கிமு 28
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 1-ஆம் ஆயிரமாண்டு கிமு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
ஆண்டு கிமு 28 (28 BC) என்பது யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில், ஞாயிற்றுக்கிழமையில் அல்லது திங்கட்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டு அல்லது ஒரு சனிக்கிழமையில் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கிய ஒரு நெட்டாண்டு ஆகும். இவ்வாண்டு அக்காலத்தில் "ஒக்டேவியன், அக்ரிப்பா தூதர்களின் ஆண்டு" (Year of the Consulship of Octavian and Agrippa) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் ஆண்டு 726 எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு கிமு 28 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.
நிகழ்வுகள்[தொகு]
உரோமைக் குடியரசு[தொகு]
- கையசு யூலியசு சேசர் ஒக்டோவியன் ஆறாவது தடவையாக உரோமத்தின் தூதர் என்ற அதியுயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடன் மார்க்கசு அக்ரிப்பா இரண்டாவது தடவையாகத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- உரோமைப் பேரரசின் மேலவை ஒக்டேவியன் சீசருக்கு உரோமை இராணுவத்தின் "உயர் தளபதி" என்ற பட்டத்தை வழங்கியது.
- கிமு 69 இற்குப் பின்னர் முதற்தடவையாக உரோமைக் குடியரசில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.[1]
வானியல்[தொகு]
- மே 10 – சூரியப்புள்ளி சீனாவில் ஆன் வானியலாளர்களால் முதன்முதலாக அவதானிக்கப்பட்டது.[2]
- எமீலியசு வால்வெள்ளி {இன்றைய]] பாக்கித்தானில் மோதியது.
பிறப்புகள்[தொகு]
இறப்புகள்[தொகு]
- முதலாம் மேரியாம்னி, முதலாம் ஏரோதின் மனைவி, இளவரசி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "LacusCurtius • Res Gestae Divi Augusti (II)" (en).
- ↑ "The Observation of Sunspots". UNESCO Courier. 1988. http://findarticles.com/p/articles/mi_m1310/is_1988_Oct/ai_6955852/. பார்த்த நாள்: 2010-07-14.