கிளிமரத்துகாவு கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
:மூலவர் கருவறை

கிளிமரத்துகாவு கோயில் என்பது இந்தியாவின் கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள கடக்கலில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயில் கிளிமரத்துகாவு சிவ பார்வதி கோயில் என்றழைக்கப்படுகிறது. அய்யப்பனின் மிகப்பெரிய சிலை இக்கோயிலில் உள்ளது.

வரலாறு[தொகு]

முன்பு இருந்த பழைய கோயில் கடந்த காலத்தில் அழிக்கப்பட்டு சிலைகள் மட்டுமே எஞ்சியிருந்ததாக நம்பப்படுகிறது. பின்னர் 21 ஆம் நூற்றாண்டில், ஒரு புதிய கோயில் கட்டப்பட்டது. 2011ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தேவசம் போர்டு, கோயில் ஆலோசனைக் குழுவின் உதவியுடன் புதுப்பிக்கப்பட்ட கோயிலை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.

துணைத்தெய்வங்கள்[தொகு]

மூலவர் கருவறையில் சிவன், பார்வதி சிற்பங்கள் உள்ளன. [1]இக்கோயிலில் சிவன், மகாநாதன் ஆகிய இரண்டு சிவன் தெய்வங்கள் உள்ளன. பார்வதி, முருகன், சாஸ்தா, அனுமன், கணபதி, நாகம், நவகிரகம் உள்ளிட்ட பிற தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. கோயில் குளத்தின் நடுவில் அனுமன் கோயில் உள்ளது.

விழாக்கள், பூசைகள்[தொகு]

அன்னையர் தினத்தன்று மாத்ரு பூசை, கர்கிடகம் மாதத்தில் ஔஷத கஞ்சி படைத்தல், கும்பம் மலையாள நாட்காட்டியில் மகா சிவராத்திரி, கன்னி மலையாள நாட்காட்டியில் நவராத்திரி, துலாம் மலையாள நாட்காட்டியில் கந்த சஷ்டி, விருச்சிகம் மலையாள நாட்காட்டியில் மண்டலபூஜை மகரவிளக்கு, மேடம் மலையாள நாட்காட்டியில் அனுமன் ஜெயந்தி ஆகியவையும் கொண்டாடப்படுகின்றன.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

படத்தொகுப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளிமரத்துகாவு_கோயில்&oldid=3829207" இலிருந்து மீள்விக்கப்பட்டது