கிறிஸ்துவின் திரு ஆத்துமமே (செபம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிறிஸ்துவின் திரு ஆத்துமமே எனத்துவங்கும் செபமானது கத்தோலிக்க திருச்சபையின் மரபில் நடுக் காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வரும் செபமாகும். இச்செபமானது கத்தோலிக்கருக்கு நற்கருணையின் மீது இருக்கும் நம்பிக்கைகளையும், திருமுழுக்கு, மற்றும் திருப்பாடுகள் ஆகியவற்றில் இருக்கும் நம்பிக்கைகளையும் அடிப்படையாகக்கொண்டதாகும்.[1]

ஜீன்-பாப்திஸ்டு லூலி (Jean-Baptiste Lully) இச்செபத்துக்கு இசைவடிவம் கொடுத்துள்ளார். புனித லொயோலா இஞ்ஞாசியார் தனது ஆன்ம பயிற்சிகள் (Spiritual Exercises) நூலில் இச்செபத்தை குறிப்பிட்டுள்ளதால் இதன் ஆசிரியர் இவர் என பலர் தவறாக எண்ணுகின்றனர். இக்காரணத்தால் இச்செபமானது இஞ்ஞாசியார் செபம் எனவும் அழைக்கப்படுகின்றது. எனினும் அவருக்கு முந்தியே பல செபநூல்களில் இச்செபமானது இடம்பெற்றுள்ளது என்பது குறிக்கத்தக்கது.

இதன் ஆசிரியர் திருத்தந்தை இருபத்திரண்டாம் யோவான் என்பது சிலர் கருத்து. ஆயினும் இதற்கு எச்சான்றும் இல்லை.

செபம்[தொகு]

இலத்தீன் தமிழ்
Anima Christi, sanctifica me.
Corpus Christi, salva me.
Sanguis Christi, inebria me.
Aqua lateris Christi, lava me.
Passio Christi, conforta me.
O bone Jesu, exaudi me.
Intra tua vulnera absconde me.
Ne permittas me separari a te.
Ab hoste maligno defende me.
In hora mortis meae voca me.
Et iube me venire ad te,
Ut cum Sanctis tuis laudem te.
In saecula saeculorum.
Amen
கிறிஸ்துவின் திரு ஆத்துமமே, என்னைத் தூய்மையாக்கும்
கிறிஸ்துவின் திரு உடலே, என்னை மீட்டருளும்.
கிறிஸ்துவின் திரு இரத்தமே, என்னை நிரப்பியருளும்.
கிறிஸ்துவின் திருவிலாத் தண்ணீரே, என்னை கழுவியருளும்.
கிறிஸ்துவின் திருப்பாடுகளே, என்னைத் திடப்படுத்தும்.
ஓ, நல்ல இயேசுவே, எனக்கு செவி சாய்த்தருளும்.
உம் திருக்காயங்களுக்குள் என்னை மறைத்தருளும்.
உம்மை விட்டு என்னைப் பிரியவிடாதேயும்.
பகைவரிடமிருந்து என்னைக் காத்தருளும்.
என் மரண நேரத்தில் என்னை அழைத்து,
உம் புனிதரோடு எக்காலமும்
உம்மைப் புகழ எனக்குக் கற்பித்தருளும்
ஆமென்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Anima Christi at Catholic prayers [1]