பிணந்தின்னிக் கழுகு
பிணந்தின்னிக் கழுகு Vulture | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
குடும்பம் | |
Accipitridae, (Aegypiinae) |
பிணந்தின்னிக் கழுகு அல்லது எருவை அல்லது மாடுபிடுங்கி (Vulture) என்பது இரு வகை குழுக்களைச் சேர்ந்த குவிபரிணாம தோட்டி விலங்குப் பறவைகளாகும். அவை கலிபோர்னியாவில் நன்கு அறியப்பட்ட புதிய உலக பிணந்தின்னிக் கழுகுகள் மற்றும் ஆப்பிரிக்கா சமவெளிகளில் இறந்த விலங்குகளிடையே காணப்படும் பழைய உலக பிணந்தின்னிக் கழுகுகள் என்பனவாகும்.[1]
தமிழகத்தில் இவற்றின் நிலை[தொகு]
பிணந்தின்னிக் கழுகுகள் சங்கத் தமிழ் நூல்கள் பாறு என்று குறிப்பிடுகின்றன. ஒரு காலத்தில் தமிழகம் எங்கும் பரவி இருந்த இவை சென்னையில் 1950 களில் காகத்தின் எண்ணிக்கையைவிட மிகுதியான எண்ணிக்கையில் இருந்தன. சென்னைக்கு அருகில் உள்ள திருக்கழுக்குன்றம் கோயிலுக்கு ஒரு சோடி பாறுக் கழுகு 20 ஆண்டுகளுக்கு முன்புவரை தினசரி வந்து இரை எடுத்துச் சென்றிருக்கிறன. ஆனால், இப்போது வருவதில்லை. இந்த பாறு தற்போது நீலகிரியையும் அதைச்சுற்றிய பகுதிகளிலுமே எஞ்சியுள்ளது. இப்பறவைகளின் அழிவுக்கு அடிப்படைக் காரணம் டைக்ளோஃபினாக் எனப்படும் வலிநிவாரணி. மூட்டுவலி, தசைவலிகளுக்கு வெளியில் தடவும் மருந்தாக இப்போதும் இதை நாம் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த மருந்து கால்நடைகளுக்கு ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. தொடர்ச்சியாக வலிநிவாரணி செலுத்தப்பட்ட கால்நடை இறக்கும்போது, அவற்றின் உடலெங்கும் இந்த வலிநிவாரணி எச்சமாகத் தேங்கிக் கிடக்கிறது இதை உண்ணும் பாறுக்கள் இறக்கின்றன. கால்நடைகளுக்கான டைக்ளோஃபினாக் இப்போது தடை செய்யப்பட்டுவிட்டாலும், அது பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாத நிலை நிலவுகிறது.[2]
குறிப்புகள்[தொகு]
- ↑ "Vultures". பார்த்த நாள் 3 April 2016.
- ↑ "மேற்குத் தொடர்ச்சி மலை நாயகன்". தி இந்து (தமிழ்) (2016 மே 28). பார்த்த நாள் 2 சூன் 2016.
வெளியிணைப்புக்கள்[தொகு]
- Vulture videos on the Internet Bird Collection
- Ventana Wildlife Society
- Vulture observatory in Spain
- A Vulture Restaurant