உள்ளடக்கத்துக்குச் செல்

கேன்னட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேன்னட்டு
புதைப்படிவ காலம்:Early Miocene முதல் அண்மைக்காலம் வரை 20–0 Ma
எலிகோலாந்தில் வடக்கத்திய கேன்னட்டுகள்
வடக்கத்திய கான்னட்டுகளின் ஒலி: வேல்சு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Vieillot, 1816
Species
  • Morus bassanus
  • Morus capensis
  • Morus serrator
வேறு பெயர்கள்

மோரிசு

நியூசிலாந்தில் உள்ள முரிவாய் காலனியில் அடைகாக்கும் பறவைகள்

கேன்னட்டு (Gannet) என்பது சுலிடே குடும்பத்தில் மோரசு என்னும் பேரினத்தைச் சேர்ந்த ஒரு கடற்பறவை. இவை பூபிக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. கேன்னட்டு என்னும் பெயர் கேனோட்டு என்னும் பழைய ஆங்கிலச் சொல்லில் இருந்து பிறந்தது. இதன் பொருள் வலிமையுள்ள அல்லது ஆண்மையுள்ள என்பதாகும்.[1]

கேன்னட்டுகள் அளவில் பெரிய பறவைகள். உடல் வெண்ணிறத்திலும் தலை மஞ்சள் படிந்தவாறு இருக்கும். இறக்கைகளின் ஓரம் கருப்பாகவும் அலகு நீண்டும் இருக்கும். வட அத்திலாந்திக் கடற்பகுதியில் காணப்படும் வடக்கத்திய கேன்னட்டு என்னும் பறவை கேன்னட்டுகளிலேயே பெரியது. இறக்கை விரித்த நிலையில் இதன் அகலம் இரண்டு மீட்டர் (6.6 அடி) வரை இருக்கும். இது கால்கள் கொய்யடிகளைக் (சவ்வால் இணைந்த காலடி) கொண்டுள்ளன.

இப்பறவைகள் மேலிருந்து நீருக்குள் வேகமாகப் பாய்ந்து மீன்களை வேட்டையாடும். இதற்கு ஏற்றவாறு இவை கீழ்க்கண்ட தகவமைப்புகளைப் பெற்றுள்ளன.

  • மூக்குத் துளைகள் வெளியில் இல்லாமல் அலகுகளுக்குள் உள்ளன.
  • முகத்திலும் நெஞ்சுப் பகுதியிலும் தோலுக்கடியில் காற்றுப் பைகள் உள்ளதால் நீரில் பாயும் போது உடலிக்கு ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கின்றன.
  • கண்கள் ஒன்றுக்கொன்று தள்ளி இருப்பதால் தொலைவினைக் கணிக்க ஏதுவாக உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "gannet". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.  (Subscription or participating institution membership required.)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேன்னட்டு&oldid=2966358" இலிருந்து மீள்விக்கப்பட்டது