மெய்யிய மீளிணைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி(டி)ஜெ மீளிணைவு
சுசுமு டோனகாவா

மெய்யிய மீளிணைவு (somatic recombination) அல்லது வி(டி)ஜெ மீளிணைவு (V(D)J recombination) என்பது நோயெதிர்ப்பு அமைப்பில் எதிர்ப்பான்கள் மற்றும் டி செல் ஏற்பிகள் உற்பத்தியின் ஆரம்ப கால கட்டங்களில் நிகழும் மரபிய மீளிணைவாகும். இத்தகு மெய்யிய மீளிணைவு முதன்மை நிணநீரகத் திசுக்களில் (தைமசில் டி செல்களிலும், எலும்பு மச்சையில் பி செல்களிலும்) நடைபெறுகிறது. முதுகெலும்பிகளின் நிணநீர்க் குழியங்களில் வி(டி)ஜெ மீளிணைவு ஏறத்தாழச் சீரற்ற முறையில் வி (மாறுகின்ற; Variable), டி (வெவ்வேறான; Diverse), ஜெ (சேரும்; Joining) மரபணுத் துண்டுகள் பிணைவதால் உண்டாகிறது. வெவ்வேறு மரபணுக்களை ஒழுங்கற்ற முறையில் தேர்ந்தெடுப்பதன் மூலமாகப் பலதரப்பட்ட (பாக்டீரியா, தீ நுண்மங்கள், ஒட்டுண்ணிகள், செயற்படாத கழலைச் செல்களின்) எதிர்ப்பிகளுக்கெதிரான பல்வேறு எதிர்ப்பான் புரதங்களைக் குறியீடு செய்ய முடிகிறது[1].

எதிர்ப்பான்களின் பன்மயத்திற்கு வி(டி)ஜெ மீளிணைவு அடிப்படையாக இருப்பதைக் கண்டறிந்தமைக்காக சுசுமு டோனகாவா மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல்பரிசினை 1987 ஆம் ஆண்டு பெற்றார்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Abbas AK and Lichtman AH (2003). Cellular and Molecular Immunology (5th ). Saunders, Philadelphia. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7216-0008-5. 
  2. THE NOBEL ASSEMBLY AT THE KAROLINSKA INSTITUTE.(1987). "The Nobel Prize in Physiology or Medicine 1987. Susumu Tonegawa". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 7 சூன் 2014.

மேலதிக விவரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்யிய_மீளிணைவு&oldid=2764920" இலிருந்து மீள்விக்கப்பட்டது