உள்ளடக்கத்துக்குச் செல்

சூரியப்புள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2004 சூன் 22 இல் காணப்பட்ட சூரியப்புள்ளிகள்
2006 டிசம்பர் 13 இல் சூரியப்புள்ளிகள்

சூரியப்புள்ளிகள் (Sunspots) என்பது தன் சுற்றுப் புறங்களைப் பார்க்கிலும் மங்கலாக அல்லது கருமையாகத் கதிரவனின் ஒளிமண்டலத்தில் காணப்படும் பெரிய புள்ளிகளாகும். சூரியனிலுள்ள வாயுக்கள் சுற்றிச் சுழலும்போது ஏற்படும் மோதலினால் இவை தோன்றுகின்றன. இந்தத் தற்காலிகத் தோற்றப்பாடு கதிரவனின் சுழற்சி காரணமாக நகருவது போல் தோற்றமளிக்கின்றன. பதினோரு ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிகமாகத் தோன்றுகின்றன. இச்சமயங்களில் காந்தப் புயலும் வட ஒளியும் (Aurora borealis) மின்காந்த அலைப் பரப்பலில் தடங்கலும் தோன்றுகின்றன.[1]

சுற்றுப்புறங்களைவிட இப்புள்ளிகளில் வெப்பநிலை குறைவாக இருப்பதே அவை கருமையாகத் தோன்றக் காரணமாகும். சூரியப்புள்ளிகளில் வெப்பநிலை கிட்டத்தட்ட 3000–4500K (2700–4200 °C) ஆக இருந்தாலும், இவற்றின் சுற்றுப்புறங்களில் அதிகமாக (5,780K (5,500 °C) இருப்பதால், அவை கருமையாகத் தோன்றுகின்றன. இந்த சூரியப்புள்ளிகள் சுற்றுப்புறத்தில் இருந்து அகலுமானால் அது நமது நிலாவை விட மிகவும்வெளிச்சமாகக் காட்சி தரும்.[2] சூரியனின் மேற்பரப்பில் இந்த சூரியப் புள்ளிகள் நகரும் போது அவை விரிந்தோ அல்லது சுருங்கியோ தோன்றும் அவற்றின் விட்டம் 16 கிமீ[3] முதல் சுருங்கியோ அல்லது 160,000 கிலோமீட்டர்கள்[4] வரை விரிவடைந்தோ தோன்றும்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sunspots". NOAA. பார்க்கப்பட்ட நாள் 22 February 2013.
  2. "Sunspots". NASA. 1 April 1998. Archived from the original on 3 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 22 February 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "How Are Magnetic Fields Related To Sunspots?". NASA. பார்க்கப்பட்ட நாள் 22 February 2013.
  4. "Sun". HowStuffWorks. பார்க்கப்பட்ட நாள் 22 February 2013.
  5. harvard.edu
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியப்புள்ளி&oldid=3710035" இலிருந்து மீள்விக்கப்பட்டது