அம்ருதா பாட்டீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்ருதா பாட்டீல்
பிறப்புExpression error: Unrecognized punctuation character "{". 19 April 1979 (19 April 1979-{{{month}}}-{{{day}}}) (அகவை Error: Need valid year, month, day)
புனே
தொழில்கிராஃபிக் புதின எழுத்தாளர், ஓவியர், எழுத்தாளர்
தேசியம் இந்தியா
காலம்2008 - தற்போது வரை
வகைகிராஃபிக் புதினம்
கருப்பொருள்புராணம், சூழலியல், பெண்ணியம்

அம்ருதா பாட்டீல் (Amruta Patil) (பிறப்பு 1979 ஏப்ரல் 19) இந்திய கிராஃபிக் புதின எழுத்தாளரும், ஓவியருமாவார்.

தொழில்[தொகு]

1979 இல் பிறந்த அம்ருதா தனது குழந்தைப் பருவத்தை கோவாவில் கழித்தார். [1] இவர் கோவா கலைக் கல்லூரியில் (1999) நுண்கலையில் இளங்கலைப் பட்டமும், மாசச்சூசெட்ஸ்ஸின் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் பாஸ்டனில் உள்ள நுண்கலை அருங்காட்சியக பள்ளியில் (2004) நுண்கலையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். [2] 1999-2000 ஆம் ஆண்டில் எண்டர்பிரைஸ் நெக்ஸஸ் என்ற நிறுவனத்தில் (மும்பை) நகல் எழுத்தாளராக பணியாற்றினார். மைண்ட்ஃபீல்ட்ஸ் (2007-2012) என்ற காலாண்டு இதழின் இணை நிறுவனராகவும், ஆசிரியராகவும் இருந்தார். [3] 2009ஆம் ஆண்டில் இவருக்கு டெட் கூட்டாளர் என்ற கௌவரவம் வழங்கபட்டது. [4]

படைப்புகள்[தொகு]

இவரது காரி என்ற முதல் கிராஃபிக் புதினம் இந்தியாவின் ஹார்பர்காலின்ஸ் என்ற புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் வி.கே. கார்த்திகா என்பவரால் வெளியிடப்பட்டது. பாலியல், நட்பு, இறப்பு ஆகிய கருப்பொருள்களை இந்நூல் ஆராய்ந்தது. மேலும், இவரை இந்தியாவின் முதல் பெண் கிராஃபிக் புதின ஆசிரியராக அங்கீகரித்தது. [5]

இவரின் அடுத்தடுத்த இரண்டு கிராஃபிக் நூல்கள் ஆதி பர்வா: சுர்னிங் ஆஃப் தி ஓஷன் மற்றும் சாப்டிக்: பிளட் அண்ட் ஃப்ளவர்ஸ் [6] பர்வா டியோலஜியை உருவாக்குகின்றன. இது மகாபாரதத்தின் கதைகளை முறையே கங்கை மற்றும் அசுவத்தாமனின் பார்வையில் இருந்து விவரிக்கிறது. [7]

புராணவியலாளர் தேவதூத் பட்டானாய்க் [8] உடனான இவரது கூட்டுத் திட்டம் - ஒரு கிராஃபிக் புதினம், ஆரண்யகா: புக் ஆஃப் தி ஃபாரஸ்ட் [9] - வெஸ்ட்லேண்ட் புத்தக நிறுவனத்தால் அக்டோபர் 2019 இல் வெளியிடப்பட்டது. [10]

கௌரவங்கள்[தொகு]

நாரி சக்தி விருதுடன் அம்ருதா பாட்டீல்

இவரது படைப்பு பிரெஞ்சிலும், இத்தாலியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [11]

இவர் 2017 இல் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் பேச்சாளராக இருந்தார். [12]

2017 மார்ச் மாதம் அனைத்துலக பெண்கள் நாள் அன்று இந்தியாவின் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி நாரி சக்தி விருதினை இவருக்கு வழங்கினார். [13]

மேற்கோள்கள்[தொகு]

 1. Das, Soma (2016-10-06). "Visual artist and author Amruta Patil breaks new ground with her graphic retelling of the Mahabharata". Hindustan Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-21.
 2. "Amruta Patil". https://www.thehindu.com/books/amruta-patil/article4343945.ece. 
 3. Bell, Melissa A. (2008-08-09). "Amruta Patil / Writer and illustrator". LiveMint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-21.
 4. "Amruta Patil - TED Fellow - TED". www.ted.com.
 5. "Amruta Patil | PAUL GRAVETT". www.paulgravett.com. பார்க்கப்பட்ட நாள் 2017-06-27.
 6. Anasuya, Shreya Ila (2016-09-30). "Amruta Patil's Mahabharat". LiveMint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-21.
 7. Harper Broadcast (10 December 2016). "Amruta Patil in conversation with Amrita Tripathi" – via YouTube.
 8. Patil, Amruta (19 April 2017). "Umbilical: What comes next".
 9. Amruta Patil (14 July 2017). "Aranyaka: Making of a Graphic Novel - Visual-Textual Notes" – via YouTube.
 10. Das, Ranjabati (2018-12-27). "Making Waves: Amruta Patil". Verve Magazine (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-23.
 11. "Amruta Patil". https://www.thehindu.com/books/amruta-patil/article4343945.ece. 
 12. ZEE Jaipur Literature Festival (10 February 2017). "#ZeeJLF2017: Blood and Flowers" – via YouTube.
 13. "Nari Shakti Awardees - Ms. Amruta Patil, Goa". wcd.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-06-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ருதா_பாட்டீல்&oldid=3122952" இலிருந்து மீள்விக்கப்பட்டது