கியோத்தோ நகரிய மாநிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கியோத்தோ நகரிய மாநிலம் (Kyoto Prefecture (京都府 Kyōto-fu?)) [[யப்பான்[ஜப்பானிலுள்ள]] ஒன்சூ தீவின் கன்சாய் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம். [1] இதன் தலைநகர் கியோத்தோ நகரம்.[2] ஜப்பானின் பண்பாட்டுத் தலைநகராகக் கருதப்படும் இப்பகுதி ஜப்பானிலுள்ள இரண்டு நகரிய மாநிலங்களில் ஒன்று, மற்றொன்று ஓசகா நகரிய மாநிலம்.

வரலாறு[தொகு]

மெய்ஜி மறுசீரமைப்பு வரை, கியோத்தோ மாநிலம் உள்ள பகுதி யமஷீரோ என அழைக்கப்பட்டது.[3] வரலாற்றின் பெரும்பகுதியில், ஜப்பானியப் பேரரசின் தலைநகராக கியோத்தோ நகர் இருந்துள்ளது. இதன் வரலாற்றை ஆறாம் நூற்றாண்டிலிருந்தே அறியலாம். 544 இல், நல்ல அறுவடைக்காகவும் மற்றும் நல்ல காலநிலைக்காகவும் ஆவொய் மட்சுரி வழிபாடு கியோத்தோவில் நடைபெற்றுள்ளது.

இரண்டாம் உலகப்போரின் ஆக்கிரமிப்பின் போது, அமெரிக்க ஆறாவது படை கியோத்தோவைத் தலைமையிடமாகக் கொண்டிருந்தது.

புவியியல்[தொகு]

கியோத்தோ மாநிலம் கிட்டத்தட்ட ஒன்சூ தீவிற்கும் ஜப்பானுக்கும் மையமாக அமைந்துள்ளது. 4,612.71 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இது ஜப்பானின் நிலப்பரப்பில் 1.2% ஆகும். இது ஜப்பானில் 31வது இடம் வகிக்கின்றது. ஜப்பான் கடல் மற்றும் ஃபுக்கி மாநிலம் வடக்கிலும் ஓசகா மற்றும் நாரா மாநிலங்களைத் தெற்கிலும் மீ மற்றும் ஷீகா மாநிலங்களைக் கிழக்கிலும் ஹியோகொ மாநிலத்தை மேற்கிலும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம்மாநிலத்தை நடுவில் பிரிக்கும் தன்பா மலைகளினால் இதன் வடக்கு ப்பகுதியும் தெற்குப்பகுதியும் மிகவும் மாறுபட்ட காலநிலைகளைக் கொண்டுள்ளன.

1 ஏப்ரல் 2012 நிலவரப்படி, மாநிலத்திலுள்ள மொத்த நிலப்பரப்பில் 6% இயற்கை பூங்காக்களுக்காக வரையறுக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் சனின் கைகன் தேசிய பூங்கா பிவாகோ, தங்கோ-அமனோஹஷிடட்டே-ஓயியமா மற்றும் வகாசா வான் குவாசி தேசிய பூங்காக்கள்; மற்றும் ஹொசுக்யோ, கசிகியாமா, மற்றும் ருரிக்கை மாவட்ட இயற்கை பூங்காக்கள் உள்ளன.[4]

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

நகரங்கள்[தொகு]

பதினைந்து நகரங்கள் கியோத்தோ மாநிலத்தில் அமைந்துள்ளன.

 • அயாபே
 • ஃபுகுச்சியாமா
 • ஜோயோ
 • கமியோகா
 • கிசுகாவா
 • கியோதனாபெ
 • கியோதங்கோ
 • கியோத்தோ (தலைநகர்)
 • மைசுரு
 • மியாசூ
 • முகோ
 • நகவோகக்யோ
 • நன்டன்
 • உஜி
 • யவாட்டா

மாவட்டங்களும் சிற்றூர்களும்[தொகு]

 • ஃபுனாய் மாவட்டம்
 • கியோடம்பா
 • குசெ மாவட்டம்
 • குமியாமா
 • ஒதொகுனி மாவட்டம்
 • ஓயமஸாக்கி
 • ஸோரக்கு மாவட்டம்
 • கசாகி
 • மினமியமஷிரோ
 • சைகா
 • வசூகா
 • த்சுசூகி மாவட்டம்
 • இதே
 • உஜிதவாரா
 • யோசா மாவட்டம்
 • இனே
 • யோசனோ

பொருளாதாரம்[தொகு]

கியோத்தோ பெருமளவில் சுற்றுலாவை நம்பியே உள்ளது. வடகியோத்தோவிலுள்ள தங்கோ தீபகற்பத்தில் மீன்பிடி தொழில் மற்றும் நீர் போக்குவரத்து உள்ளது, உட்கியோத்தோவில் வேளாண்மையும் வனவளமும் உள்ளன. நிண்டெண்டோவின் தலைமையிடமாக கியோத்தோ நகரம் உள்ளது.

பண்பாடு[தொகு]

ஆயிரம் ஆண்டுகளாக யப்பானின் தலைநகராக இருந்த கியோத்தோ ஜப்பானின் பண்பாட்டுத் தலைநகராக இன்றும் இருந்துவருகின்றது.

சுற்றுலா[தொகு]

கியோத்தோ மாநிலம் யப்பானிலுள்ள ஒரு புகழ்பெற்ற சுற்றுலா ஈர்ப்பு தளம். கியோத்தோவில் நடைபெறும் விழாக்களில் சில

 • 544 லிருந்து ஆவொய் மட்சுரி
 • 869 லிருந்து கியோண் மட்சுரி
 • எடோ காலத்திலிருந்து இனே மட்சுரி
 • 1662 லிருந்து தைமோஞ்சி கோசான் ஒகுரிபி
 • 1895 லிருந்து ஜிதை மட்சுரி

ஒவ்வொரு மடம் மற்றும் கோவில் நிகழ்வுகளில் சிலவற்றை பொது மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றது.

கல்வி[தொகு]

கியோத்தோவிலுள்ள பல்கலைக்கழகங்கள்

 • கியோத்தோ கல்வியியல் பல்கலைக்கழகம்
 • கியோத்தோ தொழில்நுட்ப நிறுவனம்
 • அயல்நாட்டுப் படிப்புகளுக்கான கியோத்தோ பல்கலைக்கழகம்
 • தோஷிஷா பல்கலைக்கழகம்
 • ரிட்சூமைக்கன் பல்கலைக்கழகம்
 • கியோத்தோ சங்யோ பல்கலைக்கழகம் (கியோட்டோ தொழிற்சாலை பல்கலைக்கழகம்)
 • ருயுகோகு பல்கலைக்கழகம்
 • புக்யோ பல்கலைக்கழகம்
 • ஒதனி பல்கலைக்கழகம்
 • கியோத்தோ காகுயென் பல்கலைக்கழகம்
 • ஹனசோனோ பல்கலைக்கழகம்

விளையாட்டு[தொகு]

கீழே பட்டியலிடப்பட்டுள்ள விளையாட்டு அணிகள் கியோத்தோவை அடிப்படையாகக் கொண்டவை.

மாநிலச் சின்னங்கள்[தொகு]

 • மாநிலப்பூ: அழும் செர்ரி
 • மாநில மரம்: கிதயாமா சூகி
 • மாநிலப் பறவை: கோடுகளுடைய ஷியர்வாட்டர் கடற்பறவை

நட்றவுப்பகுதிகள்[தொகு]

கியோத்தோ மாநிலம் பின்வரும் பகுதி / மாநிலங்களுடன் மாகாண அளவில் சகோதர / நட்புறவு கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.[5] இந்த உறவு கியோத்தோ மாநிலத்திலுள்ள நகரங்கள் பிற நகரங்களுடன் கொண்டுள்ள நட்றவிலிருந்து வேறுபட்டது.

சான்றுகள்[தொகு]

 1. Nussbaum, Louis-Frédéric. (2005). "Kyoto-fu" in கூகுள் புத்தகங்களில் Japan Encyclopedia, p. 587; "Kansai" in கூகுள் புத்தகங்களில் Japan Encyclopedia, p. 477.
 2. Nussbaum, "Kyoto" in கூகுள் புத்தகங்களில் Japan Encyclopedia, pp. 565-587.
 3. Nussbaum, "Provinces and prefectures" in கூகுள் புத்தகங்களில் p. 780.
 4. "General overview of area figures for Natural Parks by prefecture" (PDF). Ministry of the Environment. 1 April 2014. 27 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
 5. International Exchange: Regions with Friendly Ties to Kyoto Prefecture Retrieved November 29, 2015
 6. "Peringatan 25 Tahun Sister City Kyoto-Yogya, Kedua Kota Mendapat Manfaat" (Indonesian). Koran Tempo. October 6, 2010. May 20, 2014 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
 7. "Edinburgh – Twin and Partner Cities". 2008 The City of Edinburgh Council, City Chambers, High Street, Edinburgh, EH1 1YJ Scotland. 28 March 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 December 2008 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Twin and Partner Cities". City of Edinburgh Council. 14 ஜூன் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 January 2009 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]