கை கழுவுதல்
கை கழுவுதல் (Hand washing) என்பது கையில் படிந்துள்ள மண், அழுக்குகளையும், நுண்ணுயிரிகளையும் நீக்க சுத்தம் செய்வது ஆகும். கைகழுவுவதற்கு நீர் மற்றும் சவர்க்காரம் போன்றவை கிடைக்கவில்லை என்றால் சாம்பலைப் பயன்படுத்தியும் சுத்தம் செய்யலாம்.[1]
மருத்துவரீதியாகப் பாா்த்தால் பல நோய்கள் கைகழுவாமல் இருப்பதால்தான் பரவுகிறது. கைகழுவுவதால்தான் நோய்களைப் பரப்பக்கூடிய பாக்டீரியாக்கள், வைரஸ்கள் அழிக்கப்படுகிறன. உணவினைக் கையாளக்கூடியவா்கள், வேலை செய்பவா்கள் மருத்துவத் துறையில் இருப்பவா்கள் போன்றவா்களுக்கு கைகழுவுதல் பயிற்சி என்பது அடிப்படையாகக் கருதப்படுகிறது. சோப்பினால் கைகழுவுதல் என்பது பலவகையான நோய்களிலிருந்து காக்கப் பயன்படுகிறது, உதாரணமாக காலரா, வயிற்றுப்போக்கு போன்றவை பரவுவதிலிருந்து காக்கிறது. கைக்கழுவுதல் தோல் நோய்களிலிருந்தும் காக்கிறது. பெரும்பாலான மக்கள் தீ நுண்மத் தொற்று, தடிமனாலும்பாதிக்கப்படுகின்றனர் காரணம் அவா்கள் கைகளை கழுவாமல் தங்கள் கண்களைத் தொடுதல், மூக்கில் விரல்வைத்தல், வாயில் கைகளை வைத்தல் போன்றவற்றைச் செய்வதால் ஆகும்.
பொது சுகாதாரம்
[தொகு]சுகாதார நலன்கள்
[தொகு]கை கழுவுவதன் மூலம் பின்வரும் ஆரோக்கிய நலன்கள் ஏற்படுகின்றது. இன்ஃபுளுவென்சா ஏற்படுவதக் குறைக்க உதவுகிறது.[2] வயிற்றுப்போக்கைத் தடுக்கிறது.[3] சுவாசநோய்த் தொற்றுகளைத் தவிர்க்கிறது.[4] ஐந்துவயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மேம்பட்ட கை கழுவும் பயிற்சிகளைக் காண்பிப்பதன் மூலம் அவர்களின் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படுகின்றது.[5] வளர்ந்த நாடுகளில் , சுவாசக் கோளாறு மற்றும் வயிற்றுப்போக்குப் பிரச்சினைகளால் ஏற்படும் குழந்தை இறப்பு வீதத்தை சவர்க்காரம்கொண்டு கைகழுவுதல் போன்ற சில எளிய நடத்தை மாற்றங்கள் செய்வதன் மூலம் குறைக்க முடிந்தது. இந்த எளிய நடத்தை மாற்றங்களின் மூலம் மேலே குறிப்பிட்ட நோய்களினால் ஏற்படும் இறப்பு விகிதத்தை 50 விழுக்காடு வரை குறைக்க முடிகிறது.[6]
குறைவான வருமானங்கள் கொண்ட கிராம மக்களுக்கு தூய நீர் வழங்குவதை விட கைகழுவுதல் பற்றிய விழிப்புணர்வை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் மூன்றில் ஒரு பங்கு வயிற்றுப் போக்கு ஏற்படுவதைத் தடுக்கலாம்.[7] சவர்க்காரம் கொண்டு கைகழுவதன் மூலம் வயிற்றுப்போக்கு ஏற்படுவது 48 விழுக்காடு குறைந்துள்ளது.[8]
சவர்க்காரம் கொண்டு கைகழுவது என்பது வயிற்றுப்போக்கு மற்றும் தீவிர சுவாச நோயிலிருந்து பாதுகாக்க விலை மலிவான , மிகச் சிறந்த வழியாகும். மேலும் இது வீடு,பள்ளிக்கூடம், போன்ற இடங்களில் உலகம் முழுவதும் தானியங்கி செயல்களாக நடைபெற்று வருகிறது. மிகத் தீவிர சுவாச நோயாகக் கருதப்படுகிற நுரையீரல் அழற்சியினால் ஐந்து வயதிற்குட்பட்ட 1.8 மில்லியன் குழந்தைகள் ஆண்டுதோறும் இறக்கின்றனர். மேலும் நுரையீரல் அழற்சி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகிய நோய்களினால் மட்டும் வருடத்திற்கு 3.5 மில்லியன் குழந்தைகள் இறக்கின்றனர்.[9] யுனிசெப் இந்தியாவின் கூற்றுப்படி உணவிற்கு முன் மற்றும் கழிவறைகளைப் பயன்படுத்தியதற்குப் பின்னும் சவர்க்காரம் கொண்டு கைகழுவுவதன் மூலம் எந்தவிதமான மருத்துவ உதவிகள் இன்றியும், நோய்த்தொற்றுப் பாதிப்பை பெருமளவு குறைக்க முடியும்.
ஒரு நாளின் முக்கிய நேரங்களில் ஐந்து முறை
[தொகு]ஒரு நாளின் முக்கிய நேரங்களில் ஐந்து முறை சவர்க்கரம் கொண்டு கை கழுவுவதன் மூலம் நோய்தொற்று ஏற்படுவதைக் குறைக்க முடியும். குழந்தையின் அடிப்புறம் தூய்மை செய்த பிறகு, குழந்தைக்கு உணவு கொடுப்பதற்கு முன், உணவு சாப்பிடுவதற்கு முன் மற்றும் உணவு சமைப்பதற்கு முன், கறி, மீன், கோழி போன்றவற்ற்றை தூய்மைப்படுத்துவதற்கு முன் போன்ற நேரங்களில் கைகழுவ வேண்டும்.[10]
நடத்தை மாற்றங்கள்
[தொகு]பல நாடுகளில் சவர்க்காரம் கொண்டு கை கழுவுவதால் நோய்த்தொற்று குறைவாகவே உள்ளது. 2015 ஆம் ஆண்டில் 54 நாடுகளில் நடத்திய ஆய்வில் சராசரியாக 38.7 சதவீதத்தினர் தங்களுடைய வீடுகளில் சவர்க்காரம் கொண்டு கைகழுவுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.[11] அவ்வாறு முக்கிய நேரங்களில் கைகழுவுபவர்களின் நடத்தைகளில் குறிப்பிடத் தகுந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன.[12]
மற்றவைகள்
[தொகு]கைகழுவுவதன் பொது விதி என்னவெனில் மக்களை எலும்பு முறிவு நோய், அம்மைநோய் வகைகள், தட்டம்மை, இன்ஃபுளுவென்சா, காச நோய் போன்ற நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கலாம் என்பதாகும்.
முறை
[தொகு]சவர்க்காரம் கண்டிப்பாக இருத்தல் வேண்டும். சாத்தியம் இருந்தால் கீழேவிழும் வகையில் உள்ள மித வெப்ப நீர் எடுத்துக்கொண்டு நகம் உட்பட தோல்பகுதிகளை நன்றாக கழுவுதல்வேண்டும். சவர்க்காரத்திற்குப் பதிலாக சாம்பலையும் , மேலும் குளிர்ந்த நீரையும் பயன்படுத்தலாம். கைகளை முதலில் நன்றாக அலசிவிட்டு, சவர்க்காரம் அல்லது சாம்பலைக் கொண்டு கைககளைத் தேய்த்துக்கொள்ள வேண்டும். மித வெதுப்பான நீரில் கை கழுவுவதன் மூலம் கன்னுக்குத் தெரியாத கைகளிலுள்ள நுண்கிருமிகளை அழித்து விடும்.[13] நீரின் ஓட்டத்தில் குறைந்தபட்சம் இருபது விநாடிகளாவது கைகளை வைத்து கையை நன்றாக அழுத்தித் தேய்க்க வேண்டும்.
சான்றுகள்
[தொகு]- ↑ "The Hygiene Improvement Project (HIP) - Tippy-Tap: A simple low-cost technology for handwashing when water is scarce". USAID. Archived from the original on 25 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 30 September 2015.
- ↑ Cowling, Benjamin J.; Chan, KH; Fang, VJ; Cheng, CK; Fung, RO; Wai, W; Sin, J; Seto, WH et al. (2009). "Facemasks and Hand Hygiene to Prevent Influenza Transmission in Households". Annals of Internal Medicine 151 (7): 437–46. doi:10.7326/0003-4819-151-7-200910060-00142. பப்மெட்:19652172. http://annals.org/article.aspx?articleid=744899. பார்த்த நாள்: 11 August 2009.
- ↑ Luby, Stephen P.; Agboatwalla, Mubina; Painter, John; Altaf, Arshad; Billhimer, Ward; Keswick, Bruce; Hoekstra, Robert M. (2006). "வயிற்றுப்போகுத் தடுப்பு: கைகழுவுதல்". Tropical Medicine & International Health 11 (4): 479–89. doi:10.1111/j.1365-3156.2006.01592.x. பப்மெட்:16553931. https://archive.org/details/sim_tropical-medicine-and-international-health_2006-04_11_4/page/479.
- ↑ Scott, Beth; et al. "Protecting Children from Diarrhoea and Acute Respiratory Infections: The Role of Hand Washing Promotion in Water and Sanitation Programmes" (PDF). பார்க்கப்பட்ட நாள் 21 May 2009.
- ↑ Dangour, Alan D (1996). "Interventions to improve water quality and supply, sanitation and hygiene practices, and their effects on the nutritional status of children". Reviews. doi:10.1002/14651858.CD009382.pub2.
- ↑ Curtis, Val; Cairncross, Sandy (May 2003). "Effect of washing hands with soap on diarrhoea risk in the community: a systematic review". The Lancet Infectious Diseases 3 (5): 275–281. doi:10.1016/S1473-3099(03)00606-6. பப்மெட்:12726975.
- ↑ Ejemot, Regina I; Ehiri, John E; Meremikwu, Martin M; Critchley, Julia A (2009). "Cochrane review: Hand washing for preventing diarrhoea". Evidence-Based Child Health: A Cochrane Review Journal 4 (2): 893–939. doi:10.1002/ebch.373. பன்னாட்டுத் தர தொடர் எண்:1557-6272.
- ↑ Cairncross, S.; Hunt, C.; Boisson, S.; Bostoen, K.; Curtis, V.; Fung, I. C.; Schmidt, W. P. (2010). "Water, sanitation and hygiene for the prevention of diarrhoea". International Journal of Epidemiology 39 (Supplement 1): i193–i205. doi:10.1093/ije/dyq035. பன்னாட்டுத் தர தொடர் எண்:0300-5771. பப்மெட்:20348121.
- ↑ "The State of the World's Children 2008. Child Survival. UNICEF" (PDF). Archived from the original (PDF) on 2017-12-08. பார்க்கப்பட்ட நாள் 2018-03-17.
- ↑ "Campaign aims to promote hand-washing and save young lives in Malawi". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2018-03-17.
- ↑ "JMP handwashing dataset". Archived from the original on 2 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 March 2017.
WHO/UNICEF Joint Monitoring Programme (JMP) for Water Supply and Sanitation
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Abdi & Gautam, R. & O.P, Approaches to promoting behaviour-change around handwashing-with-soap பரணிடப்பட்டது 2017-03-21 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Wilkinson, Judith M., and Leslie A. Treas.Fundamentals of nursing. 2nd ed. Philadelphia: F.A. Davis Co., 2011. Print