குலிசெட்டா
குலிசெட்டா புதைப்படிவ காலம்: | |
---|---|
குலிசெட்டா லாங்கிஆரியோலேட்டா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | திப்திரா
|
குடும்பம்: | குலுசிடே
|
துணைக்குடும்பம்: | குலிசினே
|
சிற்றினம்: | குலிசெடினி
|
பேரினம்: | குலிசெட்டா பெல்ட், 1904[1]
|
சிற்றினம் | |
குலிசெட்டா அலாகானென்சிசு |
குலிசெட்டா என்பது (Culiseta) கொசுக்களின் பேரினங்களுள் ஒன்றாகும். பெரும்பாலான குலிசெட்டா சிற்றினங்கள் குளிர்ச்சியை விரும்புகின்றன. மேலும் குளிர்ச்சியான காலங்களில் வெப்பமான தட்பவெப்பநிலைகளில் காணப்படும். இவை வெப்பம் குறைவான அதிக உயரமான வாழிடங்களில் மட்டுமே காணப்படும். தெற்கு கலிபோர்னியாவில் காணப்படும் சிற்றினங்கள் பெரும்பாலான கொசு இனங்களைக் காட்டிலும் பெரியவை. குறிப்பாக கு. இனோர்னாடா, கு. பார்டிசெப்சு மற்றும் சி. இன்சிடென்சு. இந்த சிற்றினங்கள் ஆண்டு முழுவதும் தெற்கு கலிபோர்னியாவில் காணப்படுகின்றன. இவை பறவைகள், கால்நடைகள், கொறித்துண்ணிகள், ஊர்வன மற்றும் மனிதர்கள் உள்ளிட்ட முதுகெலும்பு இனங்களின் இரத்தத்தினை உறிஞ்சுகின்றன.[2][3] கொசுக்களின் இளம் உயிரிகள் பெரும்பாலும் சதுப்புநிலம், குளங்கள், நீரோடைகள், சாக்கடைகள், மற்றும் பாறையில் காணப்படும் குளங்களில் காணப்படும். ஆனால் ஆப்பிரிக்கச் சிற்றினங்கள் மரப் பொந்துகளில் காணப்படும் ("பைடோடெலிமாட்டா"). பொதுவான கிழக்கு பாலேர்க்டிக் இனங்கள் கிணறுகள் மற்றும் பாறையில் உள்ள குளங்களில் காணப்படுகின்றன. பல ஆஸ்திரேலிய இனங்கள் நிலத்தின் கீழ் வாழ்கின்றன. முதுகெலும்பிகளின் இரத்தத்தினை உறிஞ்சும் பெண் கொசுக்களின் பண்பு குறித்து அதிகம் அறியப்படவில்லை. பெரும்பாலான சிற்றினங்கள் பறவைகள் மற்றும் பாலூட்டிகளை இரத்தத்தினை உறிஞ்சுகின்றன. ஆனால் ஒரு சில சிற்றினங்கள் ஊர்வனவற்றின் இரத்தத்தினை உறிஞ்சுகின்றன. பல இனங்கள் வீட்டு விலங்குகளின் இரத்தத்தினை உறிஞ்சுகின்றன. எப்போதாவது மனிதர்களைக் கடிக்கின்றன.[4] சில சிற்றினங்கள் மகரந்தச் சேர்க்கையிலும் பங்குகொள்கின்றன.[5]
குலிசெட்டா சிற்றினங்கள் தென் அமெரிக்காவைத் தவிர உலகின் பல பாகங்களிலும் காணப்படுகின்றன.[4] அழிந்துபோன இரண்டு சிற்றினங்கள் மொன்டானாவில் இயோசீன் கிசெனெக் உருவாக்கத்திலிருந்து அறியப்படுகின்றன.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nematocera by Markku Savela". Lepidoptera and some other life forms. பார்க்கப்பட்ட நாள் 2007-12-13.
- ↑ Identification of the Mosquitoes of California.
- ↑ Sandhu TS, Williams GW, Haynes BW, Dhillon MS.
- ↑ 4.0 4.1 "GENUS Culiseta". The Walter Reed Biosystematics Unit. Archived from the original on 2007-06-22. பார்க்கப்பட்ட நாள் 2007-12-13.
- ↑ Peach, Daniel A. H.; Gries, Gerhard (2019). "Mosquito phytophagy – sources exploited, ecological function, and evolutionary transition to haematophagy" (in en). Entomologia Experimentalis et Applicata 168 (2): 120–136. doi:10.1111/eea.12852. பன்னாட்டுத் தர தொடர் எண்:1570-7458.
- ↑ Harbach, Ralph E.; Greenwalt, Dale (2012-10-30). "Two Eocene species of Culiseta (Diptera: Culicidae) from the Kishenehn Formation in Montana". Zootaxa 3530 (1): 25. doi:10.11646/zootaxa.3530.1.2. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-5334.
வெளி இணைப்புகள்
[தொகு]- விக்கியினங்களில் Culiseta பற்றிய தரவுகள்
- "Mosquitoes of California". Alameda County Mosquito Abatement District. Archived from the original on 2008-11-21. பார்க்கப்பட்ட நாள் 2007-12-13.
- "New Jersey's 63 Mosquitoes". New Jersey Mosquito Homepage. Archived from the original on 2007-12-11. பார்க்கப்பட்ட நாள் 2007-12-13.
- Fatma K. Adham; Leaf, HL (December 1982). "Establishment of a colony of the mosquito Culiseta longiareolata under laboratory conditions". Cellular and Molecular Life Sciences 38 (12): 1498–1499. doi:10.1007/BF01955792. இணையக் கணினி நூலக மையம்:14209071. பப்மெட்:6129996. https://archive.org/details/sim_cellular-and-molecular-life-sciences_1982-12-15_38_12/page/n119.
- Culiseta melanura, black-tailed mosquito on the UF / IFAS Featured Creatures website.