உள்ளடக்கத்துக்குச் செல்

குடியரசு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடியரசு
இயக்கம்சபிர் உசேன்
தயாரிப்புகே. சுரேஷ் கண்ணன்
இ. எஸ். சத்யநாராயணா
கதைசபிர் உசேன்
இசைகார்த்திக் ராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுவி. பாபு
படத்தொகுப்புகே. எம். ரியாஸ்
கலையகம்திருச்செந்தூர் முருகன் புரொடக்சன்ஸ்
சாமுராய் பிக்சர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 13, 2009 (2009-02-13)
ஓட்டம்105 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குடியரசு (Kudiyarasu) 2009 ஆம் ஆண்டு விக்னேஷ் மற்றும் அறிமுக நாயகி சபர்ணா ஆனந்த் (சுகுணா) நடிப்பில், சபிர் உசேன் இயக்கத்தில், கே. சுரேஷ் கண்ணன் மற்றும் இ. எஸ். சத்யநாராயணா தயாரிப்பில், கார்த்திக்ராஜா இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2][3] இப்படத்தில் நடிகர் விக்னேஷ், விக்னேஷ்வரன் என்ற பெயரில் நடித்தார்.[4] இப்படம் 2009 பிப்ரவரி 13 அன்று வெளியானது.[5][6]

கதைச்சுருக்கம்

[தொகு]

கண்ணன் (விக்னேஷ்) முதுகலை ஊடகவியல் மாணவன். ஊடகத்துறைப் பற்றி கல்லூரி நிகழ்ச்சியில் அவனது உரைவீச்சால் கவரப்படும் 'குடியரசு' செய்தித்தாளின் பதிப்பாசிரியர் ராம் (ஸ்ரீகாந்த்) அவனைத் தன் செய்தித்தாளின் புலனாய்வு நிருபராக நியமிக்கிறார். நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டு பணத்தை இழக்கும் கண்ணனின் தோழி பிரியா (தாரிகா) தற்கொலை செய்துகொள்கிறார். அந்நிதி நிறுவனத்தின் மோசடி பற்றி புலனாய்வு செய்யும் கண்ணனுக்கு அந்நிறுவனத்தின் கணக்குத் தணிக்கையாளர் ராகவன் (வி. எஸ். ராகவன்), அந்த மோசடிக்குப் பின்புலமாக அமைச்சர் அம்பலவாணன் (சேது விநாயகம்) இருப்பதற்கான ஆதாரத்தைத் தருவதாக வாக்களிப்பதால், அம்பலவாணன் நடத்தும் நிதி நிறுவன மோசடியைப் பற்றி புலனாய்வு செய்து குடியரசு பத்திரிக்கையில் கட்டுரை எழுதுகிறான் கண்ணன்.

குடியரசு பத்திரிக்கை தன் மீது அபாண்டமாக பழி சுமத்துவதாகக் கூறும் அம்பலவாணன் அதற்கான ஆதாரத்தைக் கோருகிறார். ராகவன் தன் பேத்தி ஆர்த்தியிடம் (நீபா) அதற்கான ஆதாரத்தைக் கொடுத்து கண்ணனிடம் கொடுக்கச் சொல்கிறார். கண்ணனைப் பின்தொடரும் அம்பலவாணனின் ஆட்கள் அந்த ஆதாரத்தைக் கைப்பற்றுகின்றனர். அம்பலவாணனை நேரடியாக சந்திக்கும் ஆர்த்தி மற்றும் கண்ணன், அம்பலவாணன் அவரே தன் குற்றத்தைப் பற்றிக் கூறுவதை அவருக்குத் தெரியாமல் காணொளிப் பதிவுசெய்து முதலமைச்சரிடம் (ஜான் அமிர்தராஜ்) காட்டுகின்றனர். இதனால் தன் அமைச்சர் பதவியை அம்பலவாணன் இழக்கிறார். இந்த உண்மையை வெளிக்கொணர்ந்த கண்ணன் மற்றும் ஆர்த்தியை முதலமைச்சர் பாராட்டுகிறார்.

நடிகர்கள்

[தொகு]

இசை

[தொகு]

படத்தின் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா. பாடலாசிரியர் ஆண்டாள் பிரியதர்ஷினி.[7]

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 ஐந்தரை அடியில் மால்குடி சுபா, சுனிதா சாரதி 3:58
2 இது என்ன இது கார்த்திக் ராஜா, பேலா ஷெண்டே 4:28
3 இது என்ன இது கார்த்திக் ராஜா, பேலா ஷெண்டே 4:19

மேற்கோள்கள்

[தொகு]
  1. "குடியரசு". Archived from the original on 2010-03-29. பார்க்கப்பட்ட நாள் 2019-03-25.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "குடியரசு கதை".[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "படக்குழு".
  4. "விக்னேஷ் - விக்னேஸ்வர்".
  5. "வெளியீடு".
  6. "வெளியீடு".
  7. "பாடல்கள்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடியரசு_(திரைப்படம்)&oldid=3659856" இலிருந்து மீள்விக்கப்பட்டது