கிளையி உயிரணு
கிளையி உயிரணுக்கள் (Dendritic cells) மனித உடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை யில் தொழிற்படும் நோய் எதிர்ப்பு உயிரணுக்களில் ஒரு வகையாகும். இதன் முக்கிய தொழில், பிறபொருளெதிரியாக்கிகளை மேற்பரப்பில் கொண்டு, ஏனைய நோயெதிர்ப்புக் கலங்களுக்கு அதனை முன் வைக்கும். அதனால் இவற்றை பிறபொருளெதிரியாக்கி - முன்வைக்கும் கலங்கள் என அழைப்பர்.
வெளிச் சூழலுடன் தொடர்புடைய தோல் போன்ற இழையங்களிலும், மூக்கு, நுரையீரல், இரைப்பை, குடல் ஆகிய உறுப்புக்களின் உள் மேற்பரப்பு இழையங்களிலும் இந்த கிளையி உயிரணுக்கள் காணப்படும். அத்துடன் குருதியில் இவை முதிர்ச்சி அடையாத நிலையில் காணப்படும். தொழிற்பாட்டு விலைக்கு வந்ததும் இவை நிணநீர்க்கணுக்களுக்கு செல்லும். அங்கு T உயிரணு, B உயிரணுக்களுடன், ஒன்றிணைந்து குறிப்பிட்ட நோய்க்காரணிகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் பங்கெடுக்கும். முதிராத நிலையில் இருந்து, முதிர்ந்த தொழிற்படும் நிலைக்கு விருத்தியடையும்போது சில நிலைகளில், இவற்றில் கிளைகள் போன்ற வெளி நீட்டங்கள் தோன்றும். அதனாலேயே இவை கிளையி என்ற பெயரைப் பெற்றன. இவற்றின் உருவம் நியூரோன் எனப்படும் நரம்புக் கலங்களை ஒத்திருப்பினும், இவற்றின் கிளைகள் பல விதத்தில் அவற்றிலிருந்து வேறுபடுகின்றன.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Revisiting hematopoiesis: applications of the bulk and single-cell transcriptomics dissecting transcriptional heterogeneity in hematopoietic stem cells". Briefings in Functional Genomics 21 (3): 159–176. March 2022. doi:10.1093/bfgp/elac002. பப்மெட்:35265979.
- ↑ Steinman, R. M.; Cohn, Z. A. (1973). "Identification of a Novel Cell Type in Peripheral Lymphoid Organs of Mice : I. Morphology, Quantitation, Tissue Distribution". The Journal of Experimental Medicine 137 (5): 1142–1162. doi:10.1084/jem.137.5.1142. பப்மெட்:4573839. பப்மெட் சென்ட்ரல்:2139237. https://archive.org/details/sim_journal-of-experimental-medicine_1973-05_137_5/page/1142.
- ↑ "Dendritic cells and the control of immunity". Nature 392 (6673): 245–52. March 1998. doi:10.1038/32588. பப்மெட்:9521319. Bibcode: 1998Natur.392..245B.