கிமு 30
Appearance
ஆயிரமாண்டு: | 1-ஆம் ஆயிரமாண்டு கிமு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
ஆண்டு கிமு 30 (30 BC) என்பது யூலியன் நாட்காட்டியில் ஒரு புதன், வியாழன் அல்லது வெள்ளிக்கி9ழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு அல்லது ஒரு வியாழக்கிழமையில் துவங்கிய நெட்டாண்டு ஆகும். இவ்வாண்டு அக்காலத்தில் "ஒக்டேவியன், கிராசசு ஆகியோரின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Octavian and Crassus) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் ஆண்டு 724 எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு கிமு 30 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.
நிகழ்வுகள்
[தொகு]உரோமைக் குடியரசு
[தொகு]- கையசு யூலியசு சீசர் ஒக்டேவியன் நான்காவது தடவையாக உரோமைப் பேரரசின் உயரதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவருக்குத் துணையாக மார்க்கசு கிரேசசு நியமிக்கப்பட்டார்.
- ஒக்டேவியத் தனது இராணுவத்துக்குத் தலைமை தாங்கி தார்தனெல்சு நீரிணையை அடைந்து, அனத்தோலியாவுக்கு கப்பல்கள் மூலம் சென்றான். அங்கிருந்து சிரியாவுக்கு அணிவகுத்துச் சென்றான். அவனுக்கு ஆதரவாக முதலாம் ஏரோது தனது ஆயிரக்கணக்கான படையினரை அனுப்பி வைத்தான்.
- கோர்னேலியசு காலசு சைரீனில் தரையிறங்கி பரத்தோனிய நகரைக் கைப்பற்றினான். மார்க் அந்தோனி நகர சுவர்களை உடைத்தெறிந்து துறைமுகத்தைச் சுற்றி வளைத்தான். பின்னர் அவனது இராணுவத்தை எகிப்தை நோக்கிப் பின்வாங்கியது.
- சூலை 31 – அலெக்சாந்திரியா சமர்: மார்க் அந்தோனி ஒக்டேவியனின் படைகளுடன் மோதி சிறிய வெற்றியைப் பெற முடிந்தது. ஆனாலும், ஆனாலும், பெருமளவு படையினர் அவனைக் கைவிட்டு ஓடியதை அடுத்து, மார்க் அந்தோனி தற்கொலை செய்ய வேண்டி வந்தது.
- ஆகத்து 1 – ஒக்டேவியன் அலெக்சாந்திரியாவைக் கைப்பற்றினான். இதன் மூலம் பண்டைய எகிப்து அதிகாரபூர்வமாக உரோமைக் குடியரசுடன் இணைக்கப்பட்டது.
- ஏழாம் கிளியோபாற்றா தனது அரண்மனையை விட்டு வெளியேறி செங்கடலின் மேற்குக் கரையின் பெரவிசு துறைமுகத்தை அடைந்தாள். ஆனாலும் நபாத்தா மன்னர் மால்ச்சசு பாலைவனத்தில் இருந்து தாக்கி எகிப்தியக் கப்பல்களை எரியூட்டினான்.
- ஆகத்து 10 அல்லது 12 – கிளியோபாட்ராவின் இறப்பை அடுத்து அவரது மகன் செசேரியன் தூக்கிலிடப்பட்டான். இவனுடன் பண்டைய எகிப்தின் தாலமைக் அரசமரபு முடிவுக்கு வந்தது. எகிப்தில் ஒக்டேவியனின் முதலாம் ஆண்டு ஆட்சி ஆரம்பமானது.
- கிளியோபாத்ராவின் பிள்ளைகள் ஒக்டேவியனால் உரோமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
- ஒக்டேவியன் கிளியோபாத்ராவின் உடைமைகளுக்கு உரிமை கோரினான்.
ஆசியா
[தொகு]- திருவள்ளுவரினால் திருக்குறள் இயற்றப்பட்ட ஆண்டாகக் கருதப்படுகிறது.
- வரலாற்றின் முதலாவது ஒற்றைச் சில்லு வண்டி சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- ஆகத்து 1 – மார்க் அந்தோனி, உரோமப் பேரரசின் உயரதிகாரி, தளபதி (தற்கொலை) (பி. கிமு 83)
- ஆகத்து 12 – ஏழாம் கிளியோபாற்றா, தாலமைக் பேரரசின் கடைசி ஆட்சியாலர் (தற்கொலை) (பி. கிமு 69)