கிமு 31
Appearance
ஆயிரமாண்டு: | 1-ஆம் ஆயிரமாண்டு கிமு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
ஆண்டு கிமு 31 (31 BC) என்பது யூலியன் நாட்காட்டியில் ஒரு செவ்வாய், புதன், அல்லது வியாழக்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு, அல்லது ஒரு செவ்வாய் அல்லது புதன்கிழமையில் துவங்கிய நெட்டாண்டு ஆகும். அத்துடன் இவ்வாண்டு அக்காலத்தில் "அந்தோனியசு மற்றும் ஒக்டாவியானசு ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Antonius and Octavianus) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் ஆண்டு 723 எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு கிமு 31 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.
திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கிமு 31 என்று மறைமலை அடிகள் கணித்துள்ளார். இதன் படி, இது திருவள்ளுவர் ஆண்டின் ஆரம்பமாகும்.[1]
நிகழ்வுகள்
[தொகு]உரோமைக் குடியரசு
[தொகு]- கையசு யூலியசு சீசர் ஒக்டாவியன் உரோமைக் குடியரசின் ஆட்சியாளராக மூன்றாவது தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
- இக்டாவியன் ஒத்ராண்டோ நீரிணையைக் கடந்து தனது தரைப்படையுடன் தல்மாட்டியாவை அடைந்தான்.
- கலாத்தியா அரசன் அமிந்தாசு தனது 2,000 குதிரைப்படைகளை ஒக்டாவியனிடம் கைவிட்டுத் தப்பி ஓடினான். மார்க் அந்தோனி தனது மூன்றில் ஒரு படையினரை ஊட்டக்குறை, நோய் போன்ற காரணங்களினால் இழந்தான்.
- செப்டம்பர் 2 – உரோமை உள்நாட்டுப் போர்: கிரேக்கத்தின் மேற்குக் கரைக்கருகே, மார்க் அந்தோனி, கிளியோபாட்ரா ஆகியோரின் படைகளை ஒக்டாவியன் சீசர் தோற்கடித்தான்.
- கிளியோபாத்ராவின் புதையல் கப்பல் உட்பட 60 எகிப்தியக் கடற்படைக் கப்பல்கள் பின்வாங்கின. மார்க் அந்தோனி தனது கொடியை சிறிய படகு ஒன்றுக்கு மாற்றி ஒக்டாவியனின் படைகளை ஊடுருவினான்.
- அக்டியம் போரில் வெற்றி பெற்ற 32-வயது ஒக்டாவியன் நிக்கோபோலிசு நகரை அமைத்தான். கிரேக்கர்கள் இங்கு குடியேறினர்.
உரோமைப் பாலத்தீனம்
[தொகு]- யூதேயப் பாலைவனத்தில் தனித்த பீடபூமி ஒன்றில், மசாடா கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. முதலாம் ஏரோது இங்கு ஆயுதசாலை, படைத்தளங்கள், களஞ்சியச்சாலைகள், மற்றும் ஓர் அரண்மனை ஆகியவர்றை அமைத்தான்.
கலை
[தொகு]- எலனியக் காலம் முடிவுற்றது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Reader's Write". The Illustrated Weekly of India, Volume 89 (Part 1): 61. 1968. https://books.google.lk/books?id=IWw6AQAAIAAJ.