனையில் இருப்பதாக நாம் நினைத்த ஒருவர் உண்மையில் நமக்கு மிக நெருக்கமானவர் என்பதைக் கண்டுபிடிப்போம்; உண்மையில் நமது மாற்று ஈகோ. . . நாம் இலக்கியம் அல்லது கலையை உருவாக்கத் தொடங்கும் புள்ளி அதுதான். அதனால்தான் ஒரு தாமோதர் மௌஸோ, இப்போது கோவாவைப் பற்றி எழுதக்கூடிய அதே எளிமையில் கடந்த நூற்றாண்டில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு கோவா சிறுவனின் வாழ்க்கையைப் பற்றி எழுத முடியும். விளிம்பு ஒரே மாதிரியான இடம் அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம். விளிம்பிற்குள் பல கண்ணுக்குத் தெரியாத விளிம்புகள் உள்ளன. மேலும் அவை ஒவ்வொன்றும் குறிப்பிடத்தக்க ஒன்று, ஏனெனில் கருத்து வேறுபாடு இலக்கியம் மற்றும் சமூக மாற்றத்தின் உயிர்நாடியாகும்." [23]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bookmark your calendar: Literary festivals in and around India you can visit" (in en-US). The Indian Express. 2017-11-15. https://indianexpress.com/article/lifestyle/art-and-culture/literary-festivals-in-and-around-india-you-can-vist-4938953/. 
  2. 2.0 2.1 "Goa Art and Literature Festival 2017 concludes". Business Standard India. 2017-12-10. https://www.business-standard.com/article/pti-stories/goa-art-and-literature-festival-2017-concludes-117121000463_1.html. 
  3. "Goa Arts and Literature Festival at Panaji from Dec 7". Deccan Herald. 2017-11-04. https://www.deccanherald.com/content/640987/goa-arts-literature-festival-panaji.html. 
  4. 4.0 4.1 "8th edition of the Goa Arts and Literature Festival to begin on December 7". The Navhind Times (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-25.
  5. 5.0 5.1 5.2 5.3 "About Us". goaartlitfest.com. International Centre (Goa). Archived from the original on 1 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 15 March 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Goa Arts And Literary Festival". Caravan Magazine. 1 December 2011. பார்க்கப்பட்ட நாள் 2018-11-25.
  7. "Open season: A handy guide to this winter’s literature festivals". LiveMint. 2012-11-16. https://www.livemint.com/Leisure/3sTvqaooJ6AseJ5fPzwnnN/Open-season.html. 
  8. "Assam & Pakistani writers to be highlight of 4th Goa Lit Fest". GoaNews.com. 2 December 2013. https://www.goanews.com/news_disp.php?newsid=4673. 
  9. "Edwin Thumboo inaugurates Goa Arts and Literature Fest". DNA India. 2014-12-05. https://www.dnaindia.com/lifestyle/report-edwin-thumboo-inaugurates-goa-arts-and-literature-fest-2041141. 
  10. "GALF Ends; Showcases books, writers, new outlooks". The Goan Everyday. 9 December 2018. http://epaper.thegoan.net/m5/1929334/The-Goan-Everyday/The-Goan-Everyday#page/6/1. 
  11. "GALF 2014 promises Goans broad literary treat". The Navhind Times (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-06.
  12. "Goa Arts & Literature Festival 2016". http://sadhanakembhave.blogspot.com/2016/12/goa-arts-literature-festival-2016.html/. 
  13. "Goa Arts & Literature Festival 2016". https://goaartlitfest.com/speaker-2016/. 
  14. "LIT FEST - ALL THINGS LIBERATING AT GALF '16!". Goan Observer (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-12-16. பார்க்கப்பட்ட நாள் 2018-12-06.
  15. "GALF 2016: Greatest Literary Bonanza in Goa History". Goa Streets. பார்க்கப்பட்ட நாள் 2018-12-06.
  16. . 7 December 2018. 
  17. . 8 December 2018. 
  18. . 9 December 2018. 
  19. Machado, Christine (6 December 2018). "The tale of an unknown revolutionary". The Navhind Times (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-10.
  20. Mishra, Gauri. "7 Literary Festivals of India – Art & Culture Jamboree". blog.stageculture.com. பார்க்கப்பட்ட நாள் 16 March 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
  21. "Literary Festivals in INdia". skyscanner.co.in. Skyscanner. 2014-09-07. பார்க்கப்பட்ட நாள் 16 March 2017.
  22. Noronha, Frederick. "A room of our own?". navhindtimes.in. The Navhind Times. பார்க்கப்பட்ட நாள் 16 March 2017.
  23. Garg, Mridula. "Goa as Literature". Tambdi Mati. Archived from the original on 2017-05-06. பார்க்கப்பட்ட நாள் 2018-12-06.