நெடுமுடி வேணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெடுமுடி வேணு
கே. வேணு கோபல்
பிறப்பு(1948-05-22)22 மே 1948
ஆலப்புழை, கேரளா, இந்தியா
இறப்புஅக்டோபர் 11, 2021(2021-10-11) (அகவை 73)
திருவனந்தபுரம்
இருப்பிடம்திருவனந்தபுரம், இந்தியா
செயற்பாட்டுக்
காலம்
32
பெற்றோர்பி. கே. கேசவன், பி. குஞ்ஞிக்குட்டியம்மா
வாழ்க்கைத்
துணை
டி. ஆர். சுசீலா
பிள்ளைகள்உன்னி, கண்ணன்

நெடுமுடி வேணு (Nedumudi Venu; மலையாளம்: നെടുമുടി വേണു, 22 மே 1948 – 11 அக்டோபர் 2021) இந்தியாவின் கேரளாவைச் சார்ந்த திரைப்பட நடிகர் ஆவார்[1]. இவர் மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றினார். இவரது இயற்பெயர் கே. வேணு கோபால் (K. Venu Gopal) ஆகும். நாடகத்தில் நடித்த பெயரான நெடுமுடி வேணு என்றே பெரும்பாலும் அறியப்பட்டார். இவர் திரைக்கதையும் எழுதியதோடு, ஒரு மலையாளத் திரைப்படத்தையும் இயக்கினார்.[2][3][4][5]. இவர் கேரளா மாநிலத்தின் ஆலப்புழையில் பிறந்தவர். திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்னர் கலாகெளமுதி பத்திரிகையில் பணியாற்றினார். இவரது பெற்றோர் பி. கே. கேசவன், பி. குஞ்ஞிக்குட்டியம்மா ஆவர். இவரது மனைவியின் பெயர் டி. ஆர். சுசீலா. இவரின் மகன்கள் உன்னி, கண்ணன் என்போர் ஆவர்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-12-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131219073142/http://www.mathrubhumi.com/movies/interview/14070/. 
  2. "Bring theatre to the people: Nedumudi Venu" இம் மூலத்தில் இருந்து 2013-11-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131102062855/http://www.hindu.com/2008/09/21/stories/2008092154180500.htm. 
  3. "Votary of good cinema" இம் மூலத்தில் இருந்து 2013-11-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131102055211/http://www.hindu.com/fr/2007/04/06/stories/2007040600490200.htm. 
  4. "In the role of an actor" இம் மூலத்தில் இருந்து 2013-11-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131102051913/http://www.hindu.com/fr/2008/06/27/stories/2008062750030100.htm. 
  5. "Another year of plenty for Malayalam cinema" இம் மூலத்தில் இருந்து 2008-10-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081008044756/http://www.hindu.com/2008/06/11/stories/2008061159190400.htm. 
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-12-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131203023649/http://entertainment.oneindia.in/malayalam/news/2009/nedumudi-venu-son-marriage-240809.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுமுடி_வேணு&oldid=3838162" இருந்து மீள்விக்கப்பட்டது