சசி தேசுபாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சசி தேசுபாண்டே (Shashi Deshpande 1938) என்பவர் பெண் எழுத்தாளர். 10 புதினங்கள் 2 குறு புதினங்கள் பல சிறுகதைகள் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இந்திய அரசின் பத்மசிறீ, சாகித்ய அகாடமி விருதுகள் பெற்றவர்.[1]

வாழ்க்கை[தொகு]

கருநாடக மாநிலத்தில் உள்ள தார்வாத் நகரில் பிறந்த சசி தேசு பாண்டே பொருளியல் மற்றும் சட்டம் ஆகியவற்றில் பட்டம் பெற்றார். பாரதிய வித்யா பவனில் இதழ்த் துறைக் கல்வியை முடித்தார். ஆன்லுக்கர் என்னும் ஆங்கல இதழில் சில மாதங்கள் வேலை செய்தார். மும்பையில் சில ஆண்டுகள் வாழ்ந்து விட்டு பெங்களூருவில் நிலையாக வசித்து வருகிறார். இசைக் கேட்பதும் சீட்டாட்டம் ஆடுவதும் புத்தகம் படிப்பதும் இவருடைய பொழுது போக்குகள் ஆகும்

மேற்கோள்[தொகு]

இணைப்புரை[தொகு]

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-youngworld/article3229122.ece

"https://ta.wikipedia.org/w/index.php?title=சசி_தேசுபாண்டே&oldid=2707393" இருந்து மீள்விக்கப்பட்டது