உடற்செல் மிகுமாற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உடற்செல் மிகுமாற்றம் (Somatic hypermutation; SHM) என்பது நோயெதிர்ப்புத் தொகுதியானது நுண்ணுயிரிகளைப் போன்ற புதிய அயல் மூலகங்களை எதிர்கொள்ள இணக்கமாகும் உயிரணுச் செயற்பாட்டினைக் குறிக்கும். ஈர்ப்பு முதிர்வு (affinity maturation) நிகழ்வின் ஒரு முக்கிய பாகமான உடற்செல் மிகுமாற்றமானது, அயல் எதிர்ப்பிகளை அடையாளம் கண்டுகொள்ளும் "பி-செல்" ஏற்பிகளைப் பலவகைப்பட்டதாக்குகிறது. இதன் மூலம், ஒரு உயிரியின் வாழ்நாளில் ஏற்படும் உடலுக்கு ஊறு ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக நோயெதிர்ப்புத் தொகுதி போராட வழிவகுக்கிறது[1]. உடற்செல் மிகுமாற்றம், எதிர்ப்பான்களின் மாறுபடு பகுதி மரபணுக்களின், திட்டமிட்ட மரபணு சடுதிமாற்ற நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. கருவணுவரிசை சடுதிமாற்றத்தைப் (germline mutation) போலல்லாது, உடற்செல் மிகுமாற்றம் தனிப்பட்ட வெள்ளையணுக்களிலேயே ஏற்படுகின்றது. எனவே, இத்தகு மரபணு சடுதி மாற்றங்கள் சந்ததிகளுக்கு செல்வதில்லை[2]. இலக்கற்ற உடற்செல் மிகுமாற்றங்களே "பி-செல்" வடிநீரகப்புற்று உருவாகும் வழிமுறைக்கு காரணமாக இருக்கக்கூடும்[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Janeway, C.A., Travers, P., Walport, M., Shlomchik, M.J. (2005). Immunobiology (6th ). Garland Science. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8153-4101-6. 
  2. Oprea, M. (1999) Antibody Repertoires and Pathogen Recognition: பரணிடப்பட்டது 2008-09-06 at the வந்தவழி இயந்திரம் The Role of Germline Diversity and Somatic Hypermutation (Thesis) University of Leeds
  3. Odegard V.H., Schatz D.G. (2006). "Targeting of somatic hypermutation". Nat. Rev. Immunol. 6 (8): 573–583. doi:10.1038/nri1896. பப்மெட்:16868548. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடற்செல்_மிகுமாற்றம்&oldid=3270931" இலிருந்து மீள்விக்கப்பட்டது