குத்லுக்-கானிடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Faravahar background
Faravahar background

ஈரானின் வரலாறு
ஈரானின் அரசர்கள் · ஈரானின் காலவரிசை


edit

குத்லுக்-கானிடுகள் என்பது கிதான் இனத்தைப் பூர்வீகமாக கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அரசமரபு ஆகும். இது குத்லுக்-கானிடு அரசமரபு, கிர்மானிடு அரசமரபு அல்லது பிற்கால மேற்கு இலியாவோ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அரசமரபு 1222 முதல் 1306ஆம் ஆண்டு வரை கிர்மான் பகுதியை ஆண்டது.

கிர்மான் பகுதி தற்போதைய ஈரானின் கெர்மான் மாகாணத்தில் உள்ளது. காரா கிதையின் வீழ்ச்சியின் போது அங்கிருந்து புரக் அசிப் என்பவர் வெளியேறினார். அவர் இந்த அரச மரபைத் தோற்றுவித்தார். ஆரம்பத்தில் சுதந்திரமான அரசாக இருந்த இது பிற்காலத்தில் குவாரசமிய அரசமரபு, மங்கோலியப் பேரரசு மற்றும் ஈல்கானரசு ஆகிய அரசுகளுக்கு அடிபணிந்த அரசாக இருந்தது. ஈல்கானரசு ஆட்சியாளரான ஒல்ஜைடு இந்த அரச மரபை அதிகாரத்திலிருந்து நீக்கினார். அவர் கிர்மானின் ஆளுநராக நசீரல்தீன் முகம்மது இப்னு புர்கானை நியமித்தார்.

மேலும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குத்லுக்-கானிடுகள்&oldid=3487009" இலிருந்து மீள்விக்கப்பட்டது