ஒல்ஜைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒல்ஜைடு மற்றும் யுவான் அரசமரபின் தூதர்கள், மஜ்மா அல் தவரிக், ஆண்டு 1438.


ஒல்ஜைடு[a] என்பவர் ஈல்கானரசு அரசமரபின் எட்டாவது ஆட்சியாளர் ஆவார். இவர் 1304 முதல் 1316 வரை ஈரானின் தப்ரீசு நகரத்தில் இருந்து ஆட்சி புரிந்தார். "ஒல்ஜீட்" என்கிற இவரது பெயருக்கு "தெய்வ அருள் பெற்ற" என்று மங்கோலிய மொழியில் பொருள்.

வாழ்க்கை[தொகு]

இவரது தந்தை பெயர் அர்குன். இவரது தாயார் கெரயிடு இனத்தைச் சேர்ந்த கிறித்தவரான உருக் கதுன் ஆவார். இவர் 24 மார்ச் 1282 அன்று குராசான் பகுதியை இவரது தந்தை நிர்வகித்த போது பிறந்தார்.[1] இவரது பிறப்பின் போது இவருக்குக் கர்-பண்டா (கோவேறு கழுதை ஓட்டுநர்) என்ற பெயர் கொடுக்கப்பட்டது.[2] இவர் பௌத்தராக வளர்க்கப்பட்டார். 1291ஆம் ஆண்டு, பிறகு ஞானஸ்நானம் பெற்றார். திருத்தந்தை நான்காம் நிக்கோலசைக் குறிக்கும் பொருட்டு இவருக்கு நிகோல்யா என்ற பெயர் வைக்கப்பட்டது.[3] எனினும் தரீக்-இ உல்ஜய்டு (ஒல்ஜைடுவின் வரலாறு) என்ற நூலின்படி, ஒல்ஜைடுவுக்கு முதலில் "ஒல்ஜை புகா" என்றும், பிறகு "தெமூதர்" என்றும், கடைசியாக "கர்பண்டா" என்றும் அழைக்கப்பட்டார்.[4] அதே நூலில் இவர் பிறந்தபோது மழைபெய்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மகிழ்ச்சியடைந்த மங்கோலியர்கள் இவரை மங்கோலியப் பெயரான ஒல்ஜைடு என்று பெயரில் அழைத்தனர். இதன் பொருள் மங்கலகரமான என்பதாகும். பிற்காலத்தில் இவர் தன் சகோதரர் கசனுடன் இணைந்து சன்னி இசுலாமுக்கு மதம் மாறினார். இவரது சகோதரரைப் போலவே இவரும் தன் முதல் பாதிப் பெயரை இசுலாமியப் பெயரான முகமதுவிற்கு மாற்றினார்.

பய்டுவிற்கு எதிரான கசனின் சண்டையில் இவர் பங்கெடுத்தார். இவரது சகோதரர் கசன் அரியணை ஏறிய பிறகு இவர் குராசானின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.[5] 1299ஆம் ஆண்டிலிருந்தே கசனுக்கு அடுத்த ஆட்சியாளர் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும்,[6] கசனின் இறப்பு பற்றிய செய்தியை அறிந்த பிறகு அரியணைக்குப் போட்டியாளர்கள் என்று கருதப்பட்டவர்களை ஒழித்துக்கட்ட இவர் முயற்சி செய்தார். அத்தகைய செயலில் இவர் செய்த முதல் நடவடிக்கையானது கய்கடுவின் மகனான இளவரசன் அலபிரங்கைக் கொன்றது ஆகும். அலபிரங் 30 மே 1304ஆம் ஆண்டு ஒல்ஜைடுவின் தூதன் ஒருவனால் கொல்லப்பட்டார்.[7] மற்றொரு சக்திவாய்ந்த அமீரான கோர்க்குதாக்கும் இதேபோலவே பிடிக்கப்பட்டு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.[8]

குறிப்புகள்[தொகு]

  1. Also occasionally spelled Oljeitu, Olcayto, Uljeitu, Öljaitu, or Ölziit.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ryan, James D. (November 1998). "Christian wives of Mongol khans: Tartar queens and missionary expectations in Asia". Journal of the Royal Asiatic Society 8 (9): 411–421. doi:10.1017/s1356186300010506. 
  2. Dashdondog, Bayarsaikhan (2010-12-07) (in en). The Mongols and the Armenians (1220-1335). BRILL. பக். 203. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-18635-4. https://books.google.com/books?id=HrqqhduBapQC. 
  3. "Arghun had one of his sons baptized, Khordabandah, the future Öljeitu, and in the Pope's honor, went as far as giving him the name Nicholas", Histoire de l'Empire Mongol, Jean-Paul Roux, p. 408.
  4. Kāshānī, ʻAbd Allāh ibn ʻAlī.; كاشانى، عبد الله بن على. (2005) (in fa). Tārīkh-i Ūljāytū. Hambalī, Mahīn., همبلى، مهين. (Chāp-i 2 ). Tehran: Shirkat Intishārat-i ʻIlmī va Farhangī. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:964-445-718-8. இணையக் கணினி நூலக மையம்:643519562. 
  5. Özgüdenli, Osman Gazi. "OLCAYTU HAN - TDV İslâm Ansiklopedisi". islamansiklopedisi.org.tr (in துருக்கிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.
  6. Rashīd al-Dīn Ṭabīb, Jāmiʿ al-tawārīkh, ed.
  7. "ALĀFRANK – Encyclopaedia Iranica". www.iranicaonline.org. பார்க்கப்பட்ட நாள் 2020-04-10.
  8. The Cambridge history of Iran.. Fisher, W. B. (William Bayne). Cambridge: University Press. 1968–1991. பக். 397–406. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-06935-1. இணையக் கணினி நூலக மையம்:745412. https://archive.org/details/cambridgehistory00jack. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒல்ஜைடு&oldid=3747651" இலிருந்து மீள்விக்கப்பட்டது