கிருஷ்ண குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருஷ்ண குமார்
பிறப்பு12 சூன் 1968 (1968-06-12) (அகவை 55)
திருவனந்தபுரம், கேரளம்
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட நடிகர், தொலைக்காட்சி நடிகர், அரசியல்வாதி, செய்தி வாசிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1994 – present
பெற்றோர்
  • கோபாலகிருஷ்ணன் நாயர்
  • ரெத்னம்மா
வாழ்க்கைத்
துணை
சிந்து கிருஷ்ணா (தி. 1994)
பிள்ளைகள்

கிருஷ்ண குமார் (Krishna Kumar, பிறப்பு: சூன் 12, 1968) என்பவர் கேரளாவைச் சேர்ந்த இந்திய நடிகரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் தமிழ், மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஒருமுறை இந்திய இராணுவத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் இவர் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராக ஆனார். தற்போது கேரளாவைச் சேர்ந்த பாஜக தேசிய மன்ற உறுப்பினராக உள்ளார்.

வாழ்க்கை[தொகு]

கிருஷ்ண குமார் திருவனந்தபுரத்தில் கோபாலகிருஷ்ணன் நாயருக்கும் ரெத்னம்மாவுக்கும் பிறந்த இரண்டு மகன்களில் இளைய மகனாக பிறந்தார். இவரது குடும்ப உறுப்பினர்கள் இந்திய இராணுவத்தில் பணியாற்றிய பின்னணியைக் கொண்டிருந்தனர், குமாரும் இராணுவத்தில் சேரத் தயாராகிக்கொண்டிருந்தார், அப்போதுதான் தூர்தர்ஷனில் செய்தி தொகுப்பாளராக பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். தூர்தர்ஷனில் பணிபுரியும் மூத்த அதிகாரியான அவரது பக்கத்து வீட்டுக்காரர் தான், இவருக்கு முகம் இருப்பதைக் கண்டறிந்து, அரசாங்கத்துக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனத்தில் இவருக்கு வேலை வழங்க முன்வந்தார், குமார் அதை ஏற்று ஊடகத் தொழிலுக்குச் செல்ல முடிவு செய்தார்.[1]

தொழில்[தொகு]

முதல் ஊடக வாய்ப்பைப் பெற்றபோது தூர்தர்ஷனில் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளராக பணிபுரிந்தார். இவரைப் பார்த்த கைலாசம் பாலச்சந்தரின் மகன், தூர்தர்ஷன் மலையாளத்திற்காகத் தயாரிக்கப்பட்ட 13 அதியங்களை கொண்ட தொலைக்காட்சித் தொடரில் நடிக்க வாய்ப்பளித்தார். நடிகர் நெடுமுடி வேணுவின் மகன் பாத்திரத்தில் அறிமுகமானார். அந்த நேரத்தில் தூர்தர்ஷன் மலையாளம் மட்டுமே மலையாள மொழி தொலைக்காட்சியாக இருந்தது. பிறகு ஏசியாநெட் அறிமுகமானபோது, முதலில் சித்திக் மற்றும் வினயா பிரசாத் நடித்த ஸ்த்ரீ (1998-2000) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை உருவாக்கினர், கிருஷ்ண குமார் சார்லட்டன் என்ற ஒரு பாத்திரத்தில் நடித்தார். சித்திக் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியபோது, கிருஷ்ண குமார் புதிய கதாநாயகனாக மாற்றப்பட்டார், அந்நிகழ்ச்சி ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது.[2]

1993 ஆம் ஆண்டு ஜோஷி இயக்கிய சயின்யம் திரைப்படத்தில் அறிமுகமானார், அதில் அவர் கடற்படை அதிகாரியாக நடிக்கவிருந்தார், ஆனால் அக்காட்சிகள் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது, இவரை ஜோஷி ஏமாற்றவில்லை, இவருக்கு விக்ரமுக்கு ஒலிச்சேர்க்கை செய்ய கொடுத்தார். ஒலிச்சேர்க்கை கலைஞர்களின் சங்கத்திலிருந்து ஒலிச்சேர்க்கை கலைஞர்களுக்கான அட்டை இல்லை என்று கூறி இவர் ஒலிச்சேர்க்கை நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.[3] பின்னர் 1994 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான காசுமீரம் மூலம் மீண்டும் அறிமுகமானார். இதன் பிறகு பல மலையாள திரைப்படங்களிலும் தொடர்களிலும் நடித்தார். பின்னர் சில தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க துவங்கினார், பில்லா 2, தெய்வத்திருமகள், முகமூடி போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[4][5]

அரசியல்[தொகு]

கிருஷ்ண குமார் பிப்ரவரி 2021 இல் அதிகாரப்பூர்வமாக பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார் [6] 2021 கேரள சட்டப் பேரவைத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக நின்றார்.[7] அக்டோபர் 5, 2021 அன்று, இவர் கேரள பாஜக தேசிய மன்றத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கிருஷ்ண குமார் தூர்தர்ஷனில் செய்தி தொகுப்பாளராக இருந்தபோது, சிந்து என்ற பெண்ணை 12 திசம்பர் 1994 அன்று திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு அகானா கிருஷ்ணா, இசானி கிருஷ்ணா, தியா கிருஷ்ணா, அன்சிகா கிருஷ்ணா உட்பட நான்கு மகள்கள் உள்ளனர். சிந்து விளம்பர நிறுவனத்தை நடத்தி வருகிறார்.[8][9][10]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

மலையாளத் திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மேற்.
1994 காசுமீரம் உன்னி
சுக்ருதம் பாபு பிரசாத்
பக்சே இராஜன்
1995 ஆலஞ்சேரி தம்ப்ராக்கள் மகேசு
பாக்சுர் தொலைக்காட்சித் செய்தியாளர்
மாந்திரிகம் டக்ளசு
புதுக்கோட்டையிலே புதுமணவாளன் ஆனந்தன்/சான் சகாரியா
1996 ஆகாசத்தேக்கொரு கிளிவாதில்
1996 மகாத்மா ராசீவ்
1996 மயூர நிருத்தம் நடிகர்
1997 இரட்டைக்குட்டிகளுடெ அச்சன் இராபர்ட்
சூப்பர்மேன்
மாசுமரம் ஏ. எசு. பி. விஷ்ணு இ.கா.ப
கங்கோத்ரி சரத்தின் உதவியாளர்
1998 ஆகோசம் உன்னிகிருஷ்ணன்
1999 அக்னிசாச்சி
வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும்
வீண்டும் சில வீட்டுக்காரியங்கள் தொழிலதிபர் அனில் குறுப்பு
பிராணாயாமழா லூயிசு
2000 அரையண்ணங்களுடே வீடு அரீந்திரநாத் மேனன்
சம்மர் பாலேசு ராச்மோகன்
மனசில் ஒரு மஞ்சுதுள்ளி மோகன்தாசு
2001 கட்டு வான்னு விழிச்சப்போல் உன்னி
ஸத்யமேவ ஜெயதே ரெசி மதன்
2002 சுவப்னஹள்ளியில் ஒருநாள்
புண்யம்
ஆபரணச்சார்த்து
2004 சாதிக்காத சாந்து அரவிந்தன்
2008 சவுண்ட் ஆப் பூட் சர்க்கிள் இன்சுபெக்டர் அரவிந்த்
2009 திருநக்கர பெருமாள் சதீசன்
2010 பாட்டின்டே பலாழி
2011 மேல்விலாசம் பி. டி. கபூர்
மேக்கப் மேன் வழக்கறிஞர் கிருஷ்ண பிரசாத்
கலெக்டர் சந்திரன்
2012 ரன் பேபி ரன் விஜய குமார்
மோலி ஆன்ட்டி ராக்சு! ரவி
2013 லோக்பால் ரமேசு
லேடிசு ஆண்ட் ஜென்ட்ல்மேன் சிபி ஜக்கரியா
3 டாட்சு மேத்யூ பால்
விசுதன் கிளீடசு
குட் பாட் ஆண்ட் ஃக்லி மூர்த்தி ராஜ்
2014 சலாம் காஷ்மீர் கேப்டன் சதீசு
கேமர் சாகீர் அலி
2016 மருபடி
2017 1971: பியாண்ட் பார்டர்சு சுதர்சன்
கேர்புல்
வெளிப்படிந்தே புஸ்தகம் கேமராமேன்
2018 சிக்காரி சம்பு ரேஞ்சர் வாசு
பரோல்
ஓராயிரம் கிணக்கலால் சுடீபன்
மோகன்லால் மீனுக்குட்டியின் அப்பா
தீக்குச்சியும் பனித்துளியும் அரி
ஏ போஃர் ஆப்பிள் வழக்கறிஞர் ராம் மோகன்
மூன்னார சிஐ வேல்ராஜ்
2019 ரமேசன் ஒரு பேரல்ல அரசு வழக்கறிஞர்
2021 ஒன் அலெக்சு தாமசு இ.கா.ப, விசிலென்சு இயக்குனர்
2022 செபீக்கின்டே சந்தோசம் செபீக்கின் தந்தை [11]
2023 திரிசங்கு ராபின் [12]

தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம்
2008 சத்யம் முகமது (காவல்துறை)
2012 பில்லா 2 ரகுபீர் சின்ஹா
முகமூடி கமிசனர்
மழைக்காலம் சுரேசு
2011 காவலன் கார்த்திக்
தெய்வ திருமகள் விக்டர்
2016 மனிதன் விஜய் நாயர்
சீரோ கொரான்
2017 லாலி

தொலைக்காட்சித் தொடர்கள்[தொகு]

ஆண்டு தொலைக்காட்சித் தொடர் பாத்திரம் தொலைக்காட்சி மொழி
1998–2000 ஸ்திரீ Vijayan ஏசியாநெட் மலையாளம்
1999–2000 சிந்தூரக்குருவி சூர்யா தொலைக்காட்சி
2000 சாருலதா
2000–2001 ஸ்ரீராமன் ஸ்ரீதேவி ஏசியாநெட்
2001–2003 மானசபுத்திரி சூர்யா தொலைக்காட்சி
2001–2003 வசுந்தரா மெடிக்கல்சு ஏசியாநெட்
2003 சீதாலட்சுமி
2003–2004 ஸ்வாந்தம்
2002 விவாகிதா
2004 கடமடத்து காத்தனார் நிக்கோலஸ்
2006 மாலயோகம் ஆனந்த்
மிசு மேரி தெரசா பால் தூர்தர்ஷன்
பிரவச்சனம்
பந்தலயணியிலேக்கு ஒரு யாத்திரா
2009–2010 தங்கம் செல்வகண்ணன் சன் தொலைக்காட்சி தமிழ்
2010 அபிராமி அபிராமியின் கணவர் கலைஞர் தொலைக்காட்சி
2021 கூடவிடெ பேராசிரியர் ஆதி ஏசியாநெட் மலையாளம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Army's loss, tinsel town's gain | Deccan Chronicle". 2011-05-15. Archived from the original on 2011-05-15. பார்க்கப்பட்ட நாள் 2021-02-23.
  2. Subramanian, Anupama (12 May 2011). "Army's loss, tinsel town's gain". தி டெக்கன் குரோனிக்கள் இம் மூலத்தில் இருந்து 15 May 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110515084600/http://www.deccanchronicle.com/tabloid/all-rounders/army%E2%80%99s-loss-tinsel-town%E2%80%99s-gain-077. 
  3. വിലാസങ്ങള്‍ മാറുന്നു, Interview – Mathrubhumi Movies பரணிடப்பட்டது 15 திசம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம். Mathrubhumi.com (11 October 2012). Retrieved on 13 February 2014.
  4. Sreedhar Pillai (26 December 2010). "KK is waiting for audience's reaction". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 19 September 2012. பார்க்கப்பட்ட நாள் 28 August 2012.
  5. V Lakshmi (9 April 2011). "Krishnakumar is a happy man". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 19 September 2012. பார்க்கப்பட்ட நாள் 28 August 2012.
  6. "Malayalam actor Krishna Kumar joins BJP". 4 February 2021.
  7. "BJP fields Sreedharan from Palakkad, ex-DGP Jacob Thomas from Irinjalakuda for polls". 14 March 2021.
  8. "Sindhu talks about Life with Actor Krishna Kumar". 10 February 2014. http://www.newindianexpress.com/entertainment/malayalam/Sindhu-talks-about-Life-with-Actor-Krishna-Kumar/2014/02/10/article2047666.ece. 
  9. "Manassiloru Mazhavillu on Kairalitv".
  10. "Ahana Krishna's family .. !". http://www.newindianexpress.com/entertainment/malayalam/Sindhu-talks-about-Life-with-Actor-Krishna-Kumar/2014/02/10/article2047666.ece. 
  11. "Shefeekkinte Santhosham Movie Review : Irony of happiness". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movie-reviews/shefeekkinte-santhosham/movie-review/95771910.cms. 
  12. "Panjimittai song from Thrishanku is out". Cinema Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-25.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ண_குமார்&oldid=3936358" இலிருந்து மீள்விக்கப்பட்டது