கவரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கவரா (Gavara) அல்லது கவரை (Kavarai) என்று அழைக்கப்படுவோர் இந்தியாவில் உள்ள ஒரு சாதிப் பிரிவினர். 1909 இல், சென்னை மாகாணத்திற்காக மக்கள் தொகைக் கணக்குகளை ஆய்வு செய்த எட்கர் துர்ச்டன், அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில், நாயுடு என்ற அடைமொழியை பயன்படுத்திய சாதியினர் பலிஜா, பேஸ்த, போயர், எக்காரி, கவரா, கொல்லா, கலிங்கி, காப்பு, முத்துராஜா மற்றும் வேலம ஆகியோர் எனக் கூறியுள்ளார். மேலும் துர்ஸ்டன் நாயுடு தமிழில் நாயக்கர் அல்லது நாயக்கன் என்றழைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.[1]

போயர்கள் (Bhoyar/Boyar/Bhoir), கவரா (Kavara) மற்றும் கோஹர்யா என்பன கோழி (Kohli ) இனத்திலிருந்து பூர்வ வழியாக வந்த இனமாகும்.[2]

கோழி (koli) எனும் இனத்தவர்களும் கிராத் (kirat) இனத்தவர்களான இராமாயணம் எழுதிய வால்மீகி முனிவரின் இனமும் ஒன்றே எனவும் மேலும் இவர்கள் சூரிய குலத்தினை சார்ந்தவர்கள் என்றும் புராணங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.[3]

அஹீர் (Ahir)எனும் ராஜபுத்திர இனம் கவரா இனமே அவ்வினத்தினை கோலி (Gaoli), கோள (Guala),கோளகர் (Golkar),கோலன் (Gaolan), ரவட் (Rawat),கஹ்ர (Gahra), மகாகுல் (Mahakul) என்கின்றனர்.

கோளகர் Golkars தெலுங்கிலிருந்து மருவிய கொல்லர் (Gollars) என்கின்ற வார்த்தையாகும். (The Golkars of Chanda may be derived from the Telugu Gollars or graziers)

அஹீர் எனும் இனத்தவரான கோழி இனத்தவரே நேபாளின் அரசராக இருந்துவருகின்றனர்.

அஹிரின் துணை சாதிகளாக அஹீர் சுனார்,சூத்திர,லஹர்ஸ்,சிம்பி,செயில், குரோ மற்றும் கோழி. ( In many castes there is a separate division of AhIrs, such as the Ahir Sunars, Sutars, Lohars, Shimpis, Sails, Guraos and Kolis)

கடவுளின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தது அஹீர் இனமே, மேலும் யாதவ அரசனான இவர் பாண்டவர்களின் உறவினரும் ஆவார், மேலும் அஹீர் இனத்தின் ஒரு துணை பிரிவினரே கௌரவர்கள் (Gowara) மேலும் கென்ட் கவரா Gond- Gowaris அழைக்கபடுவர். (In Chanda the Gowaris are admittedly descended from the unions of Gonds and Ahirs, and one of their subcastes, the Gond- Gowaris)[4]

இவர்கள் நாயக்கர்,நாயுடு,ராயர்,ராயுடு மற்றும் ராவ் பட்டங்களை பயன்படுத்துகின்றனர். இச்சமூக மக்கள் வடதமிழகத்தில் திருவள்ளூர்,சென்னை,வேலூர்,திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி,தருமபுரி,கடலூர்,சேலம், திருச்சி ஆகியவற்றிலும் கொங்குநாட்டுபகுதிகளான கோயம்புத்தூர்,திருப்பூர்,ஈரோடு,நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களிலும், தென்மாவட்டங்களில் பெருபான்மையாக மதுரை,தேனி,விருதுநகர்,திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும்,டெல்டா மாவட்டங்களான திருச்சி,தஞ்சாவூர்,புதுக்கோட்டை,நாகப்பட்டினம்,காரைக்கால் மாவட்டங்களில் வசித்து வருகின்றனர்.இதில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் அதிகமாக வசித்து வருகின்றனர்

வரலாறு

கவரா சமூகமக்கள் அனைவரும் பலிஜாவின் ஒரு பிரிவினரே. இவர்களை வடதமிழகத்தில் பலிஜா என்றும், தென்தமிழகத்தில் கவரா என்றும் அழைக்கின்றனர். கவரா சமூகமக்களின் வர்ணம் சத்திரியர்கள் மற்றும் மக்களை காப்பதே குலத்தொழிலாக கொண்ட மக்கள்.[1]

கவரகுலத்தோர் (அ) கௌரவகுலத்தோர் மக்கள் மஹாபாரதத்தில் பாண்டவர்கள் & கௌரவர்கள் பிறந்த குரு வம்ஷத்தின் இன்றைய நீட்சியே. கவரகுலத்தோர் மக்களின் பெரும்பாலும் குலதெய்வமாக வணங்குவது போரில் வீரமரணம் தழுவியவர்கள் மற்றும் அக்னிசார்ந்த பெண்தெய்வங்கள் எ.கா :- தீப்பாய்ச்சம்மன்,திரெளபதிஅம்மன்.


மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Thurston, Edgar; Rangachari, K. (1909). Castes and Tribes of Southern India. V (M to P). Madras: Government Press. பக். 138. http://www.archive.org/details/castestribesofso05thuriala. பார்த்த நாள்: 2012-03-24. 
  2. The Tribes and Castes of the Central Provinces of India. III. London: Macmillan and Co., Limited St. Martin’s Street, London. 1916. பக். 215. http://www.archive.org/stream/tribescastesofce03russ/tribescastesofce03russ_djvu.txt. பார்த்த நாள்: 2012-10-31. 
  3. "CASTES". Maharastra: Govt. of Maharastra (2012). பார்த்த நாள் 2012-11-09.
  4. The Tribes and Castes of the Central Provinces of India. II. London: Macmillan and Co., Limited St. Martin’s Street, London. 1916. பக். 15-25. http://www.archive.org/stream/tribescastesofce02russ/tribescastesofce02russ_djvu.txt. பார்த்த நாள்: 2012-10-31. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவரா&oldid=3032891" இருந்து மீள்விக்கப்பட்டது