கோபால்பூர் விலங்குக் காட்சிச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோபால்பூர் விலங்குக் காட்சிச்சாலை
Map showing the location of கோபால்பூர் விலங்குக் காட்சிச்சாலை
Map showing the location of கோபால்பூர் விலங்குக் காட்சிச்சாலை
இமாச்சலப்பிரதேசத்தில் அமைவிடம்
அமைவிடம்கோபால்பூர், பாலாம்பூர் தெகசில், இமாச்சலப்பிரதேசம், இந்தியா]
பரப்பளவு0.12 சதுர kiloமீட்டர்கள் (0.046 sq mi)
நிருவாக அமைப்புஇமாச்சலப்பிரதேச அரசு
வலைத்தளம்164.100.155.49/pages/display/NXNkNGZohTY0ZjY1-zoosaviaries

கோபால்பூர் விலங்குக் காட்சிச்சாலை (Gopalpur Zoo), என்பது இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம், காங்ரா மாவட்டத்தில் தரம்சாலா - பாலம்பூர் சாலையில் உள்ள கோபால்பூர் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு உயிரியல் பூங்காவாகும். இது இமயமலையின் தௌலாதர் மலைத்தொடரால் சூழப்பட்டுள்ளது. விலங்குக் காட்சிசாலையானது மேப்பிள் மரங்கள், குதிரை செஸ்நட் மரங்களால் சூழப்பட்டு குளிர்ச்சியுடன் பசுமையாக அமைந்துள்ளது.[1] இந்த மிருகக்காட்சிசாலையில் காணப்படும் முக்கிய விலங்குகள்: ஆசியச் சிங்கம், சிறுத்தை, இமயமலை கருப்பு கரடி, கடமான், கேளையாடு, கோரல், காட்டுப் பன்றி, பூட்டான் சாம்பல் மயில்கள், சீர் பெசன்ட், சிவப்பு காட்டுக் கோழி,மயில், பிணந்தின்னிக் கழுகு, பருந்துகள் போன்றவை.

காங்க்ரா பள்ளத்தாக்கிலிருந்து இமயமலையின் தௌலதார் தொடர்

இமாச்சல பிரதேச உயிரியல் பூங்காக்கள் மற்றும் பறவைகள்[தொகு]

கோபால்பூர், ரேணுகா மற்றும் குப்ரி ஆகிய இடங்களில் மூன்று அங்கீகரிக்கப்பட்ட விலங்கியல் பூங்காக்களும் சிம்லா, சரஹான் மற்றும் சைல் ஆகிய இடங்களில் மூன்று பறவை காட்சியகங்களும் உள்ளன.

இமாச்சல பிரதேச தேசிய பூங்காக்கள்[தொகு]

  1. பெரிய இமாலய தேசியப் பூங்கா, குல்லு மாவட்டம்: பகுதி 765 கி.மீ 2
  2. ஊசி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, லாஹெளல் மற்றும் ஸ்பிதி மாவட்டம் : பகுதி 675 கிமீ 2

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gopalpur Zoo". Discovered India. 9 August 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]