கொசேர் உணவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோகானஸ்பேர்க் யூத சமயபீடமான பெத் டின் அங்கீகரித்த கொசேர் உணவு

கொசேர் உணவுகள் (கொஷேர், Kosher foods) யூதர்களின் கேஷ்ரூத் எனப்படும் உணவுக் கட்டுபாட்டுக் கொள்கைகளுக்குட்பட்ட உணவுகளாகும். இது லேவியர் மற்றும் இணைச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை. எபிரேய மொழியில் கொசேர் (כָּשֵׁר, /kɑːʃɛər/), என்பது "தகுதியான" (இங்கு உண்ணத்தகுந்த) என்ற பொருளுடையது. சமயச் சட்டப்படி இல்லாத உணவுகள் திரைஃப் (טרײף, /trf/, எனப்படுகின்றன; இது "கிழிந்த" எனப் பொருள்படும்.

அனுமதிக்கப்பட்ட விலங்குகளும் தடை செய்யப்பட்டவையும்[தொகு]

தோராவில் தரையில் வாழும், அசைபோடும், பிளவுபட்ட குளம்புள்ள விலங்குகளே அனுமதிக்கப்பட்டுள்ளன.[1][2] இக்காரணங்களுக்காக நான்கு விலங்குகள் குறிப்பாக விலக்கப்பட்டுள்ளன; முயல், ஒட்டகம், பன்றி மற்றும் ஐராக்சு எனப்படும் ஒருவகை அணில் – ஒட்டகத்திற்கு இரண்டு விரல்களே உள்ளதாலும், முயலுக்கும் ஐராக்சிற்கும் பின்குடல் செரித்தல் (நான்கறை உள்ள முன்குடல் செரித்தலுள்ள ஆடு/மாடு போலன்றி) நிகழ்வதாலும் இவை விலக்கப்பட்டுள்ளன.[3]

தோராவில் விலக்கியுள்ள இறக்கையுள்ள பறவைகளில் கொன்றுண்ணிப் பறவை, மீனுண்ணும் நீர்ப்பறவைகள், வௌவால்கள் அடங்கும். தோராவின்படி "நீரில் வாழும்" (கடல், ஆறுகள்) துடுப்புகளும் செதில்களும் உள்ளவையே உண்ணத்தக்கவையாம்.[4][5]

தரையில் ஊர்ந்து செல்பவற்றையும்[6] "பறக்கும் ஊர்வனவற்றையும்",[7][8]தோரா தடைசெய்யப்பட்ட உணவாக அறிவிக்கிறது. இவற்றில் இருவகை வெட்டுக்கிளிகளுக்கும் வண்டுகளுக்கும் விலக்களிக்கப்பட்டுள்ளது.[9]

விலங்குப் பொருட்கள்[தொகு]

இறைச்சியைத் தவிர, தடைசெய்யப்பட்ட விலங்குகளின் பிற பொருட்களும் ஆரோக்கியமில்லாத விலங்குகளின் பொருட்களும் தால்முடிக் எழுதுவோரால் தடை செய்யப்பட்டுள்ளன.[10] இவற்றின் முட்டைகள் (மீன் முட்டைகளும்)[11][12][13] பாலும்,[14] இவற்றிலிருந்து பெறப்படும் பாற்கட்டி, களி ஆகியனவும் உள்ளடங்கும்.[14] ஆனால் விலங்குகளால் "தயாரிக்கப்படும்" அல்லது "சேகரிக்கப்படும்" தேன் போன்றவை உண்ணக்கூடியவை.[15][16][17] யூத சமயநூல்களின்படி உண்ணத்தக்க விலங்குகளின் முட்டைகள் ஒருமுனையில் கூர்மையாகவும் மறுமுனையில் நீள்வட்டமாகவும் இருப்பதைக் கொண்டு உண்ணத்தக்கனவா அல்லவா என்பதை முடிவு செய்யலாம்.[18][19][20]

பால் பொருட்கள்[தொகு]

செவ்வியல் சமயவியலாளர்கள் ஒரு விலங்கு கொசேர் என்றால் அதன் பாலும் கொசேர் என அறிவுறித்தனர். ஒரு விலங்கை வெட்டிய பிறகு அது நோயுள்ளதாக அறியப்பட்டால் அது கொசேர் அல்லாததாக கருதப்படவேண்டும். இது காலந்தாழ்த்தி அதன் பாலை கொசேர் அல்லாததாக்கி விடும். இருப்பினும் பெரும்பாலான விலங்குகள் பால் சுரக்கும் நேரத்தில் ஆரோக்கியமாக இருப்பதால் மரபாக பாலை கொசேராகவே கருதுகிறது. இந்தக் கொள்கை இறைச்சிக்கு பொருந்துவதில்லை; நோயுள்ளதா என்பதை கண்டறிந்த பின்னரே இறைச்சி உண்ணத்தக்கதாகும்.

மனித முலைப்பால்[தொகு]

பெண் முலைப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளது.[16][21][22][23][24] இருப்பினும், முலைப்பாலை முலையிலிருந்தே நேரடியாக குடிக்க வேண்டும்; நான்கு அகவைக்கும் குறைந்த சிறாரே (உடல்நிலை சரியில்லை என்றால் ஐந்து அகவை வரை) குடிக்கலாம். தவிரவும் இரண்டு அகவைக்கு மேற்பட்ட குழந்தைகள் மூன்று நாட்கள் தொடர்ந்து குடிப்பதை நிறுத்தாவிட்டாலே அனுமதிக்கப்படும்.[16][21][22][23][25]

பாற்கட்டி[தொகு]

பாற்கட்டிகளைப் பொருத்தவரை சற்று சிக்கலானது. பொதுவாக பாற்கட்டி தயாரிக்க கன்றின் வயிற்றில் காணப்படும் ரென்னட் எனும் நொதி தேவைப்படும். இது பாலை தயிராகவும் மோராகவும் பிரிக்கின்றது. ஆனால் தற்காலத்தில் இந்த நொதியம் செயற்கை முறையில் நுண்ணுயிரிகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது. ரென்னட் விலங்குகளிடமிருந்து பெறக்கூடியதாகையால் இது கொசேர் இல்லாத விலங்குகளிடமிருந்து பெறப்பட்டிருக்கலாம் என்பதால் பாற்கட்டி கொசேரில்லை எனலாம். இருப்பினும் முற்றிலும் இனக்கலப்பு செய்த உயிரிகளால் ரென்னட் பெறப்பட்டு பாற்கட்டி தயாரிக்கப்படிருந்தால் அது கொசேர் ஆகும். ரென்னட் இறைச்சியாகக் கருதப்படுவதில்லை; எனவே இறைச்சியும் பாலும் கலக்கக் கூடாது என்ற விதி பாற்கட்டி தயாரிப்பிற்கு எதிரானதல்ல.[26]

முட்டைகள்[தொகு]

முட்டை உணவுகள் விலங்கிலிருந்து பெறப்பட்டாலும் இறைச்சியுமல்லாத பாலுமல்லாத பரவே உணவாக கருதப்படுகின்றது.

முட்டைக்கருவில் குருதி காணப்பட்டால் குஞ்சு பொரிக்க தயாராகிவிட்டதாக கருதி அவை தடை செய்யப்பட்டுள்ளன; அஸ்கனாசு யூதர்கள் முட்டையில் எங்கு குருதி காணப்பட்டாலும் அவற்றை கொசேர் இல்லை எனக் கருதினர். செபராது யூதர்கள் மாறாக முட்டையின் வெள்ளைப்பகுதியில் குருதி இருந்தால் குருதியை நீக்கி விட்டு கொசேர் தகுதிபெற்றதாக கருதினர்.

தற்காலத்தில் பண்ணைக் கோழிமுட்டைகளிலிருந்து குஞ்சு பொரியாததால் அவை அனைத்துமே, குருதி இருப்பினும், கொசேராகக் கருதப்படுகின்றன.[27]

ஊன்பசை[தொகு]

ஊன்பசை பல்லாண்டுகளாக இசைக்கருவிகளின் சித்திரத்தையல், ஒப்பனைப் பொருட்கள், ஒளிப்படத் தாளில் தடவப்படும் களியாகவும் இருந்து வந்துள்ளது. ஜெல்லி, டிரைபிள், மார்சமெல்லோ போன்ற உணவுப்பொருட்களிலும் மருந்து குளிகைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ஊன்பசை கொலாசன் எனப்படும் இணைப்பிழையப் புரதத்தை நீராற்பகுத்து பெறப்படுவதாலும்[28] மூல இறைச்சி கொசேர் இல்லாமல் இருக்கலாம் என்பதாலும் இது குறித்து மிகுந்த உரையாடல்களும் சர்ச்சைகளும் நடைபெற்றுள்ளன. சிலர் இதனை கொசேர் இல்லாததாக கருதினாலும் வேறுசிலர் இது வேதிய செயற்பாட்டால் பதப்பட்டதால் இறைச்சியாக கருதவியலாது என்றும் அதனால் கொசேர் என்றும் வாதிடுகின்றனர்.[29]

தற்கால தயாரிப்பாளர்கள் இந்த சர்ச்சைகளைத் தவிர்க்க கொசேர் தகுதிபெற்ற மீன்களிலிருந்து ஊன்பசையைத் தயாரிக்கின்றனர்.[30]

பிக்குவா நெபெசு[தொகு]

மனித உயிருக்கு அபாயம் ஏற்படும்போது யூத சமய விதிகளுக்கு பிக்குவா நெபெசு எனப்படும் உயிர்க்காப்பு விலக்கு அளிக்கப்படுகின்றன. காட்டாக, ஒரு நோயாளியின் நோய்மீள்விற்கு முதன்மையானது எனப்படுகையில் கொசேர் இல்லாத உணவு வகைகளும் அனுமதிக்கப்படுகின்றன.[31] அதேபோல யூதர் செல்லுமிடத்தில் கொசேர் உணவின்றி பட்டினி இருக்கும் நிலை வந்தால் விலக்கப்பட்ட உணவுவகைகளை எடுத்துக் கொள்ளலாம். [32][33]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. வார்ப்புரு:Bibleverse-lb
  2. வார்ப்புரு:Bibleverse-lb
  3. Natan Slifkin, The Camel, the Hare and the Hyrax
  4. வார்ப்புரு:Bibleverse-lb
  5. வார்ப்புரு:Bibleverse-lb
  6. Leviticus 11:41
  7. Deuteronomy 14:19
  8. Leviticus 11:20
  9. வார்ப்புரு:Bibleverse-lb
  10. Bekorot 5b
  11. Abodah Zarah 41a
  12. Maimonides Yad, Ma'akalot Asuro:20-24
  13. Jacob ben Asher, Yoreh De'ah, 83:5-10
  14. 14.0 14.1 "Dietary Laws". Jewish Encyclopedia. 1906. பார்க்கப்பட்ட நாள் February 21, 2013.
  15. Bekorot 7b
  16. 16.0 16.1 16.2 Maimonides Yad, Ma'akalot Asuro:3
  17. Jacob ben Asher, Yoreh De'ah, 8-9
  18. Hullin 64a
  19. Maimonides Yad, Ma'akalot Asuro:7-11
  20. Jacob ben Asher, Yoreh De'ah, 86
  21. 21.0 21.1 Ketubot 60a
  22. 22.0 22.1 Bekorot 6a
  23. 23.0 23.1 Hullin 112b
  24. Jacob ben Asher, Yoreh De'ah, 81
  25. Jacob ben Asher, Yoreh De'ah, 81
  26. Gordimer, Avraham (Winter 2005). "Say Cheese!". Kashrut.com. பார்க்கப்பட்ட நாள் February 21, 2013.
  27. Neustadt, Doniel (2004). "The Status of Blood in Halacha". Torah.org. பார்க்கப்பட்ட நாள் February 21, 2013.
  28. Geliko Kosher Gelatin, Functional & Nutraceutical Properties.
  29. Yabia Omer, Vol. 8; Yoreh De'ah No. 11
  30. Dr. Bernard Cole Pr.Sci.Nat. "Gelatine - Consumer Information". Gelatin.co.za. Archived from the original on 2014-06-06. பார்க்கப்பட்ட நாள் 2011-12-03.
  31. "Pikuach Nefesh".
  32. Julius H. Schoeps, Olaf Glöckner. A Road to Nowhere? Jewish Experiences in Unifying Europe. பக். 130. https://books.google.co.il/books?id=iwRAm7vWE2EC&pg=PA130&lpg=PA130&dq=pikuach+nefesh+starvation+kosher&source=bl&hl=en. 
  33. Esther Farbstein. Hidden In Thunder: Perspectives on Faith, Halachah and Leadership. பக். 282. https://books.google.co.il/books?id=772I7ZNUSKYC&pg=PA282&lpg=PA282&dq=pikuach+nefesh+starvation+kosher&source=bl&hl=en. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொசேர்_உணவுகள்&oldid=3696897" இலிருந்து மீள்விக்கப்பட்டது